Tuesday, February 18, 2014

ஆபிரகாமின் காலம் என்ன?

இயேசுவின் முன்னோர் என மத்தேயு 1:1-14 என்பதில் ஆபிரகாமிலிருந்து தொடங்குவதில், ஏசு 41வது தலைமுறை (KJVபடி 40, RSVபடி 41)
மத்தேயுபடி ஒரு தலைமுறை 25 வருடம் எனில் ஆபிரகாம்  பொ.மு11 வது நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் லூக்கா சுவிசேஷம் 3:22ல் ஆபிரகாமிலிருந்து தொடங்கி 57வது தலைமுறை ஏசு என்கிறது. லூக்கா கணக்கின்படி ஆபிரகாம் பொ.மு 16ம் நூற்றாண்டாகும்.

இன்னொரு கதை -ஆதியாகமம்: 12:10 - 20
கர்ட்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.

http://isakoran.blogspot.in/2012/07/blog-post_09.html

பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை  ஆதியாகமம்20:1-11
 

இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.

ஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவ்ம் இதே பிலிஸ்திய கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6

   
ராஜா அபிமெலேக்கு என்பது பிலிஸ்தியப் பெயர். 8ஆம் நூற்றாண்டிற்குப் பின் வந்தவர்கள்.

இன்னுமொரு கதை ஆபிரகாம் கதையில் -
ஆதியாகமம்24:63 மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது ஆபிரகாம்  கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார்.64 ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தைவிட்டு இறங்கினார்.


ஒட்டகங்கள் ஒரு பழக்கப்பட்ட மிருகமாக மாற்றப்பட்டது, பொ.மு 10நூற்றாண்டு வாக்கில், பரவலாக பயன்பாட்டில் வந்தது மேலும் சில நூற்றாண்டிற்குப் பின். ஆனால் பொ,மு.2000 வாக்கிலான ஆபிரகாம் ஒட்டகம் பயன்படுத்தியதாகக் கதை

http://www.npr.org/2014/02/14/276782474/the-genesis-of-camels

 28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.

Chaldeans -கல்தேயர் -இப்பெயர்களே  பொ.மு. 1000- 600 இடையிலே தான்.
http://en.wikipedia.org/wiki/Chaldea

ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது -இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள்,  மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்
Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."

இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300௨00 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.
ஆய்வு நூல்-R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”:
  
ஆதியாகமம்15:18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார். 
இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.

இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8

 பைபிள் பழைய - புதிய ஏற்பாடு எல்லாமே கட்டுக்கதை

2 comments:

  1. http://ivaryaar.blogspot.in/2013/06/blog-post.html

    ReplyDelete
  2. 80, 90 வயது தூரம் நின்ற கிழவியை ராஜா சைட் அடிப்பதும் கர்த்தர் தடுப்பதும்- பைபிள் கதைகள் மேலே நிச்சயம் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது.

    ReplyDelete