Saturday, March 1, 2014

இயேசுவின் சாவு சிலுவையில் இல்லையே

இயேசுவின் சாவு

சட்டமுறைப்படி பார்த்தால், இயேசுவைக் கொலைத் தண்டனைக்கு உள்ளாக்கியதற்கு இறுதிப் பொறுப்பு பொந்தியு பிலாத்துவையே சேரும். பிலாத்துவின் ஆட்சிக் காலத்தில் யூதர்கள் யாருக்கும் கொலைத் தண்டனை விதிக்கும் அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது (காண் யோவான் 18:31). அப்படியே அவர்களுக்கு அந்த அதிகாரம் இருந்தது என்றே வைத்துக்கொண்டாலும், கடவுளைப் பழித்துரைத்தோருக்கு அளிக்கப்பட்ட தண்டனை சிலுவை மரணமன்று, மாறாக, கல்லால் எறிந்து கொல்வதுதான்(காண் மாற்கு 14:64; லேவியர் 24:16).
குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறையைக் கடைப்பிடித்தவர்கள் ரோமன் தான். அரசுக்கு எதிராகக் ஆயுதக் கிளர்ச்சி செய்தவர்களுக்கும், அடிமைகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனைதான் சிலுவை மரணம். இந்தத் தண்டனை முறையைக் கையாண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. கொடூரமான இத்தண்டனையைப் பிறருக்குப் பாடம் படிப்பிக்கும் கருவியாகவும் அவர்கள் பயன்படுத்தினர்.
  
 நமக்குத் தரும் பைபிளில் சிலுவை எனப் மொழி பெயர்க்கப்படுகிறது.ஆனால் அது உண்மை இல்லை

http://en.wikipedia.org/wiki/Crucifixion
Ancient Greek has two verbs for crucify: ana-stauro (ἀνασταυρόω), from stauros, "stake", and apo-tumpanizo (ἀποτυμπανίζω) "crucify on a plank," [3] together with anaskolopizo (ἀνασκολοπίζω "impale"). In earlier pre-Roman Greek texts anastauro usually means "impale."[4][5][6]

The Greek and Latin words corresponding to "crucifixion" applied to many different forms of painful execution, from impaling on a stake to affixing to a tree, to an upright pole (a crux simplex) or to a combination of an upright (in Latin, stipes) and a crossbeam (in Latin,patibulum).[13]

இந்த விளக்கம் கூட சரியில்லை. அது அடிப்படையில் நிருபிக்கப்பட்ட குற்றவாளியை நிர்வாணமாக உயரமான இடத்க்டில் தொங்கவிடுதலே ஆகும், இதற்காக உயரமான சாரம் தான் கட்டி அதில் தான் தொங்கவிடுவர். தூக்குமரம் அல்லது கழுமரம் என்பதே சர்யான வார்த்தை. அப்படி உயரமான சாரத்தில் தொங்கவிடப்படும் குற்றவாளிகள் மரணமடையா 5-6 நாட்கள் கூட ஆகும், நிர்வாணமாக தொங்குதலின் அவருக்கும் குடும்பத்தாருக்கும் அவமானம், பசி- பருந்து போன்ற மிருகம் தொல்லையில் பல நாள் அலறி பார்ப்போர் யாரும் குற்றம் செய்ய பயப்படவைக்கும் கொடுரமான தண்டனை. குற்றவாளி இறந்து அவர் கழுத்து எலும்பு முறிந்து புரழ வேண்டும்- இதனாலே   அவ்விடம் கொல்கொதா -மண்டை ஓடு புரளுமிடம் எனப்பெயர்.


இயேசுவைச் சிலுவையில் அறைதல்
(மத் 27:32 - 44; லூக் 23:26 - 43; யோவா 19:17 - 27)
மாற்கு15:21 அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.22 அவர்கள் ' மண்டைஓட்டு இடம் ' எனப்பொருள்படும் ' கொல்கொதா ' வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்;
ஏசு மரணம் பற்றி  சுவிசேஷக் கதாசிரியர்கள் மாற்றி புனைவது காணலாம்.
யோவான்19:17 இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு ' மண்டை ஓட்டு இடம் ' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.18 அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ' ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ' யூதரின் அரசன் நான் ' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ' நான் எழுதியது எழுதியதே ' என்றான்.
 அதே போல ஏசுவைக் கைது செய்தது யார்.
இங்கே யூதர்கள் மட்டுமே
 மாற்கு14:43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் பாதிரிகள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. 7 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.48 இயேசு அவர்களைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்?49 நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! 
இங்கே யூதர்கள்  ரோமன் இருவருமே
யோவான்18:3 படைப் பிரிவினரையும் தலைமைக் பாதிரிகளும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் பாதிரி இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
21 ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே ' என்றார்.22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ' தலைமைக் பாதிரிக்கு இப்படியா பதில் கூறுகிறாய்? ' என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், ' நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? ' என்று கேட்டார்.24 அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.
ஆயிரம் படை வீரர் தலைவர்- படைவீரம் எல்லாமெ ரோமன் படை தான், இவர்கள் விசாரணைக்கு யூத்ப்பாதிகளிடம் செல்ல மாட்டார்கள்.

ஒரு கன்னத்தில் கன்னத்தில் அறை வாங்கிய ஏசு இன்னொரு கன்னத்தைக் காட்டவில்லை, புலம்புகிறார்.
குறள் 664:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்.-  ஏசு தான் சாதரணமான மனிதன் எனத் தெளிவாக காட்டினார்.

ஏசு மரணம் பஸ்கா பண்டிகைக்கு முந்தைய நாள்
யோவான்18:28 அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.  29 எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, ' நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன? ' என்று கேட்டார்.

ஏசு  ஏசு  கடைசி இறவு விருந்து பஸ்கா பண்டிகை அன்று- மரணம் அடுத்த நாள்
மாற்கு14:12 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.
சிலுவை மரணம் ஒரு சில மணிநேரத்தில் வராது, இதையும் சுவியே உறுதி செய்கிறது.
மாற்கு15:42 இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால்,43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். 44 ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ' அவன் இதற்குள் இறந்து விட்டானா? ' என்று கேட்டான்.45 நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.46 யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.


முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த  யூத வரலாற்றாசிர்யர்  ஜோசபஸ்- தூக்கு மரத்தில் 3 நாள் தொங்கிய மூவரைக் காப்பாற்ற ரோமன் கவர்னரிடம் அனுமதி பெற்று, கீழ் இற்க்கிட ஒருவரைக் காப்பற்றிடவும் செய்தார்.  (இங்கே)   பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் பலர் குட்ப்ரை டே அன்று சிலுவை ஏறி - ஈஸ்டர் அன்று கீழே இறங்குதலை செய்வது வழக்கம். (இங்கே) 
crucifixion.jpeg

சிலுவையில் ஏசு இருந்தது எத்தனை மணிநேரம்


மாற்கு15:5 அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.
    25. அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.
34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? 'என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? 'என்பது அதற்குப் பொருள். 
    33. ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.

    34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.


யோவான்19: 214 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், ' இதோ, உங்கள் அரசன்! ' என்றான்.
    14. அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
யோவன் சுவியின்படி மதியம் 12 மணிக்கு தூக்குமரத்திலிடப்பட்டார்.  3 மணிக்கு இறந்தார்.
மாற்குபடி காலை 9 மணிக்கு  தூக்குமரத்திலிடப்பட்டார்.  3 மணிக்கு இறந்தார்.


மாற்குபடி தூக்குமரத்தில் இருந்தது .
யோவான் படி  6 மணி நேரம். 

ஒரு சில மணி நேரம் மட்டுமே சிலுவையில் ஏசு இருந்திருந்தால், மரணத்தை விட மயக்கம் ஆகி இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஆனால் சுவிசேஷக் கதாசிரியர்- கைது செய்தது யார்? பஸ்காவிற்கு மறுநாளா - முதல் நாளா என்பதில் குழம்பியர்கள் யாரும் நேரடி சாட்சி இல்லை

 எனவே  அனைத்தும் கதையே தவிர நம்பிக்கக்கு உரியதாக இல்லை


4 comments:

  1. இந்தக் கட்டுரைய் முதல் நோக்கில் சரியா உள்ளது போல உள்ளதே

    http://ivaryaar.blogspot.in/2013/02/blog-post_16.html

    ReplyDelete
  2. //ஒரு சில மணி நேரம் மட்டுமே சிலுவையில் ஏசு இருந்திருந்தால், மரணத்தை விட மயக்கம் ஆகி இருக்கவே வாய்ப்பு அதிகம்.// நியாயமான கருத்து!

    ReplyDelete
  3. http://paralogapathi.blogspot.in/2011/08/blog-post_17.html

    ReplyDelete
  4. ஜெருசலேமில் யாருக்கும் தெரியவில்லை. பின் கனவில் வழிகாட்ட இன்று ஹோலி செபல்சர் சர்ச் என்னும் தூய கல்லறை சர்ச் இன்று உள்ள இடத்தில் கட்டப்பட்டது. ஆனால் பைபிளியல் மற்றும் புதை பொருள் அகழ்வாராய்ச்சி அறிஞர்கள் இன்றுள்ள இடம் உண்மையான கல்லறை அல்ல, சற்று தள்ளி உள்ள தோட்ட கல்வாரி என்னும் இடமே உண்மையான கல்லறையாக கருதுகின்றனர்.

    எங்கே புதைத்தனர்- உயிர்த்து எழுந்த இடம் என்பது ஜெருசலேமில் மதிக்கப்படவில்லை, ஏன் எனில் உண்மை இவை வெற்று கதை எனத் தெரியும்.

    மேலும் கல்லறை எனில் பாறையில் வெட்டிய சிறு குழிவு என ஆகும். ஆனால் சுவிகள் பல பெண்கள் ஒன்றோ மேலும் அதிகமான தேவதூதர்- வெள்ளடை இளைஞர்களை கல்லறைக்குள் சென்றதாகக் கதை. சுவிசேஷத்தை நம்பினால் கல்லறை ஒரு ஓட்டல் அறை போல ஆகும்.

    ReplyDelete