Tuesday, May 27, 2014

கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு எல்லை தேவன்

பைபிள் பழைய ஏற்பாட்டின் அடிப்படை, கல்தேயர் நாட்டை சேர்ந்த ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து கானான் எனும் இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை அவர் வாரிசுகளுக்கு என்பதே.

ஆதியாகமம் 15:18  ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

உபாகமம் 20: 16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். 


ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எல்லை தெய்வம் இஸ்ரேலிற்கு யாவே எனப்படும் கர்த்தர், இது  தான் பழைய ஏற்பாட்டின் அடிப்படை. 

நியாயாதிபதிகள் 11:24  காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

1இராஜாக்கள11:3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி சாலொமோனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர்
சாலொமோன் காமோஸ் என்னும் தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு தேவாலயத்தைக் கட்டினான். இது மோவாபியரின் தேவனின்  விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் தேவாலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் தேவனின் தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.

அந்த கர்த்தரே ஒரு வசத்தில் அவர் பலம் சிரியாவும் தனதே என்பதாக ஒரு வசனம்.

செக்கரியா9:1ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது: அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்: ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.2. அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம். 3.தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது: தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.

 உலகைப் படைத்த கடவுள் ஒரு நாட்டிற்கு வேறொரு நாட்டினரை அனுப்பி மண்ணின் மைந்தரை கொலை செய்ய உதவினார், என்பது ஒரு அருவருப்பான கடவுள் விரோதக் கொள்கை , இது வெறும் அரசியல் சூழ்ச்சி.,

ஆபிரகாம் காலம் பொ.மு.2100 எனில், மோசே காலம் பொ.மு.1500 எனில், பழைய ஏற்பாட்டின் முக்கிய கதைகள், புனையப்பட்டது, பொ.மு.400 - 250 (இங்கே) எனில் கதை சம்பவங்களுக்கு 1600 - 1000 வருடம் பின்பு, அதிலும், சிறு தெய்வம் கர்த்தர் சொன்னார், அரசியல் ஆட்சி உரிமை- கொலைகள் என்பவை அனைத்தும் ஒரு அரசியல் சூழ்ச்சிகளே தவிர, இதில் தெய்வக் கோட்பாடுகள் கிடையாது.

மேலும் பைபிள் கடவுள் மனித குல எதிரி, மனிதன் மற்ற மிருகங்கள் போலே நிர்வாணமாக அறிவின்றி திரியப் படைக்கப்பட்டான், சாத்தான் உதவ கதைப்படி பகுத்து அறியும் அறிவைப் பெற்றான், உடனே பைபிள் கடவுள் மனிதனை விரட்டினார், பின் நோவா கதையில் மனிதர்கள் ஒற்றுமையாய் ஒரு மொழி பேசு பல மாடி கோபுரம் கட்ட கடவுள் பயந்து குழப்பி பல மொழிகளை உருவாக்கி, பிரிவினை மூட்டி ஒற்றுமையைக் கெடுத்தாரம். ( இதோ , இங்கே)

 பைபிளில் கடவுள் முதல் மனிதன் படைத்தலில் இருந்து இன்று வரை முழுமையாக பதிவிட்டுள்ளதாம், இதனை ஒன்று இணைத்தால் உலகம் படைக்கப்பட்டது, 6000 (இங்கே) வருடம் முன்பு என ஆகும். பூமியை சூரியன் சுற்றுவதாக பைபிள் வசனம். 

//"Many Laws in the Pentateuch or Torah, the first five books were not different from those of the surrounding nations.// - Page - 238, vol 3, Grolier's Encyclopedia

அறிவியல் ஆய்வுகள் இவற்றை தவறு என்ற போது, விஞ்ஞானிகள் துன்புறுத்தப்பட்டனர், ஜெயிலில் போடப்பட்டனர். வியாதிகள் கடவுள் தருபவை, தடுப்பு மருந்துகள் கர்த்தருக்கு விரோதமானவை என பல்வேறு சர்ச்சுகள் பெரும் அமர்க்களம் செய்தது. சில வழக்குகளின் இணைப்பு.
http://en.wikipedia.org/wiki/Galileo_Galilei
http://en.wikipedia.org/wiki/Scopes_Trial
http://en.wikipedia.org/wiki/1860_Oxford_evolution_debate

//The idea of universal Deity does not exist for most part of the Biblical period and every region inluding Yahwwhism atleast implicitly acknoleged the existence of other Gods, (who however tends to be impotent outsie the boundaries of their realms). Under these circumstances it is inevitable that a covenant of Isarel entered with Yahweh would focus on possession of the Land the "Promissed Land" and that this possession would ratify the exclusiveness of the relationship with their Deity in a material way. The Biblical Picture of a Promissed Land is a strongly idealised  one( for eg. in the allocation of an area in Palestine to the different tribes, or the fixation upon "Mount Zion"    a place that owe more to the imagination of the Prophets than to the Topography of Jerusalem. // Page-91 & 92. The Bible as Literature
A History book designed witha specifically religious puurpose. Its elements were chosen and arranged and given emphasis to prove a Point, namely when the People of Israel where Faithful to their Deity and observed his statutes, they Prosphered, but when they gave their alligence to Alien Gods they suffered at the Hands of their Enemies. A Prediction to this effect was put in to the mouth of Moses at the end of Deutronomy. // Page 67 The Bible As Literature.
யேசுவும் பழைய ஏற்பாடும் 

மத்தேயு 5: 17 ,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன்.   18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.


நியாயப் பிரமாணச் சட்டங்களை முழுமையாய் தொகுத்து ஆராய்ந்த பாதிரியார் கதை.
விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.


No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.
Page-266 The Religious World.

 நாம் மிகத் தெளிவாக உணர்வது, இன்று நடுநிலை பைபிளியலாளர் நேர்மையான வரலாற்றாசிரியர் கூறுவது, பாரசீகத்திலிருந்து திரும்பி வந்த பின்னரான அடுத்த 200 - 300 ஆண்டுகளில், மக்களை அரசியல் ஒற்றுமைப் படுத்த புனையப்பட்ட்டதே பழைய ஏற்பாடு. இதன் அடிப்படையில் தீர்க்கர், மேசியா எல்லாமே அந்த மூட நம்பிக்கையின் தொடர்ச்சியே.

No comments:

Post a Comment