Thursday, August 7, 2014

சுவிசேஷங்களில் தப்பும் தவறுமாக பழைய ஏற்பாடு வசனங்கள்

எகிப்திலிருந்து திரும்பி வருதல்
எகிப்திலிருந்து திரும்பி வருதல்

மத்தேயு2:19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது

கலிலேயாவையும் நாசரேத்தையும் ஆட்சி செய்தது ஏரோது மகன் தான். காரணமும் பொய்.
நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.-இப்படி ஒரு வசனம் பழைய ஏற்பாட்டில் கிடையாது. 
நாசரேத் எனும் ஊர் ஏசுவின் முதல் நூற்றாண்டில் இருக்கவில்லை என புதைபொருள் அகழ்வாய்வு கூறுகிறது.
இயேசு கதையில் ஒரு சம்பவம்
ஓய்வு நாளில் கதிர் கொய்தல்-(மத் 12:1 - 8; லூக் 6:1 - 5)
 
மாற்கு2:23 ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.24 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ' பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ' என்று கேட்டனர்.25 அதற்கு அவர் அவர்களிடம், ' தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?26 அபியத்தார் தலைமைக்    பாதிரியாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, பாதிரியை தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? ' என்றார்.
ஆனால் தாவீது கதியில் இந்த சம்பவத்தில் உள்ள தலைமைப் பாதிரி வேறு
சவுலிடமிருந்து தாவீது தப்பித்தல்
1சாமுவேல்21:1 பின்பு தாவீது நோபில் இருந்த தலைமைப் பாதிரி அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலங்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையே? என்றார்.2 அதற்கு தாவீது தலைமைப் பாதிரி அமெலக்கிடம் அரசர் எனக்கு ஒரு பணியைக்கட்டளையிட்டுள்ளார். நான் உனக்கு அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளையiயும் ஒருவரும் அறியக்கூடாது என்று அரசர் கட்டளையிட்டுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோற்றியுள்ளார். எனவே ஒரு குறிப்பி3உண்பதற்கு இப்பொழுது உன்னிடம் என்ன இருக்கிறது.? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும் என்றார்.4 தலைமைப் பாதிரி தாவீதை நோக்கி, தூய அப்பம் உன்னிடம் உள்ளது: சாதரணமாக அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம், என்றார்.5 தாவீது தலைமைப் பாதிரியை   நோக்கி, சாதாரண பயணத்தின் போதே இந்த இளைஞர்கள் உறவுக் கொள்ளவில்லை:இன்றோ சிறப்புப் பணியை மேற்கொள்வதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மைக் காத்துள்ளார் என்றனர்.6 ஆதலால் தலைமைப் பாதிரி அவருக்கு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்: ஏனெனில் ஆண்டவனின் திரு முன்னிலையில் அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அங்கு சூடான அப்பம் அங்கு வைக்கப்படும்.
ஆனால் பழைய ஏற்பாட்டை (இங்கே)ஏசு தப்பாகச் சொன்னாரா? (இங்கே)மாற்கு தவறாகச் சொன்னரா?
யூதாசின் தற்கொலை
மத்தேயு27:3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,4 ' பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள்.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி,7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.8 இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது.9 ' இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.
எரேமியாவில்  இப்படி ஒரு வசனம் பழைய ஏற்பாட்டில் கிடையாது.
                                             இயேசு பிறப்புக் கதைகளில்
மத்தேயு1:19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 22 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 

7:14 יד לָכֵן יִתֵּן אֲדֹנָי הוּא, לָכֶם--אוֹת: הִנֵּה הָעַלְמָה, הָרָה וְיֹלֶדֶת בֵּן, וְקָרָאת שְׁמוֹ, עִמָּנוּ אֵל.
therefore the Lord himself shall give you a sign: a Young Girl is with child and she will bear a son, and will call his name Immanuel.
மூல எபிரேய மொழியில் கன்னி என்பதே கிடையாது, இளம்பெண் எனவே  உள்ளது. 

பழைய ஏற்பாட்டை தப்பாகச் சொன்னாரா? பரிசுத்த ஆவி வந்து சுவிசேஷம் எழுதப்படவில்லையா?

No comments:

Post a Comment