Friday, June 5, 2015

அப்போஸ்தலர் யாக்கோபு யார்? தெரியாது

  
ஏசு சீடர்களில் ஒருவர் யாக்கோபு எனப் படுபவர், இவர் ஏசுவின் சொந்த தம்பி எனவும் கதைக்கபடுகிறது.
OXFORD Dictionary of Saints -1978 - JAMES THE LESS: The sons of Alphaues is often but not certainly, identified with the James whose mother stood by Christ on the cross and also with James, the brother of the Lord, who saw the risen Christ and is often called the first Bishop of Jerusalem, He is also sometimes identified with Author of the Epistle of the St.James. If Non of this identification is correct, we know Practically nothing about James the Less.// Page - 208.
கலாத்திய1:19 ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.
கலாத்திய2:12அதாவது யாக்கோபின் ஆள்கள் சிலர் வருமுன் கேபா பிற இனத்தாருடன் உண்டு வந்தார்: ஆனால் யாக்கோபின் ஆள்கள் வந்தபின் அவர்களுக்கு அஞ்சி அவ்வாறு உண்பதை விட்டுவிட்டார்.
1கொரிந்திய9:5 மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?
யோவான்7:3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, ' நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே! ' என்றனர்.5ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
இவ்வசனம்படி ஏசுவினை உடன் பிறந்த தம்பிகள் ஏற்கவில்லை.
யாக்கோபு பெயரில் உள்ள கடிதம் பொ.கா.150 வரை உள்ள விஷயம் சொல்கிறது, என்கிறது கிறிஸ்துவ ஆக்ஸ்போர்ட் கலைக்களஞ்சியம்
இவரைப் பற்றி சொல்வது எல்லாமே ஆதாரமில்லா நம்பிக்கை- செவிவழிக் கதைகள் என பரப்பப் பட்டவையே. சரி யாக்கோபு பெயரில் உள்ள கடிதம் பற்றி பைபிளியல் அறின்ஞர் கூறுவது காண்போமா? Oxford Dictionary of Christian Church : Even if the Epistle is not the work of St.James, it seems likely that it was composed by A.D.95, At any rate it is not later than A.D.150. // Page 712.
இவர் தான் 30 வருடம் ஜெருசலேம் சர்ச் தலைமை தாங்கியவர் எனப்படுகிறது. இவர் பற்றிய வரலாற்று செய்திகள் கூட சர்ச்சிடம் இல்லை.
முழு பைபிளும் புனையப்பட்ட கட்டுக் கதை தானே

No comments:

Post a Comment