Saturday, August 15, 2015

ஏழை பட்டியல் இன இட ஒதுக்கிட்டை திருட கிறிஸ்துவம் செய்யும் தலித் கிறிஸ்துவர் மோசடிகள்-1

கிறிஸ்தவ மதம் மாறிய பிறகு, இந்துக்களுக்குள்ள இட  துக்கீட்டை கிறிஸ்தவர்கள் கேட்பது ஏன் –எல்லா விதங்களிலும் தவறு    என்ற பிறகும்  ஆர்பாட்டம் செய்வது ஏன் (1)?
 -வேதம் வேதபிரகாஷ்:

Dalit Christians protest at Kalavasal in Madurai on 10-08-2015 Photo- G. Moorthy
Dalit Christians protest at Kalavasal in Madurai on 10-08-2015 Photo- G. Moorthy
 தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கவலியுறுத்தி போராட்டம்  (ஆகஸ்ட்.2015)     தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர் மறைமாவட்ட எஸ்.சி, எஸ்.டி, பணிக்குழு சார்பில் 10-08-2015 அன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது[1]. மதுரை காளவாசலில் நடந்த போராட்டத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் அந்தோணி பாப்புசாமி, மதுரை-ராமநாதபுரம் ஆகியோர் தலைமை வகித்தனர். முதன்மைக்குரு ஜெயராஜ் மற்றும் மறை வட்ட அதிபர்கள் மற்றும் பேராயர்கள் முன்னிலை வகித்தனர்.  கத்தோலிக்க முன்னாள் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வம், தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை நிர்வாகி சந்திரபோஸ், ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் உட்பட பல்வேறு கட்சி மற்றும்இயக்க தலைவர்கள் பேசினர்[2].  இந்துக்கள், சீக்கியர் மற்றும் பௌத்தர்களுக்கு எஸ்.சி இடவொதிக்கீடு கொடுத்தது போல கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையிட்டுள்ளனர்[3].  “தலித்” என்ற வார்த்தை அரசியல் நிர்ணயச் சட்டத்திலி இல்லை என்பதனால், அத்தகைய வார்த்தையை உபயோகிக்க வேண்டாம் என்று, தேசிய எஸ்.சி ஆணையம் ஜனவரி 2008ல் ஒரு சுற்றறிக்கையை எல்லா மாநில அரசுகளுக்கும் அனுப்பியது[4]. இருப்பினும் இத்தகைய அமைப்புகள் கண்டுகொள்ளாமல் உபயோகப்படுத்தி வருகின்றன[5].
சிவகாமி கிறிஸ்தவர் இடவொதிக்கீடு - 2015
சிவகாமி கிறிஸ்தவர் இடவொதிக்கீடு – 2015
சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி பேசியதாவது[6]: ௨௦௦0௧ளில் நான் தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக இருந்தபோது, எனக்கு ஒரு கோப்பு வந்தது. அதில் தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது உச்ச நீதிமன்றம் வரையறுத்த ௩ வகையான தீர்ப்புகளின் அடிப்படையில் என்று சொல்லப்பட்டிருந்தது.  இதில் தமிழக அரசு ஒரே ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக் கொண்டு, அதனடிப்படையில் தான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. சம்பந்தப்பட்ட நபர் இந்துவாக மாறினால் போதாது. அவருடைய தாய், தந்தையரும் இந்துவாக இருக்க வேண்டும் என்பது கோர்ட் அளித்த தீர்ப்பு. கிறிஸ்தவத்தில் மேல் தட்டில் இருப்பவர்கள் மறைமுகமாக இப்போதுள்ள ஆட்சிக்கு ஜாதி அடிப்படையில் உதவிகரமாக இருப்பதால் தான் கிறிஸ்தவர்கள் என்ற முறையிலோ, தலித் கிறிஸ்தவர்கள் என்ற முறையிலோ சாதிக்க முடியவில்லை. இட ஒதுக்கீடு சலுகையை மதத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும், என்றார்[7]. இந்துக்களுக்குள்ள இடவொதிக்கீடு இந்துக்களுக்குத்கான் என்று சொல்லியதைத் திரித்துக் கூறுகிறார்.
SC order 1950, para.3 opposed
SC order 1950, para.3 opposed
குடியரசுத் தலைவர் ஆணை 1950 பத்தி-3 உடனே நீக்கம்செய்ய வேண்டும்: சிவகங்கையில் தலித் கிறிஸ்தவர்கள் கருப்புக் கொடி ஏந்தி 10-08-2015 திங்கள்கிழமை 0-08-2015 அன்று ஊர்வலம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்[8]. தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு, சிவகங்கை மறை மாவட்ட தலித் பணிக்குழு செயலர் அருள்தந்தை அமல்ராஜ் தலைமை வகித்தார். ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததும் ஆட்சியர் ச.மலர்விழியிடம் அவர்கள் மனு அளித்தனர்.  அதில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவர் ஆணை 1950 பத்தி -3ஐ உடனே நீக்கம் செய்ய வேண்டும். நீதியரசர் ரெங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும். மாநில அரசு, தலித் கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்[9]. இதிலிருந்தே, அவர்கள் எவ்வளவு போலித்தனமாக கலாட்டா செய்கின்றனர் என்று தெரிகிறது. ஏனெனில், அப்பத்தியில் சீக்கியர்களுக்கு, பௌத்தர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது போல, எங்களூக்கும் கொடுங்கள் என்று மறுபக்கம் கேட்பது தான் அந்த மோசமான செயல்!
THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER, 1950
THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER, 1950
ரங்கராத் மிஸ்ரா குழுவின் அறிவிக்கையின் படி தலித்கிறிஸ்தவர் தலித் இஸ்லாமியருக்கான பரிந்துரையை உடனேஅமல்படுத்த ஆர்பாட்டம்: தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் திங்கள்கிழமை 10-08-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[10]. தஞ்சாவூர் எஸ்.சி. எஸ்.டி. பி.சி. பணிக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பணிக் குழுவின் செயலர் ஜெ. அமலதாஸ் ஜான் தலைமை வகித்தார். இதில் பணிக்குழுவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஆனந்தன், தஞ்சாவூர் மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரொனால்டு ரீகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் ரயிலடியில் தலித் கிறிஸ்தவர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நலச் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.வின்சென்ட் தலைமை வகித்தார். இதில் மதத்தின் பெயரால் தலித் மக்களை பிரிக்கக்கூடாது. நீதியரசர் ரங்கராத் மிஸ்ரா குழுவின் அறிவிக்கையின் படி தலித் கிறிஸ்தவர் தலித் இஸ்லாமியருக்கான பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Christian caste system as per Bible
Christian caste system as per Bible
கும்பகோணத்தில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில்சேர்க்க வலியுறுத்தி போராட்டம்: கும்பகோணம் மறை மாவட்ட தலித் நலப்பணிக் குழுவின் சார்பில் நடைபெற்ற பேரணி, ஆர்ப்பாட்டத்துக்கு மறை மாவட்ட முதன்மை குரு பாக்கியசாமி தலைமை வகித்தார்[11]. கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலயத்திலிருந்து தொடங்கிய பேரணி கும்பகோணம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
Dalit Christians -protesting at different places earlier
Dalit Christians -protesting at different places earlier
திருநெல்வேலியில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்[12]: இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கம், தலித் கிறிஸ்தவர் தேசிய பேரவை ஆகியவற்றின் சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் திங்கள்கிழமை 10-08-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகளைத் தட்டிப்பறிக்கும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைக்குழுவின் அறிக்கையின்படி தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தவர் அட்டவணையில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, யூபிலி மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். தலித் கிறிஸ்தவர் தேசிய பேரவையின் மாநில பொதுச்செயலர் ர.தனராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் கோபாலன், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் பணிக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செ.ஜார்ஜ் ராஜேந்திரன், செ.பு.மைக்கேல்ராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்[13].
© வேதபிரகாஷ்
12-08-2015

[1] தினகரன், எஸ்.சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தலித்கிறிஸ்தவர் உண்ணாவிரதம், பதிவு செய்த நேரம்:2015-08-11 10:45:11
[3] “On the lines of Dalit Hindus, Sikhs and Buddhists, who are recognised as Scheduled Castes, Dalit Christians should also be given the status,” the charter said.http://www.thehindu.com/news/cities/Madurai/dalit-christians-seek-sc-status/article7524782.ece
[4] “Dalit” word unconstitutional: Scheduled Castes Commission, PTI | January 18, 2008 | 15:36 IST, http://www.rediff. com/news/ 2008/jan/ 18sc.htm
[6] தினமலர், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி., பட்டியலில்இணைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் , ஆகஸ்ட்.10, 2015: 23.59.
[8] தினமணி, சிவகங்கையில் தலித் கிறிஸ்தவர்கள் ஊர்வலம், By சிவகங்கை
First Published : 11 August 2015 04:43 AM IST
[10] தினமணி, தஞ்சையில் தலித் கிறிஸ்தவர்கள் பேரணி,ஆர்ப்பாட்டம், By தஞ்சாவூர்
First Published : 11 August 2015 05:09 AM IST
[12] தினமணி, கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம், By திருநெல்வேலி First Published : 11 August 2015 06:49 AM IST.

No comments:

Post a Comment