Tuesday, December 29, 2015

Cmda on Regularising Irumbuliyur Pentacostal Mission church on Lake Bund built with out any Approval


If an Individual builds a Building without taking approval, or construct more than the approved area then the building must be sealed as today's clipping says as the owner constructed above the approval it was sealed.
In 2013 Paper cutting says a building of 6 Lakhs Sq.ft in 3 floors on Irumpuliyur Lake bund and local people object, it and on 28,12,2015 CMDA Has given them the option for Regularising.
First SEAL the building before putting the conditions.
This is a Paper Clipping from Dinamalar Chennai Edition 20.07.2013.
தேவாலய வரன்முறைக்கு எட்டு நிபந்தனைகள்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1420374


பதிவு செய்த நாள்

28டிச
2015 
00:30


தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், அனுமதி இன்றி கட்டப்பட்ட, தேவாலய கட்டடத்தை வரன்முறை செய்ய, எட்டு நிபந்தனைகள் விதித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

'நோட்டீஸ்' :தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், கிறிஸ்தவ மத பிரசார அமைப்பு இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், பிரம்மாண்டமான தேவாலயம் கட்டப்படுகிறது.இந்த கட்டுமான பணிக்கு, சி.எம்.டி.ஏ.,விடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சில ஆண்டுகளுக்கு முன், சி.எம்.டி.ஏ., 'நோட்டீஸ்' அனுப்பியது.

ஆனால், அதன்பின், எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை.
சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகம் சார்பில், கட்டடத்தை வரன்முறை செய்ய, தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு, மேல் முறையீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல்வேறு அரசுத்துறைகள் வரன்முறை செய்ய அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட தேவாலய கட்டடத்தை, நகரமைப்பு சட்டத்தின், 113வது பிரிவில் அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசு வரன்முறை செய்து உள்ளது.தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:

பத்து சதவீத நிலத்தை, திறந்தவெளி ஒதுக்கீடாக ஒப்படைக்க வேண்டும். அந்த நிலத்துக்கு பொதுமக்கள் நேரடியாக சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாத, பொதுப்பாதை அமைக்க வேண்டும்.

திட்ட அனுமதி:கட்டுமான பகுதி, விமானப் படை தளத்தை ஒட்டி உள்ளது. எனவே, விமானப் படையிடம் ஆட்சேபனை இல்லை என, சான்று பெற வேண்டும். இந்த வளாகத்தின் சுற்றுச்சுவர், நீர் வழியான கால்வாய் மேல் கட்டப்பட்டு உள்ளது. உடனடியாக அந்த கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும்.

அதற்கு திட்ட அனுமதி வழங்கும் முன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் இருந்து, புதிதாக ஒப்புதல் பெற்ற பிறகே, திட்ட அனுமதி அளிக்க வேண்டும்.

வளாகத்தில், தேவையான இடங்களில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, போதுமான பக்கவாட்டு இடைவெளி விடப்பட வேண்டும். திட்ட அனுமதி வழங்கும் முன், சம்பந்தப்பட்ட திட்டம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை வீட்டு வசதி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்து உள்ளார்
   

No comments:

Post a Comment