Thursday, March 17, 2016

Bishop Fr Gerald Majella ofChinmaya Nagar Infant Jesus threatens and Molests Lourdu Mary

”மதகுரு ஜோசப் என்னை மானபங்கப்படுத்தினார்”: லூர்து மேரி(வீடியோவுடன்)


http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/
”சகோதர, சகோதரிகளே! உங்களைப் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தியவர்களின் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மத குருமார்களாலேயே நீங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளீர்கள். உங்களை மற்ற மத போதகர்களும் காப்பாற்றத் தவறிவிட்டார்கள். உங்களின் மறுவாழ்வுக்கு நான் துணையிருப்பேன்”, என செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு சென்ற போப் பிரான்சிஸ், மதபோதகர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் மத்தியில் பேசினார்.
பல இடங்களில் கிறிஸ்தவ நிறுவனங்களில் இதுபோன்ற கறைகள் பதிந்துள்ளன. அப்படி ஓர் சம்பவம்தான் மறுபடியும் நிகழ்ந்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ளது சின்மயா நகர் குழந்தை இயேசு ஆலயம். அங்கு வசிப்பவர் லூர்து மேரி (52). அந்த ஆலயத்தின் தலைமை குரு, மரிய ஜோசப் ஜெரால்டு மதில்லா. லூர்து மேரியின் வீட்டிற்கு 2014-இல் சத்யா என்ற பெண் வாடகைக்கு வந்தார். அவரும் குழந்தை இயேசு ஆலயத்திற்கு தினமும் போவார். லூர்து மேரிக்கு சத்யாவிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் கொஞ்ச நாட்களிலேயே வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார், லூர்து மேரி.
லூர்து மேரியே பேசுகிறார், கேளுங்கள்:
“சத்யாவும் ஆலயத்தில் வேலை செய்யும் விமலா என்ற பெண்ணும் ரொம்ப நெருக்கம். இருவரும் சேர்ந்து இதுகுறித்து தலைமை குருவிடம் என்னைப்பற்றி இல்லாததையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் சின்மயா நகரில் கல்லறை கட்டாமல் திருவள்ளூரில் கல்லறை கட்ட முயற்சித்தார் ஜோசப். எப்படி சாதாரண மக்களால் அவ்வளவு தொலைவு பிணத்தைக் கொண்டு செல்ல முடியும்? என்றுதான் கூறினேன். இது எல்லாம் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அப்போதில் இருந்து ஜோசப்பிற்கும் லூர்து மேரிக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருநாள் ஆலயத்தின் அனைவரது முன்னிலையிலும் லூர்து மேரியை சேலையைப் பிடித்து அசிங்கப்படுத்தியதாக லூர்து மேரி சொல்கிறார். “எல்லோர் முன்னாடியும் என் தலைமுடியைப் பிடித்து இழுத்து சேலையை அவிழ்த்து அசிங்கப்படுத்தினார். அனைவரும் வேடிக்கைதான் பார்த்தனர். எல்லோரும் மத போதகருக்குத்தான் ஆதரவாக இருந்தனர்.”, என்று வேதனையுடன் கூறினார். மரிய ஜோசப் ஒரு ரோமன் கத்தோலிக்க மத போதகர். இவர்கள் திருமணம் அல்லது பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது. ஆனால், ஜோசப் தொடர்ந்து மாலா என்ற பெண்ணிடமும் தவறாக நடந்துக் கொண்டிருக்கிறார். விமலா மற்றும் சத்யா ஆகியோரும் ஜோசப்பிற்கு உடந்தையாக பல சம்பவங்களில் இருந்துள்ளனர். மத போதகர்கள் விரும்பித்தான் இந்தப் பணிகளுக்கு வருகின்றனர். ஆனால், அதற்குரிய விதிகளிக் கடைபிடிக்காமல் இருப்பதால் மற்ற மதபோதகர்களையும் சந்தேகக் கண்களுடனே மக்கள் பார்க்கிறர்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என்றாலும், விரும்பி இணங்காத பெண்களை வற்புறுத்துவது மிகப்பெரிய அவலம்.
இதுகுறித்து சென்னை தலைமைப் பேராயர், ஜார்ஜ் அந்தோனிசாமியிடம் முறையிட்டார். அவரும் விசாரிப்பதாக சொல்லி ஜோசப்பிற்கே அவரும் சாதகமாக மாறினார். ஜோசப்-ஜார்ஜ் அந்தோனிசாமி இவர்களுக்கிடையில் பணப்பரிமாற்றமும் நிகழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பின்பு, ஜோசப் ஆலயத்தின் முன்பு இறந்தவர்களின் புகைப்படம் ஒட்டும் இடத்தில் லூர்து மேரியின் புகைப்படத்தையும் ஒட்டி இனிமேல் லூர்து மேரி ஆலயத்திற்குள் வரக்கூடாது எனவும் கூறியிருக்கிறார். இதனால் இதுவரை ஆலயத்திற்குள் செல்லாமல் இருக்கிறார். இது அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றிக் கேள்வி கேட்டாலே, “நீங்கள் சொல்வது எதுவும் உண்மை கிடையாது. இதுபற்றி சொல்ல நான் தயாராக இல்லை. உங்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை”, என, மரிய ஜோசப் பதற்றமாக பேசிவிட்டு செல்போன் இணைப்பைத் துண்டித்து விட்டார். ஆலய செயலாளரும் இதுபற்றிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை என கூறினார். “லூர்து மேரியின் சொந்தப் பிரச்சனை பற்றி எங்களிடம் யாரும் பேசத் தேவையில்லை. உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை. எங்கள் ஆலயத்திற்குள் பதிவு செய்த கிறிஸ்தவர்கள் மட்டுமே வரவேண்டும். மற்ற மதத்தினர் யாரும் வரக்கூடாது”, என்று மிகவும் தேவையற்ற வார்த்தைகளில் பேசினார்.
இந்தப் பிரச்சனையால் லூர்து மேரியின் குடும்பத்திலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இனிமேலும், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு எடுக்க சென்னைப் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி முன்வராவிட்டால் இந்திய தலைமைப் பேராயர் மற்றும் போப் பிரன்சிஸிடம் கடிதம் வாயிலாக முறையிடப் போவதாக லூர்து மேரி கூறினார்.
கிறிஸ்தவ ஆலயங்களிலும், கிறிஸ்தவ கல்வி மற்றும் பல நிறுவனங்களிலும் மத குருமார்களே பெண்களை தவறாக நடத்துகிறார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. 2014-ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் 70 வயது கன்னியாஸ்திரி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும், சென்னை லயோலா கல்லூரியின் தமிழ் பேராசிரியர் ஜோஸ்பின் ஜெயசாந்தி என்பவர் தமிழ் துறைத் தலைவர் ராஜராஜன் மீது பாலியல் ரீதியாகத் தொல்லைக் கொடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
கிறிஸ்தவ மத போதகர்கள் இப்படிப்பட்ட தவறுகள் செய்யும்போது அவரை அந்த பதவியில் இருந்து நீக்க இன்னும் எந்த சட்டமும் வரவில்லை. வேண்டும் என்றால் இடமாற்றம் செய்யலாம். ஆலயத்திற்குள் உள்ள மற்ற மத போதகர்கள் மட்டும் கொண்ட ஒரு ஆணையம் அமைத்து இதுபோன்ற பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என கூறினார். ஆனால், மத போதகர்களே மற்ற போதகர்களைக் காப்பாற்றும் சம்பவங்கள்தான் நடந்திருக்கின்றன. அதனால், இதற்காக உறுதியான சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். இப்படி பிரச்சனைகள் ஏற்படும்போது பெண்களும் மற்றவர்களிடம் முறையிடுவதைத் தவிர்த்து காவல் துறையின் உதவியை அணுக வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் எல்லா மதங்களிலும் நடக்கின்றன. பெரும்பாலும் தங்கள் மதத்துக்கும், ஆலயங்களுக்கும் அவப்பெயரை உண்டாக்கக் கூடாது என வெளியில் தெரியாமல் இதை மறைத்து விடுகின்றனர். குறைந்தபட்சத் தண்டனையைக் கூட குற்றவாளிகள் அனுபவிப்பதில்லை என்பதுதான் சோகம். மதம் என்ற பெயராலும், மத போதகர் என்ற பெயராலும் இதுபோன்ற பாலியல் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. மக்களும் மத நிறுவனங்களும் இதுபற்றிய தெளிவைத் தங்களுக்குள்ளாகவே உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி