Wednesday, May 17, 2017

Institute of Asian studies - John Samuel in Scanadals

ஜான் சாமுவேல் ஆசியவியல் கழக ஊழல்-பல லட்சங்கள் கையாடல்

Posted: ஜூன் 27, 2010 in இந்தியா இயேசுஇயேசுகருணாநிதிகிறித்துவம் - கிறிஸ்துவம்,சிலுவைதிருக்குறள்தோமையார்பரிசுத்த ஆவி
7
ஜான் சாமுவேல் ஆசியவியல் கழகத்தின் (Institute of Asian studies) இயக்குனராக நியமிக்கப்பட்டபோது, பல லட்சங்கள் (இப்பொழுதைய மதிப்பு கோடிகள்) கையாடல் செய்த ஊழல் குற்றத்திற்காக, ஜஸ்டிஸ் கிருஷ்ணா ஐயர் – ஒரு மனிதர் விசாரணைக் குழு (One-Man enquiry Committee) ஏற்படுததப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது.
விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர்.
முன்பு, 2000ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில் பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது.
ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்க்ககத்தான்.
தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டான் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார்.-vedaprakash
ஜான் சாமுவேல் ஒரு கிருத்துவர்.
முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் ஒருவர் புகார் கொடுத்தார்.
வி.ஆர். கிருஷ்ணா ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி அவனது பணம் கையாடலை உறுதி செய்ததால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார்.
கொடுமுடி சண்முகம் என்பவர் அமர்த்தப் பட்டார். அதற்குள் இவர் தகராறு செய்து கைது செய்யப்பட்டார்.
அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்து பணம் பண்ணினார். பங்குகளை விற்க முயற்ச்சித்தார்.
மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. விஜி சந்தோஷம் மொரிஸியசில் பைபிள் விநியோகம் செய்தபோது, தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிறகுதான் அவரது நண்பர்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்தது. ஒரு ஈரோடு மருத்துவர் நொந்தேப் போய்விட்டார். அதற்குள் திடீரென்று தனது கிருத்துவ புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார்.  தெய்வநாயகம் போலவே இவனும் அந்த தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டார். நியூயார்க்கில் ஒரு மாநாடு, பிறகு சத்யபாமா காலேஜில் (ஜேப்பியார் உபயம்).
இப்பொழுது, இந்த செம்மொழி மாநாட்டில் அடக்கம்! 
இந்த கூட்டத்தைப் பாருங்களேன் – மணவை முஸ்தபா, அப்துல் ரஹ்மான், …………..இப்படி முஸ்லீம்கள், அன்னி தமசு (தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிக்கு உதவியவர், சவேசுவின் மனைவி என்று சொல்லப்படுகிறது), சாமுவேல்……….கிருத்துவர்கள், மற்ற நாத்திகர்கள்………………….//

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

இது ஒரு தனிநபரின் ஆய்வோ, அல்லது சிறு குழுவின் கருத்துக்களோ அல்ல. இதற்கு தமிழகத்தின் செல்வாக்குள்ள எல்லா கிறித்தவ சபைகளும் வெளிப்படையான ஆதரவை தெரிவித்திருக்கின்றன என்பதைக் கண்டோம். சென்ற பத்து வருடங்களில் இக்கருத்தை பிரச்சாரம்செய்யும் ஏராளமான ஆங்கில தமிழ் நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பலநூறு துண்டுப்பிரசுரங்கள் வெளியாகி கிறித்தவ ஆலயங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகக் கிறித்தவர்களில் உயர்கல்வி கற்றவர்கள் பழந்தமிழ் ஆய்வுசெய்தவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் இந்தக் கோட்பாட்டை ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை என்றே எண்ணுகிறார்கள். உதாரணமாக குமரிமாட்டத்தின் பிரபல அறிவுஜீவியும் நவின இலக்கிய வாசகருமான பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல் இக்கருத்தை ஒரு நூலில் வழிமொழிகிறார்! கிறித்தவப் பள்ளிகளில் இந்த வரலாற்றை அதிகாரபூர்வமற்ற வகையில் சொல்லியும் கொடுக்கிறார்கள்.
இந்த நூல்களை முழுக்க எனக்கு திரட்டி அளித்தவர் தக்கலையைச் சேர்ந்த லுத்தரன் சபையைச் சேர்ந்த கிறித்தவ ஊழியர் ஒருவர். நான் இவற்றைப் படித்தால் என்னுடைய வரலாற்றுப் பார்வையே மாறிவிடும் என்று சொன்னார். ஆனால் நான் படிக்க மாட்டேன் என்று சவால் விட்டார். படிப்பேன் என்று அவருக்கு உறுதி அளித்தேன். அவர் எனக்கு அளித்த பிற நூல்கள் இவை:
1. India is a Christian Nation- By. M.Sunder Yesuvadian [a] M.S.Mankad. [ Published by Anaryan Publications , Indian Anarya Samaj Trust, 16A, Chidambara Nathan Street, Ramavarma puram. Nagercoil 629001] இந்நூலுக்கும் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபை தலைவர்களும் முழுமையான ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள்.
2. Hindu Religion is the offshoot of St.ThomaS Dravidian Christianity- By Dr.Devakala [ Meypporul Publications 278, Konnur High Road,ayanapuram Chennai 600023]
3.Love Hindus. By M.Christopher MA LLB, Beniah Kallukatti, Kuzhithurai K K dist Tamilnadu 629163
4 தமிழர் சமயத்தை விடுவிக்கப்போவது யார்? பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எம் ஏ.பி எச் டி [மெய்ப்பொருள் அச்சகம், 278, கொன்னூர் கைரோடு, அயனாவரம் சென்னை 600023 ]
மற்றும் பத்து துண்டுபிரசுரங்கள். பெரும்பாலும் ஒரே ஆதாரங்கள் ஒரே வரிகளினால் ஆனவை இவை. இந்நூல்களின் பின்னட்டைகளில் ஏராளமான பிற நூல்களைப்பற்றிய தகவல்கள் உள்ளன.
***
பேராசிரியர் ஜேசுதாசன் இந்தக் கருத்தமைவின் முக்கியமான தொடக்கப்புள்ளி. எஸ்.வையாபுரிப்பிள்ளை வழிவந்தவரான ஜேசுதாசனுக்கு பைபிளிலும் கம்பராமாயணத்திலும் இணையான ஈடுபாடு உண்டு. தமிழிலக்கியம் சார்ந்த வையாபுரிப்பிள்ளையின் காலக்கணக்குகளை பெரிதும் ஏற்றுக் கொண்டவர் அவர்.பேராசிரியர் தமிழிலக்கிய வரலாறு ஒன்றை ஆரம்பகாலத்தில் எழுதினார். பின்னர் அவரது முதியவயதில் அவரது உதவியுடன் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அந்த தமிழிலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் மூன்றுபாகங்களாக விரிவாக எழுதினார்.
அந்த தமிழிலக்கிய வரலாற்றின் பெயர் ‘Count Down From Solomon’ அந்நூலின் தலைப்¨ப்பபற்றிச் சொல்லும்போது தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அத்துடன் தமிழின் சிறந்த இலக்கியங்களில், குறிப்பாக திருக்குறளிலும் ஆழ்வார்பாடல்களிலும் உள்ள அறம் அன்பு பற்றிய தரிசனங்கள் கிறித்தவ விழுமியங்களுடன் ஒத்திசைந்து போகின்றன என்று சொல்லியிருக்கிறார். இது அவருடைய நோக்கில் இலக்கியத்தின் உச்சங்கள் இயல்பாகவே உயரிய மானுடவிழுமியங்களைச் சார்ந்து இருக்கும் என்பதன் வெளிப்பாடே.
இந்நூல்களை பேராசிரியர் ஜி.ஜான் சாமுவெல் வெளியிட்டார். அவர் அப்போது சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். கடைசிக்காலத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் இந்தியாவில் சிந்தனைகளை கிறித்தவம்தான் கொண்டு வந்தது என்று வாதிட ஆரம்பித்தார். அன்பு, பண்பு, அறம் போன்ற விழுமியங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன , அவை சாத்தானால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாட்டு பழங்குடி மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பது அவரது தர்க்க முறை.
ஜான்சாமுவேல் இங்கிருந்து ஆரம்பிக்கிறார். 2003ல் ‘தமிழகம் வந்த தூய தோமா’ என்ற நூலை அவர் எழுதினார். இந்தியச் சிந்தனைகள் அனைத்துமே தமிழகம் வந்த தோமஸால் உருவாக்கப்பட்ட¨வையே என்று அதில் வாதிடுகிறார். [ ஹோம் லேண்ட் பதிப்பகம். 23, திருமலைநகர் இணைப்பு, பெருங்குடி,சென்னை 600096 ]
இந்த கருத்தை ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் இருவரும் வெற்றிகரமாக அமெரிக்க இவாஞ்சலிஸ்டுகளுக்கு கொடுத்து ஏற்கச்செய்தனர். பொதுவாகவே மதப்பரப்புதலுக்கு உள்ளாக்கப்படும் நாடுகளின் வரலாற்றை முழுமையாக மாற்றி எழுதுவது கிறித்தவ மரபு. அந்த மாற்றப்பட்ட வரலாற்றை அம்மக்களை ஏற்கசெய்யும்போதுதான் மதமாற்றம் நிரந்தரமாகும் என்று எண்ணுகிறார்கள்..
ஜான்சாமுவேல்-தெய்வநாயகம் உருவாக்கிய இந்த வரலாற்று உருவகம் இவ்விரு அம்சங்களையும் தெளிவாகவே கொண்டிருப்பதைக் காணலாம். தமிழகத்தில் திராவிட இயக்கம் ஆரிய வெறுப்பை கால்டுவெல்லில் இருந்து கண்டெடுத்து முன்வைத்தது. அது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் இந்நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டுகிறது. ஆரியர்களையும் பிராமணர்களையும் கிட்டத்தட்ட  ரத்தவெறிகொண்ட பேய்களைப்போல சித்தரிக்கின்றன இந்த நூல்கள். இரண்டாவதாக இந்தியாவில் உள்ள அனைத்துச் சிந்தனைகளையும் கிறித்தவமே கொண்டுவந்தது என்று வாதிடுகின்றன.
ஆகவே இந்தக் கருதுகோள் ஏற்கப்பட்டது. பெரும் நிதியுதவியுடன்  ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’ என்ற தலைப்பில் முதல் சர்வதேச கருத்தரங்கு ஜான்சாமுவேலை முதன்மை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தெய்வநாயகம் மற்றும் தேவகலா ஆகியோர் முக்கியப்பங்காற்ற  2005 ல் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. நியூயார்க்கில் மதப்பரப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரான டாக்டர் சுந்தர் தேவப்பிரசாத் அதற்கான அமெரிக்க தொடர்பாளர்
கருத்தரங்க மலரில் ஆர்ச் பிஷப் ஆ·ப் காண்டர்பரியின் வாழ்த்துச்செய்தி உள்ளது. செனெட்டர் ஹிலாரி கிளிண்டனின் வாழ்த்துச்செய்தி, ஹெலென் மார்ஷல், பரோ ஆ·ப் குயீன்ஸ் நியூயார்க் அவர்களின் வாழ்த்துச்செய்தி, நியூயார்க் மேயரின் வாழ்த்துச்செய்தி, கவர்னர் ஜார்ஜ் படாகியின் வாழ்த்துச்செய்தி ஆகியவை உள்ளன.ஹிலாரி கிளிண்டன் நேரில்வந்து பங்கெடுத்தார். வழக்கம்போல இந்தியாவின் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபையில் இருந்தும் வாழ்த்துச்செய்திகள் உள்ளன. மலபார் சர்ச்சின் ஆர்ச் பிஷப், சிரியன் மலங்கர திருச்சபை ஆர்ச் பிஷப்,சி.எஸ்.ஐ பேராயத்தின் ஆயரின் வாழ்த்துச்செய்தி போன்றவை உள்ளன
அத்துடன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் வாழ்த்துச்செய்தியும் உள்ளது. தமிழக கிறித்தவத்தின் இருபது நூற்றாண்டுப்பழமையில் பெருமைகொள்வதாக சொல்லும் முதல்வர் அது ஒரு மிக அறிவார்ந்த நிகழ்வாக இருக்கும் என்று வாழ்த்துகிறார்.
மாநாட்டின் நோக்கம் முதலிலேயே ஜான் சாமுவேலால் தெளிவுறச் சொல்லப்பட்டுவிடுகிறது. தாமஸ்கிறித்தவமே இந்துமதம் என்றும் அதை ஆரியபிராமணர் அழித்தார்கள் என்பதும்தான் அது. தாமஸ் பற்றிய ஒரு துதியுடன் மலர் ஆரம்பிக்கிறது. குடுமி வைத்து பூணூல் போட்டு அரைநிர்வாணமாக தோன்றும் கொடூரமான ஒரு பிராமணன் காவி உடை அணிந்து முழந்தாளிட்டு ஜெபம்செய்யும் தாமஸை  பின்னாலிருந்து ஈட்டியால் குத்திக்கொல்லும் வண்ணச்¢த்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் சைவசித்தாந்தம் இந்துமதம் போன்ற தலைப்புகளில் மீண்டும் மீண்டும் தெய்வநயகமும் தேவகலாவும் கட்டுரைகள் சமர்ப்ப்பித்திருப்பதைக் காணலாம். அத்துடன் பெரும்பாலான கட்டுரைகள் ஒரே குழுவினரால் உருவாக்கப்பட்டவைபோல ஒரேவகையான திரிப்புகள் ஒரேவகையான சொற்றொடர்கள் மையக்கருத்துக்களுடன் காணப்படுகின்றன.
இந்த மாநாட்டில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் ‘Early Christianity in Tamil Nadu’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில் தமிழின் எல்லா பண்டைய இலக்கியங்களும் கிறித்தவ தாக்கத்தால் உருவானவையே என்று அவர் வாதிட்டிருக்கிறார்.
இரண்டாவது சர்வதேசக் கருத்தரங்கு ஜான் சாமுவேலை தலைமையாகக் கொண்டு ஜனவரி 2007ல் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதற்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். ஆர்ச் பிஷப் மயிலை-சென்னை ஏ.எம்.சின்னப்பா தொடங்கி ஏறத்தாழ எல்லா சபைத்தலைவர்களும் ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள். முதல் கருத்தரங்கு பெரும் வெற்றிபெற்று இந்தியவரலாற்றைப்பற்றிய மறுக்க முடியாத கருத்துக்களை நிறுவி விட்டது என்று சொல்லும் ஜான் சாமுவேல் அதை மேலும் விரிவுபடுத்தவே இந்த கருத்தரங்கு என்று குறிப்பிடுகிறார்.
டி.தயானந்தன் ·ப்ரான்ஸிஸ், எஸ்ரா சற்குணம், ஹெப்ஸிபா ஜேசுதாசன் போல தமிழில்பரவலாக அறியப்படும் கிறித்தவ சிந்தனையாளர்கள் அனேகமாக அனைவருமே இந்த அரங்கில் கருத்துக்களை முன்வைத்திருப்பதைக் காணமுடிகிறது. எல்லா கருத்துக்களும் ஒரே சாரம் கொண்டவை. ஹெப்ஸிபா கம்பராமாயணம் கிறித்தவ சாரம் கொண்ட நூல் என்கிறார்.
இப்போது இந்த கருத்தரங்குகளின் நீட்சியாக ‘தமிழர் சமய உலக முதல் மாநாடு’ 2008 ஆகஸ்டு 14 முதல் 17 வரை சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட அருட்பணி மையத்தில் [ரோஸரி சர்ச் சாலை சாந்தோம், சென்னை 600004] நடக்கவிருக்கிறது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராயர் முனைவர் எ.எம்.சின்னப்பா [சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம். சாந்தோம்.சென்னை] முனைவர் மு.தெய்வநாயகம் நிறுவனர் உலக தமிழர் ஆன்மவியல் இயக்கம் சென்னை. துணைஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், முனைவர் தெ.தேவகலா அமைப்பாளர் உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம்.
இவ்வரங்கின் கோஷமாக முன்வைக்கப்படுவதை அதன் அறிவிப்பு இதழில் காண முடிகிறது. ‘ஓவ்வொருவரும் தன்மான உணர்வுடன் பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பிக்கும் இந்துத்துவாவின் பிடியில் இருக்கும் இந்து மதத்தைச் சார்ந்தவனாக தன்னைக் கூறாமல் தான் தமிழர் சமயத்தைச் சேர்ந்தவன் என்று அறிவித்து இந்துத்துவாவின் பிடியில் இருந்து விடுபட்டு தன்னுடைய பழைய சிறப்பு நிலைக்கு திரும்ப வேண்டும்’
அழைப்பிதழின் அட்டையில் உலக உருண்டைக்கு மேல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியும் ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன் ‘என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழிலேயே மாநாட்டில் பேசுபொருட்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. தமிழர் சமயம் என்பது தோமாகிறித்தவமே என்பதுதான் அது.
இந்த மாநாட்டுக்குப் பின் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவில் தாமஸ் இந்தியாவந்தது, வாழ்ந்தது பற்றி ஒரு ஆங்கில-தமிழ் திரைப்படம் எடுக்கப்போவதாகவும் அதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட முக்கிய நடிகர்களை நடிக்கவைக்கப்போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.//
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் துறையின் தலையாய முதல் பணியாக, தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் கோருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று நான் வழங்கிய அறிவுரைகளையொட்டி; 20.6.1996 அன்று தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.க.பொன்னுசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் – முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் சி.பாலசுப்பிரமணியம்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன், ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில்; தமிழ்மொழியைச் செம்மொழியென அறிவிக்கப்படுவது தொடர்பாக, ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி.ஜான்சாமுவேலால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஒரு சிலமாற்றங்களுடன் ஏற்கப்பட்டு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதோடு; தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்களின் பரிந்துரைகளையும் பெறலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 27, 2010, 12:22[IST
கோவை: தமிழ்மொழி, முப்பது உலக மொழிகளுக்குத் தாய் மொழியாக விளங்குகின்றது என்று தமிழறிஞர் ஜான் சாமுவேல் தெரிவித்தார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான சனிக்கிழமை அன்று முனைவர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் செம்மொழித் தகுதி கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞர் முனைவர் ஜான் சாமுவேல் பேசுகையில்,
தமிழ் மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளுக்குத் தாயாக விளங்குகிறது. இந்த உண்மை 18 ம் நூற்றாண்டு வரை யாருக்கும் தெரியவில்லை.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியதாக அனைவரும் கருதிக் கொண்டிருந்தனர்.
ஆனால், முதன்முதலில் எஃப்.டபிள்யூ. எலியட்ஸ் என்ற வெளிநாட்டு அறிஞர்தான் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு இடையே உள்ள தொடர்பை ஆய்ந்தறிந்து கூறினார்.
பின்பு, அறிஞர் கால்டுவெல் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தமிழ் 9 மொழிகளுக்குத் தாய் என்று தெரிவித்தார். இதில் திருந்திய மொழிகள் 5 என்றும், திருந்தா மொழிகள் 4 என்றும் அவர் தெளிவுபட கூறினார்.
இதனையடுத்து, கடந்த 1906 ம் ஆண்டில் இந்திய மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம் கள ஆய்வு செய்த போது தான் தமிழ் மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த 30 மொழிகளுக்குத் தாய்மொழி என்று உறுதிபட தெரிவித்துள்ளது.
ஆசிய மொழிகளான ஜப்பானிய மொழி, கொரியன் மற்றும் மத்திய ஐரோப்பிய மொழியான ஹங்கேரியன் ஆகியவற்றுடன் தமிழுக்கு உள்ள தொடர்பு தற்போது அறிஞர்கள் நடத்தும் ஆய்வுகளில் இருந்து தெளிவாகின்றது.
ஜப்பானிய மொழியியல் அறிஞரான சுமோ ஜப்பானிய மொழி தமிழ் மொழியில் இருந்து தோன்றியதாகக் கூறுகிறார். இவ்வாறு பன்மொழிகளை ஈன்றதில் தமிழ் செம்மொழியாக விளங்குகிறது என்றார்.//
எனக்கு 1980களின் கடைசியில் இருந்து ஆசியவியல் நிறுவனப் பணிகளில் ஈடுபாடும், தொடர்பும் ஜான் சாமுவேலால் கிடைத்தது. ப்ரெண்டா பெக் அவர்களின் அண்ணன்மார் சுவாமி கதை ஒலிப்பதிவுகளை ஒலிநாடாவில் இருந்து பெயர்த்து நூலாக்கவேண்டும் என்ற ஆசையை அவர் நிறைவேற்றினார். மேலும், கொங்குநாட்டின் சிறந்த ஒரு நொண்டி நாடகமாகிய “திங்களூர் நொண்டி” (அவிநாசிப் புலவர் பாடியது) மூலச் சுவடியை அளித்தேன். அதனை, ஆங்கில  மொழிபெயர்ப்புடன் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் அழகுற வெளியிட்டுத் தந்தது. அச்சாகாத தமிழ்நூல்களில் ஓர் அரிய படைப்பது. 1998-ல் செயின்ட் லூயிஸ் (மிஸ்ஸௌரி) நகரில் நடந்த பெட்னா மாநாட்டுக்கு ஜான் சாமுவேலை அழைக்க
எனக்கு வாய்ப்ப்மைந்தது. 1997-ல் ஆசியவியல் நிறுவனத்தில் கணித்தமிழ், தமிழ் ஆய்வில் சிற்றிலக்கியங்கள் பற்றி உரை ஆற்றியபோதும், 1998-ல் ஜானின் அமெரிக்க வருகையின் போதும் செம்மொழி ஆக்க அதிகாரபூர்வமான முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினோம்.
1996-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, முனைவர் ஜான் சாமுவேல் தயாரித்த வரைவு ஆவணத்தை தில்லியில் கலைஞர் அரசாங்கம் சமர்ப்பித்து வெற்றிகண்டது. ஜான் சாமுவேல் எழுதிய ஆவணம் தமிழைச் செம்மொழி ஆக்க உதவியமை பற்றிக் ‘செம்மொழி கொண்டான்’ கலைஞர் குறிப்பிட்டு, அதில் முக்கியமான
பகுதிகளை  மேற்கோள் காட்டி அண்மையில் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். கோவை செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கக் குழுவிலும் ஜான் சாமுவேல் அவர்கள் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

No comments:

Post a Comment