Wednesday, June 28, 2017

S.Ve.Sekar replies Church paid Agent Subavee

சுப.வீக்கு எஸ்.வி. சேகர் பதில் கடிதம்: அவசியம் படிக்கவும் 👌🏼👏🏼👍🏼
திரு சுப.வீ. அவர்களுக்கு,

வணக்கம். இன்று நீங்கள் வெளியிட்ட பகிரங்க கடிதத்தை படித்தேன்.
ஊரறிய நீங்கள் மடல் வரைகிறீர்கள். நான், உலக அளவில் தெரிய வேண்டும் என்பதால் என் முகத்துடன் குரல் பதிவுடன் சமூகவலைதளங்களில் பேசினேன்.
உங்கள் பகிரங்க கடிதத்தில் நம்பர் போட்டு பாயிண்ட் பாயிண்ட்டாக எழுதியிருக்கிறீரகள். அதே போல நானும் பாயிண்ட் பாயிண்ட்டாகவே பதில் சொல்கிறேன்.
1. “எங்களை இழிவுபடுத்தும் சாதி” என்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் பிறந்த செட்டியார் வகுப்பு இழிவு படுத்தும் சாதியா இல்லை இழிவு படுத்தப்படும் சாதியா என்ன சொல்ல வருகிறீர்கள் ??என்னைப் பொறுத்தவரை எந்த சாதியும் இழிவானது இல்லை. சாதி மதம் என்பது அவரவருக்கு தாய் தந்தைதான். அதாவது தாய், தந்தை இருப்பவர்களும் மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னதாக கூறுகிறீர்களே.. அதே பாரதிதான் “.. காக்கை குருவி எங்கள் சாதி” பாடியிருக்கிறார்.
மகாகவி பாரதியை.. நம் தேசத்தின் சுதந்திர போராட்ட வீரராக பார்க்காமல் அவரை பிராமணன் என்று பார்த்தீர்கள். ஆகவேதான் அவரை உயர்த்திப் பிடிக்க வக்கில்லாமல் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்தீர்கள்..
ஆக, சாதி வெறி உங்களுக்குத்தான் இருக்கிறதே தவிர, பிராமணர்களுக்கு அல்ல. அதாவது பிற எந்த ஜாதியையும் வெறுக்கத் தெரியாதவர்கள் நாங்கள்.
இப்பொழுதும் என் வீட்டில் சமையல் வேலை செய்பவர், வீட்டு வேலை செய்பவர்கள், குழந்தைகளை பார்த்துக்கொள்பவர்கள் எவருமே என் ஜாதியினர் அல்லர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
தினசரி பிணம் அடக்கம் செய்யும் வெட்டியான் தொழில் செய்பவர்களை அரசு ஊழியராக்கியவன் நான். ஆணையிட்டவர் அன்றய துணை முதல்வர் முக ஸ்டாலின். சாக்கடை சுத்தம் செய்யும் தொழிளாளர்களுக்கு ஜெட் ராடிங் யந்திரம் என் எம் எல் ஏ நிதியிலிருந்து வாங்கி கொடுத்துள்ளேன்
இதோ இப்போதுகூட, தமிழகத்தில் இரட்டைக் குவளை முறை இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அங்கு சென்று அதே குவளையில் டீ குடிக்க நான் தயார். ஆனால் நீங்கள் சொல்லும் சாதியினர் டீ குடிப்பார்களா?
இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்க முடியாத நிலை. இது குறித்து சட்டமன்றத்தில் கூட விவாதிக்கப்பட்டது. ஆனால் இன்றும் அதே அவல நிலைதான் நீடிக்கிறது. நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்?
சரி.. இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். கடவுள் நம்பிக்கை இல்லை, . சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கிடையாது என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர் நீங்கள். அடுத்தவாரம் நடைபெறும் உங்கள் குடும்பத் திருமணத்திற்கு சாதீய பெயருடன்தானே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது?. அதில் உங்கள் பெயரும் இருக்கிறதே நண்பரே…!
உங்களால் மட்டுமல்ல.. யாராலும் சாதியையும் மதத்தையும் ஒழிக்க முடியாது. இதுதான் யதார்த்தம். ஆனால் நீங்கள், கூட்டத்தினரை குஷிப்படுத்துவதற்காக உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவர்களைப்போல பேசுகிறீர்கள். அதனால்தான் தாழ்த்தப்பட்ட சமூகம் அப்பாவியாய் கைதட்டிக்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்துகொண்டிருக்கிறார்கள்.
2. எந்த பிராமணன் மீதாவது எப்.ஐ.ஆர். உள்ளதா” என்று நான் கேட்டதாக சொல்லியிருக்கிறீர்கள். “சாதிக்கலவரம் காரணமாக என்த பிராமணன் மீதாவது எப்.ஐ.ஆர். உள்ளதா” என்றுதான் கேட்டேன். அதை்ககூட புரிந்துகொள்ள முடியாமல், உங்கள் மண்டை கொதித்த காரணத்தினால் கூமர் நாராயணனையும் சங்கராசாரியாரையும் ஜெயலலிதாவயும் இழுக்கிறீர்கள்.
மக்களும், “ 2ஜி வழக்கு தீர்ப்புக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள்
.நீதிமன்றமே, விடுதலை செய்துவிட்ட சங்கராச்சாரியார் பற்றி நீங்கள் பேச வேண்டிய அவசியமே இல்லை.
உங்களைப்போன்றவர்கள் கொடுத்த சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றதால்தான் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனை அளித்தது என்று நாங்கள் நினைக்கிறோம்.
இங்கே இன்னொரு விசயத்தையும் சொல்லிவிடுகிறேன். . கடவுள் நம்பிக்கை உள்ள பிராமணர்களுக்கு சங்கரமடமும், மேல்மருத்தூரும் இரண்டுமே ஒன்றுதான். உங்கள் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது
3. 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்களுக்கும் படிப்பதற்கு இடம் இல்லை என்று நான் சொன்னதை மறுத்திருக்கிறீர்கள். நான் சொல்வதுதான் உண்மை. யதார்த்த நிலை. 99 சதம் மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்கள், தனியார் கல்லூரிகளில்தான் பல ல்ட்சம் செலவழித்து படிக்கிறார்கள் என்பது உலகுக்கே தெரியும். 35, 40 மார்க் வாங்கி சட்டத்துக்கு புறம்பாக பஸ் ஸ்டிரைக் மற்றும் பஸ் டே கொண்டாடும் கல்லூரிகளில் எங்கள் இன மாணவர்களுக்கு இடம் கிடையாது என்பதும் உலகுக்கே தெரியும்.
இதுவும் சமூக நீதிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
4.”மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்” “ என்று எனக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்கள். நான் அனைவரையும் மதிப்பவன். இது என்னுடன் பழகியவர்களுக்குத் தெரியும்.
அதே நேரம், மரியாதையுடன் நடப்பவர்களுக்குத்தான் மரியாதை அளிக்க முடியும் பண்போடு பேசுபவர்களுக்குத்தான் பண்பாக பதில் சொல்ல முடியும். மூன்றாம் முறை அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
நாங்கள் என்றுமே ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்போம். அது தேவையில்லை என நினைப்போருடன் ஒத்துப்போக இயலாது.
ஒரு கன்னத்தில் அறைந்தால் அந்த கன்னத்தை தடவிக்கொண்டு நிற்பவன் பிராமணன் அல்ல. அதையும் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். புரிந்து கொள்வீர்கள்
உங்கள் கோபம் பிராமண சமுதாயத்தின் மீதா அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயததை அடக்கி ஆளும் பிராமணர் அல்லாத மற்ற சமுதாயத்தின் மீதா? தைரியமாகச் சொல்லுங்கள்.
அப்படிப் பார்த்தால் நீங்களும் அப்படியான சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
“மதிமாறனின் புத்தி கூர்மையான கேள்விகள்” (சிரிப்பை அடக்கிக்கொண்டு நீங்கள் இதை எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.) என்று நீங்கள் எழுதியிருப்பதன் மூலம் உங்கள் புத்தி கூர்மை மீதே எனக்கு சந்தேகம் வருகிறது நண்பரே.
மதிமாறன் தரக்குறைவாக பேசியதற்கு சான்று வேண்டும் என்கிறீர்களே… பார்ப்பான் என்ற வார்த்தை பிரயோகமே தவறு என்று நாங்கள் சொல்கிறோம். பிராமணர் என்று பொது வெளியில் நாகரீகமாக அழைக்க விருப்பம் இல்லாத மதியில்லாதவர்தான் உங்கள் மதிமாறன். வேறென்ன சான்று வேண்டும்?
அன்றைய விவாதத்தில் நாராயணன் செய்தது மகிச் சரி. அன்று . விதண்டாவாதத்தை ஆரம்பித்தது வைத்தது உங்கள் மதிமாறன் அதற்கு நியாயமான எதிர்வினை ஆற்றியது எங்கள் நாராயணன். இதையெல்லாம் வேடிக்கை பார்த்து பல் இளித்து அதனால், தான் வேலை செய்யும் முதலாளியிடம் திட்டு வாங்கியது குறுக்கு புத்தி நெறியாளர் நெல்சன்.
“சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவஅறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ளவேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா” என்று மதிமாறன் கேட்டதாக சொல்கிறீர்கள். இது அறிவார்ந்த கேள்வி அல்ல. அடிவருடித்தனமான கேள்வி. யாருக்கு அடிவருடி என்பதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இந்த கேள்வியை தென் வட மாவட்டங்களில் நீங்கள் நேரில் போய் கேட்க துணிச்சல் உள்ளதா நண்பரே?
காயத்திரி மந்திரம் சொன்னால்கூடத்தான் மூளை வளரும். அவங்களை சொல்லச் சொல்வீர்களா அவர்கள்தான் சொல்வார்களா..
5 பதட்டத்திலும், ஆவேசத்திலும் பாவம்… ஐந்தாம் நம்பர் கேள்வி கேட்க மறந்துவிட்டீர்கள்.
6. என் புத்தி கூர்மையை பாராட்டியிருக்கிறீர்கள். இதிலாவது உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. என் புத்தி கூர்மைக்கு காரணம் இருக்கிது… என்னுடைய பத்து வயதில் இருந்து திரு. சோ அவர்களுடன் பழகியிருக்கிறேன். 1980களில் இருந்து கலைஞர் எனக்குப் பழக்கம். 83லிருந்து ஸ்டாலின் எனது நண்பர். 2010 இல் இருந்து மோடி அவர்களும்.
நான் இன்றைக்கு எந்த கட்சியையும் தாஜா செய்து பிழைக்கவேண்டிய அவசியம் இல்லை. காரணம், நான் சாராய பேக்டரி வைத்திருக்கவில்லை, ரோடு காண்ட்ராக்ட் எடுப்பதில்லை, மணல் வியாபாரம் செய்வதில்லை. ஏன் எம் எல் ஏ நிதியில் ஒரு பைசா கூட கமிஷன் வாங்கியதில்லை.
ஒட்டு வங்கி பற்றித் தெரியாத உங்களாலும் திராவிடர் கழக வீரமணி போன்றவர்களாலும்தான் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. மூன்று முறை திமுக வெற்றி பெற்றதற்குக் காரணம் பிராமணர்களும்கூட என்பதை மறந்துவிடாதீர்கள்.
எங்கள் மூதறிஞர் ராஜதந்திரி ராஜாஜி அவர்கள் சொன்னதால்தான் பிராமணர்கள் ஓட்டு போட்டு, முதன் முதலாக திமுக ஆட்சி அமைத்தது என்ற சரித்திரத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
என் நண்பர் திரு ஸ்டாலின் அவர்களது தொடர் உழைப்பால் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் உங்களைப்போன்ற மற்றும் திராவிடர் கழக வீரமணி போன்றவர்களுடைய உளறலான கடவுள் மறுப்பு கொள்கைகளும் பிராமண எதிர்ப்பு பேச்சும் திமுகவின் வாக்கு வங்கியை சிதைக்கவே உதவும். ஒரு சதவிகிதம்கூட உங்களால் திமுகவுக்கு உதவியாக இருக்க முடியாது என்பது நிதர்சனம். இதை செயல் தலைவரும் உணர்ந்துள்ளார் என்பதை உணர்வீர்கள்
ஆகவே என் போன்றவர்களுடைய நியாயமான பேச்சை ஸ்டாலின் அவர்கள் கேட்பார்களா, அல்லது சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வது போல் உங்களைப்போன்றவர்களுடைய பேச்சை ஸ்டாலின் அவர்கள் கேட்பார்களா என்பதை காலம் உங்களுக்கு தெளிவு படுத்தும்.
அடுத்ததாக, ஆள்வைத்து வெட்டுவேன் என்பதாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கையில் அரிவாள் கொடுத்து வெட்டும் அளவிற்கு உங்கள் யார் மேலும் எனக்கு கோபம் இல்லை. தவிரவும் நீங்களே உங்கள் முதுகிலும் மனதிலும் அரிவாளை சுமந்து கொண்டு யாரை வெட்டலாம் என அலையும் போது எங்களுக்கு பேப்பரில் நியூஸ் படிக்கும் வேலை மட்டும்தான்.
அப்புறம்… அடுத்த வாரம் நடக்க இருக்கும் உங்கள் இல்ல திருமணத்தில் சாதிப் பெயருடன் அழைப்பிதழ் அச்சடித்திருப்பதை ஏற்கெனவே சொன்னேன் அல்லவா..
இன்னும் சில தகவல்களை வாட்ஸ்அப்பில் பார்த்தேன்.
“சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர். எதிர்பாராத விதமாக அவர் தன் சாதிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.
எதிர்பாராத விதமாக அவரது மூத்த மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று.
எதிர்பாராத விதமாக அவரது இரண்டாம் மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று.
எதிர்பாராத விதமாக வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்க வேண்டியதாயிற்று.. மற்றபடி சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர்.” என்பதுதான் அந்த வாட்ஸ் அப் பதிவு.
ஊருக்கு மட்டுமே உபதேசமோ?
இதுதான் தங்களின் சாதி மறுப்பு கொள்கையென்றால் நானும் சாதி மறுப்பாளன்தான். வாழ்க சாதீய மறுப்பு. . ஹிஹிஹி..
பி கு
தாங்கள் எனக்கெழுதிய கடிதத்தை ரஜினிகாந்தை வைத்து 29 படங்களை இயக்கிய தங்களுடைய சகோதரர் எஸ்.பி. முத்துராமன் படித்தால் கூட தங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்.
இன்னொரு பி.கு: மீண்டும் உங்களிடமிருந்து கடிதம் எப்போதும் வந்தாலும் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.
உங்களுக்கு மட்டுமல்ல பிரான்ஸ் தமிழச்சிக்கும் சேர்த்துதான் இந்த பதில்.
என்றும் அன்புடன்
எதிர் துருவமான தங்களின் நண்பன்
எஸ்.வி.சேகர்

No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி