Monday, March 12, 2018

வள்ளுவர் காட்டுவது அறம், தமிழர் மதம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்.                கடவுள் வாழ்த்து குறள் எண்:2 
 நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் அகரம் முதலான எழுத்தை, உலகினையும் படைத்த நிறைந்த அறிவுடைய இறைவன் தாள் பணிந்து வீடுபேறு பெறவே

                                   திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி.                                                       குறள் 356:                                                                 கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர், திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர்.

தமிழர் இறைவனை அறிந்த ஒரு மாபெரும் வரலாறு கொண்ட சமுதாயம். தமிழர் மெய்யியலே பாரதம் முழுவதும் ஏற்றது. அது ஹிந்து சமயம் எனப் பெயர் பெறுகின்றது. 


வேதங்கள் சம்ஸ்கிருதம் எனும் வடமொழியில் உள்ளது என்றாலும் அதற்கு உச்சகட்ட உரைகளை (பாஷ்யம்) எழுதியவர்கள் போற்றலுக்குரிய ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர்  தமிழர்களே. 


உலகின் நாகரீகத் தொட்டில் - சிந்து சரஸ்வதி நாகரீகம் அதன் உச்சத்தில் 5 லட்சம் சதுர மைல்கள் பரவி இருந்தது, தொன்மை ஹரியானாவின் குருக்ஷேத்திரம் ஆருகிலுள்ள பிர்ரானாவில் கிடைத்த தொல்லியல் பொருட்களின்படி பொமு 7500 வரை செல்கிறது.
சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டு பழமையானது
பொமு 4000 வாகியே வேள்வி குண்டங்கள் என பலவும் தொல்லியல் அகழ்வில் கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மொஹஞதாரோ ஹரப்பா என நம் பாடங்களில் கிடைத்தவை தாண்டி பல இடங்களில் மிகத் தெளிவான தரவுகள் கிடைத்துள்ளன.
 
                                                         காளிபங்கன் (ராஜஸ்தன்)  யூப சாலை
 ஹரியானாவில் பிர்ரானா,  ராஹிகார்ஹி, மெஹெர்கர்   தோலாவிரா லோத்தல்( முக்கிய துறைமுகம்-குஜராத்) 
மற்றும் காளிபங்கன் (ராஜஸ்தன்)
செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? – கேத்ரி சுரங்கம் (ராஜஸ்தன்).
சங்க இலக்கியத்தில்  நால் வேதங்கள்படியான வேள்வி பற்றிய பாடல்.  
நல்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி
யூபம்நட்ட வியன்களம் பலகொல்     (புறம்:15)

ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் (அகம்:181)

தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள். 
தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள். 
அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள்.    தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே.   வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும் .
பார்ப்பான்- வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்       80   
 செந்நிறம் புரிந்தோன் செல்லல்  நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
 காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து                 சிலப்பதிகாரம் வரந்தரு காதை

5000 வருட சிந்து சரஸ்வதி நாகரீகத்தில் சம்ஸ்கிருதப் பங்கு உள்ளது என பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேட்டிதமிழர் சமயத்தில் இறை வழிபாட்டின் முக்கிய வழிகாட்டிகள் அந்தணர்

அந்தம் + அணவுபவர் - இறைவனை அடைய  உலகின் இறுதிப் பொருளான  வேதங்களை அணவுபவர் எனப் பொருள்படும்

 தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
 வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை.  அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
எழுதாக் கற்பினின் சொலுள்ளும்   குறுந்தொகை 156. 5-6

விரதவுணவையுமுடைய, பார்ப்பன மகனே நின்னுடைய அறிவுரைகளுள்

  3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)

திருவள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி உரைப்பார்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாமக்கல் கவிஞர் உரை
அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                         (134ஒழுக்கமுடைமை)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.                                (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள் - அறநூல்களை மறப்பர்


No comments:

Post a Comment