Sunday, July 8, 2018

திருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவணரின் கிறிஸ்துவ வெறி

தேவநேயப் பாவாணர் மிழறிஞர், ஆனால் 2ம் தலைமுறை கிறிஸ்துவர், தன் மதவெறியை மறைத்து தமிழ் பற்றாளர் வேடமிட்டு நச்சுக் கருத்துகளை மொழி நூல் எனும் பெயரில் பிரிவினை விஷக் கருத்துக்களை எழுதியவர். 
பாவாணர் பற்றிய செய்திப் படி  தன் பேரன்கள் எவருக்கும் தமிழ் பெயர் வைக்காமல் பைபிள் தொன்மத்தில் உள்ள ஹீப்ரு, லத்தீன் பெயர்கள் வைத்து- தான் முழுமையான கிறிஸ்துவர் மட்டுமே; தமிழர் அல்லர் என நிருபிக்கிறார்.
சாந்தோம் ஆர்சி சர்ச் பல லட்சம் செலவு செய்ய சிஎஸ்ஐ சர்ச் மற்றும் லுத்ரன் என பல்வேறு சர்ச்கள் சேர்ந்து செய்த சதி தான் திருக்குறளை கிறிஸ்துவம் என்பதாக மாற்றுவதன் ஆணிவேர் பாவாணர் எனவும் சில வயதான அறிஞர்கள் கூறி உள்ளனர், தெய்வநாயகம் முனைவர் கட்டுரையின் நடை பெருமளவு பாவாணரது போலவே இருக்கும். மொத்தமும் உளறல் கிறிஸ்துவ பிரிவினை நச்சு கருத்துக்கள்.

1969ல் நூல் வந்ததை கண்டித்து தேவநேயர் ஏதும் எழுதியதாய் இல்லை. ஆனால் நூல் அட்டையில் வள்ளுவரை ஒரு முனிவராக காட்டுவதை சற்றே திரித்தல் தொடங்கியதை பெருமையாய் வேறோரு நூல் முகவுரையில் பாவாணரே சொல்கிறார்.
வள்ளுவரை தமிழ் முனிவராய் வந்த படங்களை நீக்கி மதச் சார்பற்றவராய்  மாற்றிய்தில் தேவநேயப் பாவாணர் கொள்ளும் உவகை பாரீர். கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.-

//புலவர் தெய்வநாயகம் தம் “திருவள்ளுவர் கிறித்தவரா?” என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன.//  

1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு -
1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி


தேவநேயர் பல இதழ்களில் எழுதியவர், சர்ச்சிற்கும் பல இதழ்கள், ஆனால் வள்ளுவர் கிறிஸ்துவரில்லை எனத் தெள்ளத் தெளிவாய் நிருப்த்த மாநாட்டை ஏன் கிறிஸ்துவ மத பாவாணர் மறைத்தார்? 

பின்னரும் சர்ச் பெரும் பணத்தில் மேலும் பல நூல்கள் வெளியிட்டு, பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துவ தமிழ் துறை என அமைத்து, அதிலும் எந்த பேராசிரியரும் ஒத்து வராமல் போக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திரு.ச.வே.சுப்ரமணியம், இவரை அங்கு பணி செய்த அன்னி தாமசு எனும் கிறிஸ்துவப் பெண் மயக்கி வைத்திருக்க (பின் திருமணமும் செய்து கொண்டனர்), வழிகாட்டியாக "திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் - ஒப்பாய்வு எனும் முனைவர் பட்டம் விலக்குப் பெறப் பட்டது.

தேவநேயப் பாவாணர் தமிழர் பகைவர், கிறிஸ்துவ வெறியர் என்பதை மிக எளிதாய் அவருடைய திருக்குறள் தமிழ் மரபுரை படித்தால் அனைவரும் ஏற்பர்.
தமிழக அரசு கன்னியாகுமரியில் நின்று எழுதும் வடிவில் திருவள்ளுவர் சிலை திறப்பின் போது வெளிய்ட்ட நூல்  குறளமுதம் நூலில் ஒரு கட்டுரை - "திருவள்ளுவர் காலம் - சாமி சிதம்பரனார்" புலவர் தமிழர் வரலாற்றில் மிகவும் புலமை பெற்றவர், இவர் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளது, அதில் ஒரு நூல் தட்டச்சாக தமிழ் பல்கலைக் கழக இணையத்திலேயே உள்ளது. "பதினெண் கீழ்க்கணக்கும்" அந்த நூலில் உள்ள இணையப் பக்கம்

 ‘மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும், பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.                 (கு. 134)  
 வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்றுக்கொள்ளலாம். வேதம் கற்பவன் தன் பிறப்பிற்குரிய ஒழுக்கத்திலே தவறுவானாயின், அவன் குடிப்பெருமை அழியும்.’

வள்ளுவர் காலத்திலே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், என்ற
நால்வகைப் பிரிவுகளும், இன்னும் பல பிரிவுகளும் தமிழர் சமுதாயத்தில்
இருந்தன. பிறப்பினால் உயர்வு தாழ்வு வேற்றுமைகளும் இருந்தன.
இவ்வுண்மையை இக்குறளால் காணலாம்.

‘‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                         (கு.543)
 அந்தணருடைய வேதத்திற்கும், அறத்திற்கும் அடிப்படையாகி நின்று
உலகத்தைக் காப்பாற்றுவது அரசனது செங்கோல்தான்.’’    
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

  ‘‘ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்;
        காவலன் காவான் எனின்.                           (560)
      அரசன் நீதி முறைப்படி நாட்டைக் காப்பாற்றாவிட்டால் பசுக்களின்  பயன் குன்றும்; அந்தணர்கள் அறநூலை மறந்து விடுவர்.’’                        

தமிழகத்தில் வேதங்களும், வேள்விகளும், வழங்கி வந்தன; அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர்; வேள்விகளையும் வேதியர்களையும் காப்பாற்ற வேண்டியது அரசாட்சியின் கடமை; இக்கருத்தை இவ்விரண்டு குறள்களும் கூறின.

‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.    (259)
 நெருப்பில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் யாகம்
செய்வதைக் காட்டிலும் ஒரு பிராணியின் உயிரைக் கொன்று
தின்னாமலிருத்தல் சிறந்தது.‘‘
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின்

இக்குறளை எடுத்துக்காட்டித் திருவள்ளுவர் யாகத்தைக் கண்டிருக்கிறார் என்று கூறுவோர் உண்டு. புலால் உண்ணாமையின் சிறப்பைக் கூற வந்ததே இக்குறள். யாகம் தீமையானது; அதைச் செய்யக்கூடாது என்று இக்குறள் சொல்லவில்லை. யாகத்தால் வரும் புண்ணியத்தைவிடப் புலால் உண்ணாமயால் வரும் புண்ணியமே சிறந்தது என்றுதான் இக்குறள் உரைக்கின்றது. ஆதலால் இது வேதவேள்வியைக் கண்டிக்கும் குறளாகாது.

பாவாணர் கிறிஸ்துவ வெறியில் பொய், மோசடியாய் எழுதினார் என்றால், அந்தணர் மேல் கிறிஸ்துவர் பரப்பிய பொய்யில் எமாந்து பைத்தியக்காரத்தனமாய் உரை எழுதியோர் கா.சு.பிள்ளை மற்றும் அப்பாதுரை போன்றோர்.

தமிழ் பகைவர்கள், திராவிட மலக் கூட்டத்தோடு இணைந்த குப்பை உரைகள் பாவலேறு, இலக்குவனார் போன்றோர், தங்கள் அறிவை கிறிஸ்துவ காலனி நச்சிற்கு அடிமையாய் தமிழ் பகைவராய் போனர்.

நாம் திராவிட சாக்கடையுள் முழுதாய் ஊரிய புலவர் குழந்தை, நெடுஞ்செழியன் உரைகள் ஆய்விற்கே தகுதி அற்றவை.

No comments:

Post a Comment