Wednesday, November 21, 2012

யோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்!

இயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந்தது என்று கதை தொடங்குகிறது.

  

மாற்கு1: 4  திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
 யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றதால், பெற்ற பின் தான் ஏசு தெய்வீகர் நிலை ஆரம்பம். இந்நிலையில் யோவான் ஏசுவைவிட மேலானவர். இதை மத்தேயு மாற்றுகிறார்.
  
மத்தேயு3:13 இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' என்று கூறித் தடுத்தார்.15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

நாம் வானில் இருந்து வந்த குரலைப் பார்ப்போம்.
 
மாற்கு- என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்
 மத்தேயு-என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் 

குரல் ஏசுவிடம் பேசியதா - வேறு சுற்றி இருந்த மக்களுக்கு சொன்னதா- வெற்று புனையல்கள்.
யோவான்1:33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். '
யோவானிற்கு பார்த்தவுடனே தெரியவில்லை என்கிறார் யோவான், மத்தேயு சொல்வதை மறுக்கிறார் நான்காவது சுவி.
மத்தேயு-யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?
 யோவான்-இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது.

இயேசுவிடம் நீங்கள் இயங்க என்ன அதிகாரம் என்ற கேள்விக்கு ஏசு சொன்ன பதில்
மத்தேயு21: 23 இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, ' எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? ' என்று கேட்டார்கள்.24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா? என்று அவர் கேட்டார். அவர்கள், ″ ' விண்ணகத்திலிருந்து வந்தது ' என்போமானால், ' பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை ' எனக் கேட்பார்.26 ' மனிதரிடமிருந்து ' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர் ″ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.27 எனவே அவர்கள் இயேசுவிடம், ' எங்களுக்குத் தெரியாது ' என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், ' எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன் 'என்றார்.


 இயேசுவை பார்த்த உடனே தெய்வீகர் என ஒரு சுவி புனைகிறது. வேறோரு சுவி பரிசுத்த ஆவி வரும் கதையைப் பார்த்தேன் என யோவான் சுவி.
ஆனால் சிறையில் யோவான் அடைக்கப்பட்ட போது
மத்தேயு11: 2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை இயேசுவிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்.
யோவான் மிகப் பிரபலமானவர் என்பதும் மேலு தெளிவாக மன்னர் ஏரோதும் பயந்தான்.
மாற்கு 6:14  ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், ' இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; இதனால் தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன ' என்றனர்.1
16 இதைக் கேட்ட ஏரோது, ' இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார் ' என்று கூறினான்.
18 ஏனெனில் யோவான் ஏரோதிடம், ' உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல ' எனச் சொல்லிவந்தார்.
20 ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.

இயேசு யோவான் ஞானஸ்நானானை பற்றி சொன்னதாக
மத்தேயு11: 8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா?
9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.10 ' இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.14 உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.
இயேசு யோவான் ஞானஸ்நானானை வரவேண்டிய எலியா என்றார்
யோவான்1:24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 21. பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.

யார் சொல்வது உண்மை
அப்போஸ்தலர் பணி18:24 அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்: மறைநூல்களில் புலமை வாய்ந்தவர்.25ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்: ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப்பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார்.28 ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, இயேசுவே மெசியா என மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.அப்போஸ்தலர் பணி19:3நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்? எனப் பவுல் கேட்க, அவர்கள், நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம் என்றார்கள்.4அப்பொழுது பவுல், யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார் என்றார்.5 இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர்.6 பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது.


இச்சமபவம் ஏசு மரணம் உயிர்த்தார் கதைக்கு 10 வருடம் பின்பு. இயேசுவைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர் யோவான் ஞானஸ்நானம் தான் தெரிந்து பரப்பினார்.
யோவான் ஏசுவை ஏற்கவே இல்லை.


2 comments:

  1. தேவப்பரியாஜி
    ஏசுவின் சீடர்தானே யோவான். அவர் ஏன் யோவானிடம் ஞானஸ்நானம் பெற வேண்டும்? ஞானஸ்நானம் சடங்கு யோவானால் துவக்கப்பட்டதா? அதற்கு முன்பே இருக்கிறதா?

    ReplyDelete
  2. இயேசு சீடர்களில் ஒருவர் யோவான், ஆனால் ஏசு இயக்கம் ஆரம்பிக்குமுன் ஞானஸ்நானி யோவான் என்பவரிடம் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார், அதாவது இயேசு ஞானஸ்நானி யோவானின் சீடர் ஆவார்

    ReplyDelete

லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை   13 Oct 2023 04:48 AM சென்னை:  சென்னை மற்றும் ...