Thursday, September 11, 2025

முன்னாள் கிறிஸ்துவர் மனம் திரும்பி மனிதனாகி கடவுளை வணங்கும் பரவர் தமிழன் அனுபவங்கள்

https://x.com/KalyaanBJP_/status/1966021065387421980

 

நான் கிறீஸ்தவனாக இருந்தவரை தமிழகத்தில் அச்சமின்றி வாழ்ந்து வந்தேன்! இந்துக்களால் எந்த அச்சுருத்தலும் இல்லாததால் பாதுகாப்பாக உணர்ந்தேன்! எனது வணிகத்திற்கும் இந்துக்களிடமிருந்து ஆதரவும் கிடைத்து வந்தது! கிறீஸ்தவனாக இருந்ததால் எனது சமுதாயத்தினர் (பரவர் ) அனைவரும் கத்தோலிக்க கிறீஸ்தவராக இருப்பதால் தொழிலிலும் நல்ல வளர்சியும் கிடைத்து வந்தது. 2017ஆம் ஆண்டு உத்தரகோசமங்கை சென்று சிவபெருமானின் அழைப்பை ஏற்று பரவர் சமுதாயத்தின் குலதெய்வமான சிவன் பார்வதி தாயார் வழியில் மனம் திரும்பி குலதெய்வ வழிபாட்டுக்கு திரும்பியதால் அறிவு தெளிவு பெற்றேன்!

ஆனால் எனது சமுதாயம் எனது குலதெய்வ வழிபாட்டு மனமாற்றத்தை எப்படி எடுத்துக்கொண்டது என்பதை இன்றுவரை நடந்ததை நினைத்து பார்க்கிறேன்! தாய்தெய்வ வழிபாட்டுக்கு மாறியதும் எனது கடையில் இயேசுகிறீஸ்து படங்களை வைத்து கும்பிடுவதில்லை இந்து தெய்வங்களின் படங்களை வைத்து விளக்கேற்றி வைத்து வழிபட்டேன்! தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பரவர் சமுதாயத்தைச்சேர்ந்த கத்தோலிக்க குருக்கள் எனது அரிமா புத்தக வளாகம் கடைக்கு வருவார்கள் அப்போது ஒருநாள் விளக்கேற்றிவிட்டு திரும்பியபோது எனக்கு நல்ல பரிச்சயமான குருவானவர் தன்னுடன் இன்னொரு குருவையும் கடைக்கு அழைத்து வந்திருந்தார். அவர் இதுபோன்று இந்து தெய்வங்களை அமல் வழிபடத்தொடங்கிவிட்டான் வாங்க சாமி நாம இனி இவன் கடைக்கு வரக்கூடாது என்று சொன்னதோடு இனி மற்ற குருக்களையும் இவன் கடைக்கு வரக்கூடாது எனச்சொல்ல வேண்டும் என்று கோபமாகப் பேசி விட்டுச்சென்றார்! எனது குலதெய்வ வழிபாடு இன்னும் வைராக்கியத்துடன் பலப்பட்டது! எனது உடன்பிறந்த சகோதரர் கத்தோலிக்க குருவானவர் அவர் ஒருநாள் கடைக்கு வந்தவர் இதுபோல நீ செய்துவரும் காரியத்தால் அம்மா அப்பா பக்கத்தில் உனக்கு கல்லறையில் இடம் கொடுக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார்! எனது குலதெய்வ வழிபாடு இன்னும் வைராக்கியத்துடன் பலப்பட்டது! நெற்றியில் சந்தனம் குங்குமம் திருநீறு வைப்பதை அன்றிலிருந்து எந்நேரமும் வைக்கத் தொடங்கினேன்! பரவர் சமுதாயத்திற்காக செய்துவந்த எனது சேவையால் பரவர் சமுதாயத்தின் ஜாதித்தலைமையான பாண்டியாபதி குடும்பத்தின் நம்பிக்கைக்குறிய இடத்தில் முதண்மையானவனாக இருந்து வந்தேன் குலதெய்வ வழிபாடு செய்ததால் எனக்கு கிறீஸ்தவ குருக்களும் எனது சகோதரரான குருவானவரும் கொடுத்த எதிர்ப்பையும் எனது நண்பரிடம் சொன்னபோது அவர் பாஜகவில் இணைந்திடுங்கள் உங்களைப் போன்றோருக்கு வரும் ஆபத்துகளீலிருந்து பாஜக காப்பாற்றும் துணையாக இருக்கும் என்றார் அவரது ஆலோசனையே எனது ஆசையாகவும் இருந்ததால் கட்சியில் இணைந்தேன்.
பாஜகவில் இருப்பதை எனது முகநூல் பக்கங்களில் பகிர்ந்ததை பார்த்து பலர் பாண்டியாபதி வாரிசு ரெக்ஸ் மோத்தா அவர்களிடம் சொல்லி இவர் இப்படி பட்ட செய்திகளை முகநூலில் போடுவதால் பாண்டியாபதியான தங்களுடன் நெருக்கமாக இருப்பது சரிவராது என்று அவருக்கு நெருக்கடி கொடுத்ததால் அவரும் என்னிடம் முகநூல் பக்கங்களில் பகிரப்படுவது குறித்து கவலை தெரிவித்து தவிற்குமாறு கேட்டார். நானோ எனது சுதந்திர உணர்வை நான் எந்த நிலையிலும் மறைக்க மாட்டேன் தங்களுக்கு என்னை இப்படியே ஏற்க்கொள்ள மனமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று உறுதியாக கூறிவிட்டேன். எனது குல தெய்வ வழிபாடு இன்னும் வைராக்கியத்துடன் பலப்பட்டது! எம் சமுதாயத்திற்கான குலதெய்வ கோயில் ஒன்று கட்ட மனதில் எண்ணத் தொடங்கினேன்! அடுத்தது ஆறுமுகநேரி எனது சொந்த ஊர் கமிட்டியில் வரி வாங்க மறுத்தனர் சவேரியார் கோவிலுக்கு நன்கொடை கேட்டு வந்த பொருளாளரிடம் பரவனாக என்னிடம் வரியை வாங்காத ஊர்கமிட்டியில் இருக்கும் தங்களுக்கு சவேரியார் கோவிலுக்கு நண்கொடை தரமாட்டேன் என்று மீண்டும் உறுதியானேன்! எனது குலதெய்வ வழிபாடு மீண்டும் உறுதியானது! என்னைப்போன்று பரவர் சமுதாயத்தில் பலர் தம் குல தெய்வ வழிபாட்டுக்கு திரும்புவோரை காக்க மனதில் உறுதிபூண்டேன் வேத வியாசர் குருகுலம் என்ற அறக்கட்டளையை பதிவு செய்தேன். கிறிஸ்தவ மதம் எவ்வளவு இறுக்கமாக உள்ளது என்பதையும் தாம் சேர்த்தக் கூட்டத்திலிருந்து யாரும் வெளியேறிவிடக்கூடாது என்று அச்சப்படுவதையும் என்னிடம் நடந்துகொண்டதை வைத்து பார்க்கிறேன்! உலகம் முழுவதும் ஒருவன் தனக்கு ஆதாயமாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அது பொருளற்றதாகும் என்ற சத்தியம் மிகுந்த வாக்கு புனித இக்னேசியஸ் புனிதர் சேவியருக்குச்சொன்னது கிறீஸ்தவ மதவாதிகளுக்கும் பொருந்தும்!! என்னைப்போல் பலர் கிறீஸ்தவ மதத்தின் சர்வாதிகாரத்திடமிருந்து விடுதலை பெறத் துடித்துக்கொண்டுள்ளனர் .... அவர்களுக்கு நான் ஒரு பாடம் மட்டுமல்ல வழிகாட்டி .... ஆன்ம விடுதலையே உண்மையான ஆன்மிகம்!! சுய பலத்தில் நிற்பவனிடம்தான் இறைவன் குடிகொள்வார்! அதுவே இறையாண்மையாகும்!

No comments:

Post a Comment

இந்திய மாநிலங்கள்: மொத்த மக்கள் தொகை vs. மொத்த வாக்காளர்கள்

இந்திய மாநிலங்கள்: மொத்த மக்கள் தொகை vs. மொத்த வாக்காளர்கள் - கேரளா, உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஒப்பீடு...