Saturday, September 13, 2025

சனாதன தர்மம்



சனாதன தர்மம் என்பது ஒரு பண்டைய காலம் முதல் தொடரும் வாழ்வியல் நெறிமுறை மற்றும் நிலையான தத்துவஞானம் ஆகும், இது பெரும்பாலும் இந்து சமயத்தை குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சமஸ்கிருத சொல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மதத்தை விட, கடமைகள், ஒழுக்க நெறிகள் மற்றும் மனிதகுலத்தை வழிநடத்தும் நித்தியமான கொள்கைகளைக் குறிக்கிறது. சனாதன தர்மம் என்பது இந்து மதத்தின் ஒரு அடையாளமாகவும், தாய் தந்தையை மதித்தல், இறைவனை மதித்தல், மற்றும் அனைவரிடமும் அன்பாக இருத்தல் போன்ற அறங்களை உள்ளடக்கியதாகவும் கருதப்படுகிறது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10:
இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறந்து - இறந்து மீண்டும் பிறந்து எனத் தொடரும் பிறவிப் பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339:
ஒருவன் மரணம் அடைவது என்பது தூக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது தூக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. இது தொடரும் பிறவிப் பெருங்கடல்

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். குறள் 349:
ஆசைகளை முழுவதுமாக விட்டபோது தான் நிலையில்லாமல் மீண்டும் மீண்டும் தொடரும் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. குறள் 350:
பற்று இல்லாதவனாகிய கடவுள் திருவடியை அடையும் பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள ஆசைகளை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி குறள் 356:
கற்க வேண்டியவற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை - இறைவன் திருவடியை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.         குறள் 361:

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.         குறள் 362:

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.  குறள் 36:
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் மரணம் போதும் அழியாமல் நமக்கு துணையாக தொடரும் .

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.           குறள் 38:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 31:

மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று

No comments:

Post a Comment

இந்திய மாநிலங்கள்: மொத்த மக்கள் தொகை vs. மொத்த வாக்காளர்கள்

இந்திய மாநிலங்கள்: மொத்த மக்கள் தொகை vs. மொத்த வாக்காளர்கள் - கேரளா, உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஒப்பீடு...