சிறுமியருக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி தாளாளர் கைது நவ 11, 2021
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே, சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2887715&fbclid=IwAR0KkzCiHmQ2ytRHdjDL2x6ZbhYdJ7zNHkXYkryFgQJW2korxzlkVHTbD3w
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தில், அமலா சிறுவர் - சிறுமியர் இல்லம் மற்றும் அமலா மெட்ரிக் பள்ளி உள்ளது.இங்கு ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற சிறுவர் - சிறுமியர் 100க்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர்.இந்த இல்லத்தில் தங்கி இருந்த மாணவியர் மூவர், 25ம் தேதி காணாமல் போயினர்.

பள்ளியின் தாளாளர் ஜேசுதாஸ்ராஜா, 65, ஆலடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மூவரையும் போலீசார் தேடி கண்டுபிடித்து, கடலுார் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை மேற்கொண்டார்.

அதில், பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா, சிறுமியர் மூவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. ஜேசுதாஸ்ராஜா மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து, கைது செய்தனர். அமலா இல்லத்தில் இருந்த 40 சிறுமியர், கடலுார் சிறுமியர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மர்மம் அவிழுமா?
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அமலா இல்லம் மற்றும் மெட்ரிக் பள்ளியை ஜேசுதாஸ்ராஜா நடத்தி வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்துவ மிஷினரிகள் வாயிலாக நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.தற்போது வெளிநாட்டு நிதியுதவிகள் நிறுத்தப்பட்டதால், அமலா மெட்ரிக் பள்ளியில் இருந்து வரும் வருமானத்தில் இல்லம் நடத்தப்படுகிறது.





No comments:
Post a Comment