Friday, July 6, 2012

இயேசு உயிர்த்து எழுந்தாரா- இல்லையே?-1

பவுலின் சாட்சி உண்மையா?

1 கொரிந்தியர் 15:3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,4 அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர்.7பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.


அப்போஸ்தலர் அனைவரும் ஜெருசலேமில் தான் வாழ்ந்தனர். அவர்களை சந்திக்க பவுல் சென்றதாக கதை. அப்பொழுது யூதர்களால் கைது செய்யப்பட யூதப் பாதிரிகள் சங்க விசாரணை பற்றி லூக்கா சுவி கதாசிரியரே எழுதியதான நூலில்
அப்போஸ்தலர் நடபடிகள்23
தலைமைச் சங்கத்தின் முன் பவுல் 

 பவுல் அவரிடம், வெள்ளையடிக்கப்பட்ட சுவரே! கடவுள் உம்மை அடிப்பார். திருச்சட்டத்தின்படி எனக்குத் தீர்ப்பளிக்க அமர்ந்திருக்கும் நீர் அச்சட்டத்துக்கு முரணாக என்னை அடிக்க எப்படி ஆணை பிறப்பிக்கலாம்? என்று கேட்டார்.4 அருகில் நின்றவர்கள், கடவுளின் தலைமைக் குருவைப் பழிக்கிறாயே? என்று கேட்டார்கள்.5 அதற்குப் பவுல், சகோதரரே! இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் உன் மக்களின் தலைவரைச் சபிக்காதே என மறைநூலில் எழுதியுள்ளதே என்றார்.6அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்: இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன் என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.9அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச்சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா! என வாதாடினர். 10 வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்து விடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சி படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்.11 மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, துணிவோடிரும்: எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும் என்றார்.


இயேசுவின் போதனை-லூக்கா 8:16 ' எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.17 வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.


இயேசு உயிர்த்து இருந்தால் பலருக்கு காட்சி தந்திருப்பார். பவுலும் 500 பேர் என கதைக்கிறார்.
கதைப்படி உயிர்த்ததான இயேசுவின் சீடர்களோ, ஏன் 500 பேரோ யாரையும் சாட்சிக்கு பவுல் அழைக்கவில்லை. சூழ்ச்சி- எதிருள்ளோரை பிரித்து கெடுக்கும் வழி தான் பயன்படுத்தி உள்ளார்.


மேலுள்ளவை பவுல் சாட்சி வெறும் பொய் எனத் தெளிவாகக் காட்டும்.

6 comments:

  1. பவுலைக் காப்பாற்ற ஏன் அப்போஸ்தலர்கள் வரவில்லை.

    ஏன் உயிரோடான சாட்சிகளை கூபீடவில்லை.

    நல்ல கேள்விகள்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  3. ஏசு உயிர்த்து எழுந்தார் என்பது பற்றி ஹெபர்மாஸ், மைக் லின்கோனா, லீ ஸ்ட்ரொபெல் மற்றும் ஜோஷ் மெக்டவெல் போன்றொர் மிக அதிகமாக எழுதி உள்ளனர். அவற்றை படியுங்கள்.

    நீங்களும் உண்மையை உணர்வீர். பைபிளை தொடர்ந்து படிக்கும் உங்களை கர்த்தர் ஆசிர்வதித்து பரிசுத்த ஆவியை அருளட்டும்.

    ReplyDelete
  4. Jesus Papers by Michael Baigent என்ற நூலிலும் ஏசுவின் மரணம், உயிர்ப்பு கேள்விக்கு உட்படுகின்றன.

    The Miracle by Irwing Wallace எழுதிய நூலில் லூர்து நகரம், பெர்னர்து போன்றவைகளை வைத்து எழுதிய நவீனமும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  5. நன்றி தருமி அவர்களே

    ReplyDelete
  6. John Paul Peter Selvanayagam
    நண்பரே அவர்கள் நூலைப் படித்த பின்னரே இங்கு எழுதப்படிகிறது.

    சுசேஷத்தை அதாரம் எனப் பேசுவது உளறல்

    ReplyDelete

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...