Thursday, August 9, 2012

இயேசு உயிர்த்து எழுந்தாரா-இல்லையே

    

 மாற்கு 16:5 பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள்.6 அவர் அவர்களிடம், ' திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ' உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் 
 மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் 
கல்லறையை விட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.

70 வாக்கில் முதலில் புனையப்பட்ட மாற்கு சுவி 16:1௮ வசனங்களோடு முடிகிறது.

 மத்தேயு28:1 ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.2 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.3 அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது.
5அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ' நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.7நீங்கள் விரைந்து சென்று, ' இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ' எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ' என்றார்.




பைபிள் புனையல் நடையில் வளரும் தெய்வீகமாக்கும் என்பதில்- நடந்த சம்பவத்தை வைத்து அதை முன்பே சொன்னதாக புனைவர்- இது தீர்க்கதரிசனம் நிறைவேறல் ஆகும்.

இயேசு முன்பே  உயிர்த்து எழுவேன் எனவும் எங்கே காட்சி எனத் தெளிவாக தீர்க்கம் சொன்னது



மாற்கு14 :28ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்என்றார்.
 மத்தேயு26:32  நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.



இயேசு  தீர்க்கதரிசனம் நிறைவேறல்

மாற்கு-மூல மாற்கின் 4 - 5ம் நூற்றாண்டின் முந்தைய ஏடுகள் 8ம் வசனத்தோடு முடிகிறது, எனவே காட்சியே இல்லை.

மத்தேயு28: 16 பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள்.17 அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள் 




3 வது சுவி கதாசிரியர்- லுக்கா உயிர்த்த காட்சிகளை ஜெருசலேமெஇலேயே எனப் புனைவார்.  எனவே -//"முன்பே கலிலேயா செல்வேன்"// தீர்க்கம் லூக்கா ஏசு சொல்லவே இல்லை.


 காட்சி ஜெருசலேமில் மட்டும் தான் - உயிர்த்து எழுந்ததான ஈஸ்டர் ஞாயிறு அன்றே வானுலகமும் சென்றார்.

 லூக்கா   24:36  ஜெருசலேமில் சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார்.50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.51 அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.52 அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.53 அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.


  



எது உண்மை இரண்டுமே பொய் தான்.

தேவைக்கு ஏற்ப ஏசு சொன்னதாக வசனங்கள் சேரும்-நீங்கும் என்பதன் ஒரு நிருபமும் இங்கே பார்த்தோம்.



No comments:

Post a Comment

கோயில் நிதியில் அறநிலையத் துறை அதிகாரிகள் பயணம், உணவு செலவு- ஹைகோர்ட் தடை

HC stays order on temple funds for officials attending Ayyappa Sangamam   Sep 19, 2025 ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கான கோயில் நித...