- First Published : 29 December 2015 06:16 PM ISTBy PTI, சென்னை
யோகா குரு பாபா ராம்தேவவின் பதஞ்சலி நிறுவன பொருள்களுக்கு 'பத்வா' விதித்து தமிழ்நாடு தௌகீத் ஜமாஅத் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்கள், மருந்துகள் மற்றும் உணவு பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் ஹோமியத்தை (மாட்டு சிறுநீர்) கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
இஸ்லாமிய நம்பிக்கையின்படி மாட்டு சிறுநீர் என்பது விலக்கப்பட்டது (ஹராம்). எனவே, பதஞ்சலி பொருள்களுக்கு தடை (பாத்வா) விதிக்கப்படுகிறது என தவ்கீத் ஜமாத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நம்பிக்கைக்குக்கு எதிரான பொருள்கள் கலந்துள்ளதாலேயே இஸ்லாமியர்கள் இவ்வகை பொருள்களை தவிர்க்கும் வகையிலே இந்த பாத்வா வெளியிடப்பட்டுள்ளது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment