Thursday, July 12, 2018

ஜான் சாமுவேல்-பேராயர்.அருளப்பா, பாவாணர், தெய்வநாயகம் கூட்டணி திருக்குறளிற்கு செய்யும் மோசடிகளும் கேடும்

திருக்குறளை கிறிஸ்துவ நூல், கிறிஸ்துவத் தொன்மக் கதை நாயகன் ஏசுவின் சீடன் தோமா என்பவர் போதனையில் திருவள்ளுவர் எழுதியதே குறள் என நிருபிக்க தொடர்ச்சியாய் தமிழக கிற்ஸ்துவம் மோசடிகளை செய்து வருகிறது. 
திருக்குறளை கிறிஸ்துவ நூலாக அறிவிக்கும் மோசடியின்  ஆரம்பப் புள்ளிகள் சாந்தோம் சர்ச் பேராயர் ஆர். அருளப்பா, CSI பிரிவின் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியின்    பொன்னு ஏ. சத்தியசாட்சி, எம். தெய்வநாயகம், வி. ஞானசிகாமணி,  பாவாணர் தேவநேயன் எனும் ஒரு பெரும் கிறிஸ்துவக் கூட்டம்.
1969ல் முதல் நூல் “திருவள்ளுவர் கிறித்தவரா?” வெளிவருகிறது அன்றைய முதல்வர் மு.கருணாநிதி வாழ்த்துரையோடு.  அந்நூலில் அருவருப்பான கிறிஸ்துவ நச்சுப் பொய்கள்- 
திருவள்ளுவர் கிறித்தவரா” பக்௧31- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

கிறிஸ்துவப் பன்றித்தன பொய் நூலை- தமிழை தமிழரை திருவள்ளுவரை இதைவிடக் கேவலமாய் கூறமுடியாது எனும்  பாவாணர் கண்டிக்கவே இல்லை, விளம்பரமே கொடுக்கின்றார்.
வள்ளுவரை தமிழ் முனிவராய் வந்த படங்களை நீக்கி மதச் சார்பற்றவராய்  மாற்றிய்தில் தேவநேயப் பாவாணர் கொள்ளும் உவகை பாரீர். கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் “திருவள்ளுவர் கிறித்தவரா?” என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன.// 

1969ல் இதே நேரத்தில் தேவநேயரின் திருக்குறள் தமிழ் மரபுரை- முழுவதும் நச்சு பொய்கள், அருவருப்பாய் வள்ளுவத்தைக் கொச்சை படுத்தல் எல்லாம் நிறைந்த உரையும் வெளியாகிறது.
தெய்வநாயகம் பெயரில் மேலும் பல நச்சு  குப்பை நூல்கள்வெளியாகிறது
 ஐந்தவித்தான் யார்? வான் எது? நீத்தார் யார்? எழு பிறப்பு?? சான்றோர் யார்?

இவற்றில் ஒரு நூல்கூட வள்ளுவர் சொன்னதை, கூறுவதில்லை; இப்படி கிறிஸ்துவ குப்பைகள் எழுத உதவியது பொதுமறை என திருப்பி திருப்பி உளறி, குறளில் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றும் குறள்களை எல்லாம் சிதைத்து பொருள் செய்த பல உரைகளே, பலவும் எழுதியது பெரும் புலவர்களே, ஆனால் கிறிஸ்துவ காலனி திட்டம் பரப்பிய நச்சுபொய் ஆரிய - திராவிடக் கொள்கைகள், அந்தணர் மீது வெறுப்பு வளர்த்தல் இவற்றினால் எழுந்த உளறல் உரைகள் உதவின.
கிறிஸ்துவர் சதிகளில் பைத்தியக்கார உரைகளை எழுதியோர்கள், தங்கள் உரையை சிதைத்து கிறிஸ்துவர் இப்படி செய்ததை கண்டிக்கவும் முடியவில்லை, மேலும் கிறிஸ்துவர் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்களின் வாங்கும் சக்தி, ஆளும் தமிழர் விரோத திமுக ஆட்சி வேறு.
சர்ச்சுகள் ஒரு மாபெரும் மாநாடு - 1972ல்
சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில் மே மாதம் 3,4 நாட்களில் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றது. சர்ச்சுகள் ஒரு மாபெரும் மாநாடு - 1972ல், திருக்குறளில் அன்று ஆய்வில் இருந்த உச்சகட்ட அறிஞர்கள் கிட்டத் தட்ட அத்தனை பேரும் எனலாம், முடிவில் கிறிஸ்துவப் பாவாணர் திருக்குறள் கிறிஸ்துவம் இல்லை என தீர்ப்பு தந்தாராம்.
 


  
 

சர்ச் இத்தோடு நிறுத்தவில்லை; பாவாணர், பேராயர், சத்தியசாட்சி அணி இந்த மாநாட்டை மறைத்தது, திருக்குறளிற்கு பழங்காலம் தொட்டு கிறிஸ்துவ உரை மோசடி ஓலைச் சுவடி தயாரிக்க திட்டம் தீட்டினர்.

ஸ்ரீரங்கம்சேர்ந்த ஜான் கணேஷ் ஐயர் என்பவரை தயார் செய்து, அவருக்கு 1973 -76க்குள் 14 லட்சம் தந்து மோசடி சுவடி தயாராக; சர்ச் செலவில் உலக சுற்றுலா, அன்றைய போப் அர்சருடன் தனி சந்திப்பு எல்லாம் செய்தனர்.
ஆனால் சர்ச் உள்ளே பொறாமை போட்டியால் போலிசுக்கு, நீதிமன்றம் செல்ல, அந்த ஜான் கணேஷ் ஐயர்  குற்றவாளி என தீர்ப்பு வந்தது, ஆனால் தீர்ப்பை நிறுத்தி சர்ச் கோர்டுக்கு வெளி சமாதானம் என அவரை வெளிவிட்டது, இவை அனைத்தும் அன்றைய இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிக்கையில் முழுமையாய் வெளி வந்தது.
சர்ச் - மெட்ராஸ்  பல்கலைக் கழகத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை என அமைத்து, அதில் தெய்வநாயகத்திற்கு - முனைவர் பட்டமும் விற்றது- "திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் - ஒப்பாய்வு" என.
இந்த மோசடி கூட்டத்தோடு ஜான் சாமுவேல் எனும் அறிஞர், இவர் ஆசியவியல் நிறுவன இயக்குனர், அங்கு பல மோசடிகள் செய்தார் என நிருபிக்கப் பட்டு, சிறையும் சென்றார், நீக்கவும் பட்டார், ஆனால் ஜப்பானியர் உதவியுடன் சில சிறு சட்ட ஓட்டைகளால் வெளி வந்தவர்; தோமோ வருகை - தெய்வநாயகம் - வி.ஜி.சந்தோஷம் கும்பலோடு சேர்ந்து கொண்டார். ( ஜான் சாமுவேல் மோசடி, பட உதவி வரலாற்று அறிஞர் திரு.வேதம் வேதப் பிரகாஷ் கட்டுரைகள்
  





செயின்டு தாமஸ் சொல்லிக் கொடுத்து திருவள்ளுவர் கிறிஸ்துவ திருக்குறள் எழுதினார் எனும்படி உலக தமிழ் கிறிஸ்துவ மாநாடுகள் சென்னை, அமெரிக்கா, மலேசியா எனப் பல இடங்களில் ஜான் சாமுவேல் -தெய்வநாயகம் மோசடி குழு நடத்தி உள்ளது.
நடுவில் திருக்குறள் மாநாடுகள்;
 

 

 


திருவள்ளுவரை இழிவு செய்த ஜான் சாமுவேல் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி மாநாட்டில் திருக்குறளை கிறிஸ்துவர் இழிவு செய்தனர் என உள்ளூர் திருக்குறள் மன்றம் வேறோரு மாநாடு நடத்தியது, இந்த நிலையில் இங்கிலாந்து லீவர்பூல் பல்கலைக் கழகத்தில் மாநாட்டில் திருவள்ளுவரை இழிவு செய்த ஜான் சாமுவேல் பின்னால் செல்ல தமிழ் பகைவர்கள், கயமை புலவர்களும் உள்ளனர்

No comments:

Post a Comment

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...