Tuesday, January 10, 2023

அமெரிக்க நாசா விண்வெளி நிறுவனத்தில் மீண்டும் இந்தியருக்கு தொழில்நுட்ப முக்கிய பதவி

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவில் இந்தியருக்கு முக்கிய பதவி 
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் தலைமை தொழில்நுட்ப வல்லுநராக மீண்டும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தினத்தந்தி ஜனவரி 10,
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையக த்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

No comments:

Post a Comment

கோயில் நிதியில் அறநிலையத் துறை அதிகாரிகள் பயணம், உணவு செலவு- ஹைகோர்ட் தடை

HC stays order on temple funds for officials attending Ayyappa Sangamam   Sep 19, 2025 ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கான கோயில் நித...