Tuesday, July 23, 2024

பழனி கோவில் போலி செப்பேடு பெயரில் வெறுப்பு தூண்டுவது நிற்குமா?

பழனி கோவில் போலி செப்பேடு பெயரில் வெறுப்பு தூண்டுவது நிற்குமா?-கருத்து - பேராசிரியர் சங்கரநாராயணன்; ஆசிரியர் - சோழர் செப்பேடுகள்- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வெளியீடு



பழனி கோயிலை ஆதிசைவர்கள் கைப்பற்றினரா? https://www.facebook.com/sankaran.ganapathy.3/posts/pfbid0RZ48MZFHtAmRqkfNPmnHjEQYcsBfQ7JwrmP4Jg8F2XBLWYeVH792BFuiana95uoTl?__cft__[0]=AZXEGmT-PBfAkMPKqSWi24_ETjlRE-IgJVAhPUwauv9E0aswx943TvC5dAmGA0ZjhCEQby4EBU41KFE5XuXg33X4lgQ0xNoFQQsx3UQYcq4BLYhmCcyXSQgS3W_9dcm9nSo&__tn__=%2CO%2CP-R
கீழ்க்கண்ட செப்பேட்டை வெளியிட்ட பழனித் தல வரலாற்றை வெளியிட்ட சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் அதுவரை புலிப்பாணி வழியினர் பூசை செய்ததாகவும் திருமலை நாயக்கரின் காலத்தில் ராமப்பையர் அவர்கள் கையால் ப்ரஸாதம் வாங்க மறுத்து அவர்களை நீக்கி கொடுமுடியிலிருந்து ஐயர்களைக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டு ஆதிசைவர்கள் புகுந்த வரலாறு என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்.

பழனி சைவ சித்தாந்த சபை இதனை வெளியிட்டிருக்கிறது. இதனை ஆதாரமாகக் கொண்டே, பல கோயில்களை ஆதி சைவர்கள் கைப்பற்றியதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். இந்தச் செப்பேட்டின் நிலையைப் பாருங்கள். சாலிவாஹன சகாப்தம் 1366 அதாவது பொயு 1444. கலியுக வர்ஷம் 4578 அதாவது பொயு 1476. இரண்டு வருடங்களும் ஒத்தே வரவில்லை. ஒன்று தவறென்று கொண்டாலும் இரண்டுமே திருமலைநாயக்கர் காலமில்லை.
திருமலைநாயக்கர் 1623-இலிருந்து 1659 வரை ஆண்டவர். அதாவது போகட்டும். கூட்டி வந்தவர்கள் அனைவரும் ஐயர்கள். அதாவது ஸ்மார்த்தர்கள். அப்படியானால் கோயில் ஸ்மார்த்தர்கள் கையில் இருந்திருக்கவேண்டும். அதோ இல்லை. இதற்கு மாறாக மல்லிகார்ஜுன ராயரின் காலத்தில் பழனியில் த்ரிஸந்த்யா காலமும் மஹாபூஜை நிகழ்ந்ததை அந்தக் கோயில் கல்வெட்டே காட்டுகிறது.
ஆக ஆதிசைவர் பூஜை மல்லிகார்ஜுனர் காலத்தில் இருந்தமை தெளிவாகிறது. அதற்கு முந்தைய வீரபாண்டியன் கல்வெட்டிலும் முடிகொண்ட சோழபட்டன் என்பவர் கையெழுத்திட்டிருப்பதும் தெளிவு. ஆகவே கிடைக்கும் கல்வெட்டுக்களில் ஆதிசைவர் பூஜை நிகழ்ந்தது உய்த்துணரக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்தக் காலமொவ்வாத போலிச்செப்பேட்டை வைத்து இவ்விதம் நிர்ணயித்திருப்பது எவ்வாற்றானும் ஒவ்வாத செயல்.
இது போன்ற போலிச் செப்பேடுகள் 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி பலவுள. சென்னை அருங்காட்சியகத்திலுள்ள செப்பேடு ஒன்று காஞ்சி காமாக்ஷி கோயிலைப் பற்றியது. அன்னையின் தேர் வரும்போது யாரோ ஒரு மந்த்ரவாதி அதனைத் தடுக்க அதனைக் கம்பளத்தார் விலக்கியதாகக் கூறும் இந்தச் செப்பேடு சகவர்ஷம் 1098, கலிவர்ஷம் 4421-ஐச் சேர்ந்தது. இது போலிச்செப்பேடு.
இதனைப் போலவே சோழர் செப்பேட்டிலும் கரிகாலசோழர் காலத்து கதையைக் கூறும் செப்பேட்டின் எழுத்தமைதி 17 ஆம் நூற்றாண்டு. இது போன்ற போலிச் செப்பேடுகள். ஏராளம். இந்த ஒற்றைச் சான்றை வைத்து ஆதிசைவர்கள் பல கோயில்களைக் கைப்பற்றினர் என்று கூறுவதெல்லாம் அறியாமையின் உச்சமன்னியில் வேறில்லை.



No comments:

Post a Comment

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...