Sunday, January 17, 2021

பைபிளில் & குரானில் பெண்கள் மாதவிடாய் தீட்டு ஒதுக்க சட்டங்களும்

 லேவியராகமம் 15:

பெண்களுக்கான விதிமுறைகள்
19 “இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 20 அவள் மாத விலக்காக இருக்கும்போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும். 21 அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான்.22 அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 23 அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான்.
24 “அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும்.
25 “ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். 26 அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும். 27 இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். 28 அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். 29 எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 30 ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
31 “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார்.
32 இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும், 33 மாதவிலக்கால் தீட்டான பெண்களுக்கும், தீட்டானவளோடு படுத்துக்கொண்டவனுக்குமுரிய விதிகள் இவைகளேயாகும்.

மேலும் படிக்க‌

முஸ்லிம் மசூதிகளில் தீண்டாமை ஜாதிகள்- பிரிவினைகள் (காணொளி)

இஸ்லாம் -ஒட்டக மூத்திரம், நபி மூத்திரமும் சளியும்; காணொளி + ஹத்தீஸ் 

லேவியராகமம் 12:
12:1 மேலும் கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: ஒரு பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தால், அவள் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவளாக இருப்பாள். இது மாதவிலக்காக இருக்கும் நாட்களைப் போல் இருக்கும். எட்டாவது நாள் அந்த குழந்தை விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். பிறகு அவள் முப்பத்துமூன்று நாட்கள் இரத்த சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அந்நாட்களில் அவள் பரிசுத்தமான எந்தப் பொருட்களையும் தொடவோ, பரிசுத்தமான எந்த இடத்திற்குள்ளும் நுழையவோ கூடாது. அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் இரு வாரங்களுக்குத் தீட்டாக இருப்பாள். அந்நாட்கள் அவளுக்கு மாத விலக்கான நாட்களைப் போன்றே கருதப்படும். இரத்த சுத்திகரிப்புக்கு அவளுக்கு அறுபத்தாறு நாட்கள் தேவைப்படும்.

முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்  
3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :  
2. ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.

''ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் குர்ஆனைத் தொடாத நிலையில் அதை ஓதிக்கொள்ளலாம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. மறந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படும் அத்தியாவசிய மான நிலையில் வேண்டுமானால் குர்ஆனை ஓதலாம்.
4. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு பெண் மக்காவிலுள்ள கஅபாவை வலம் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட போது ''ஹாஜிகள் செய்யவேண்டிய எல்லா கிரியை களையும் நீ செய்து கொள்! ஆனால் 'தவாஃப்' மட்டும் செய்யாதே! சுத்தமான பின்பே அதைச் செய்துகொள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.'' (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
 5. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் ஒரு பெண் பள்ளிவாசலில் தங்குவதும் கூடாது. 
''மாதவிடாய்ப் பெண்ணிற்கும், குளிப்பு கடமையான வர்களுக்கும் பள்ளிவாசலில் தங்குவதை நான் அனுமதிக்க வில்லை'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, இப்னுமாஜா)

''(நபியே!) மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள். 'அது தீட்டாகும். எனவே மாதவிடாயின்போது பெண்களைவிட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின்னர் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கிறானோ அதன் படி அவர்களிடம் செல்லுங்கள்...
(திருக்குர்ஆன் 02:222)
புகாரி ஹதீஸ்
295. 'நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவேன்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
296. 'ஒருவர் 'தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?' என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா 'அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்' என்றார்'' என ஹிஷாம் அறிவித்தார்.
297. 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
298. 'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்'' என உம்முஸலமா(ரலி) அறிவித்தார்.
299. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
300. 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
301. 'நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் 'இஃதிகாப்' இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
302. 'எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
303. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்'' என மைமூனா(ரலி) அறிவித்தார்.

No comments:

Post a Comment

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...