Friday, March 25, 2022

காஷ்மீர் பைல்ஸ் -முஸ்லிமாக‌ மதம் மாறு, செத்துப்போ அல்லது ஓடிவிடு

  முஸ்லிமாக‌ மதம் மாறு, செத்துப்போ அல்லது   ஓடிவிடு ( விட்டு)   

 Kashmir Files -Raliv, galiv, chaliv 

அரேபியக் குர் ஆன் ஜகதை வணக்க முஸ்லிமாக மதம் மாறு, செத்துப்போ அல்லது (காஷ்மீரை விட்டு) ஓடிவிடு என்று முழங்கிய பியிவினைவாதிகளால் சென்ற தலைமுறை காஷ்மீரி பண்டிட்கள் அங்கிருந்த பட்ட துயரத்தை தம் அடுத்தத் தலைமுறைக்குச் சொல்வதாக உலகிற்குச் சொல்லும் படம் kashmiri files.  

   

காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்ற பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகின்றது‌... நீதிபதிகளிலிருந்து, அப்பாவி பெண்கள் குழந்தைகள் வரை கொல்லப்படுகிறார்கள்! இந்தப் பிரிவினைவாதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் தான் கதாநாயகன்.‌.. ஆனால் அவர் படிக்கும் கல்லூரி A(J)NU பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் நடக்கின்றது...


ஆட்சி உங்களிடம் இருக்கலாம்... ஆனால் system எங்களிடம் தான் இருக்கும் என்ற வசனம் மிகவும் நிதர்சனம்! பாஜக, காங்கிரஸ் யார் ஆண்டாலும் கல்வி, மீடியா அதன் வழியாக செய்யப்படும் கருத்துருவாக்கம் (narrative) முழுக்க முழுக்க இடதுசாரிகளுடையது தான்! நம்மாட்கள் அவற்றை எளிதில் அசைத்து விட இயலாது! 

மீடியாக்களால், கல்விக்கூடங்களால் உருவாக்கப்படும் இந்த narrative கதாநாயகனால் தன் சுற்றத்தாரின் நேரடி அனுபவங்களை கேட்டு வந்து உடைக்கப்படுகின்றது! காஷ்மீரின் பழைய அறிவுப் பாரம்பரியத்தைப் பற்றி விளக்கும் இடம் மிக அருமை! பண்டிட்கள் மட்டுமல்ல குஜ்ஜார்கள், கிருத்தவ, சீக்கிய, பௌத்தர்கள் ... ஏன் திவீரவாதத்தை ஆதரிக்காத மிதவாத முசுலிம்களும் கூட வேட்டையாடப்பட்டனர் என்ற உண்மை பதிவு செய்யப் படுகின்றது! 

படத்தின் முடிவாக இந்திய ராணுவம் என்று பொய் சொல்லிக் கொண்டு தீவிரவாதிகள் கதாநாயகனின் தாயை கொல்லும் கொடூரம் அவர்களின்  உண்மை முகத்தைத் காட்டுகிறது! அதைத் தொடர்ந்து அப்பாவிக் குழந்தைகள், முதியவர்கள் என்று இரக்கமே பார்க்காமல் பண்டிட்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் சுடப்படும் துப்பாக்கிச் சத்தமும் நம் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே உள்ளது!

!

 




No comments:

Post a Comment

கோயில் நிதியில் அறநிலையத் துறை அதிகாரிகள் பயணம், உணவு செலவு- ஹைகோர்ட் தடை

HC stays order on temple funds for officials attending Ayyappa Sangamam   Sep 19, 2025 ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கான கோயில் நித...