அந்தோணி அஜய்.ர Published:07 Sep 2021 7 PM Updated:07 Sep 2021 7 PM
என் ஆட்சியில் அனைவரும் சமம். எனக்கும் என் தந்தைக்கும் இரு வேறு கருத்தியலில் உடன்பாடு உள்ளது அனைவரும் அறிந்ததே - சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்
சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை நந்த குமார் பாகல், பிராமண சமுதாயத்தினரை இழிவாகப் பேசியதாக 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள டி.டி நகர் காவல் நிலையத்தில் சர்வ பிராமின் சமாஜ் சார்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 86 வயதாகும் நந்தகுமார் மீது பதியப்பட்டுள்ள புகாரில் இந்திய தண்டணை சட்டம் 153 ஏ(சாதி, மத, இட அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்துதல்) மற்றும் 50 5(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரில் அவர் பிராமணர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எனவும் மக்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களுக்குள் பிராமணர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் மக்களை கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
பூபேஷ் பாகெலின் தந்தை கைது
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் நந்தகுமார், "பிராமணர்கள் மீண்டும் கங்கையில் இருந்து வால்காவுக்கு செல்லத் தயாராக வேண்டும்" எனக் கூறியுள்ளார். மேலும் கடவுள் ராமரையும் அவமதித்துப் பேசியதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. தந்தையின் கைதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த சத்தீஸ்கர் முதல்வர், " என் ஆட்சியில் அனைவரும் சமம். எனக்கும் என் தந்தைக்கும் இரு வேறு கருத்தியலில் உடன்பாடு உள்ளது அனைவரும் அறிந்ததே, எங்கள் அரசியல் பார்வையும் நம்பிக்கையும் வெவ்வேறானவை. ஒரு மகனாக நான் அவரை மதிக்கிறேன் ஆனால் ஒரு மாநில முதல்வராக அவரின் தவறை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. சட்டத்தை யாராலும் மீற முடியாது. முதலமைசரின் தந்தையானாலும் சரி!"
No comments:
Post a Comment