அண்ணாமலை படத்திற்கு முன்பு ஆடு வெட்டுவீர்கள்.. நாங்கள் அதை வேடிக்கை பார்க்கணுமா.. ஹைகோர்ட் உத்தரவு
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40-க்கு 40 தொகுதிகளை கைப்பற்றியது. அதே சமயத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் பரிதாப தோல்வியை தழுவியது. அதேபோல, தமிழகத்தில் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று மார்த்தட்டி வந்த பாஜக, பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டையே இழந்தது. அதுவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரங்களில் பேசும் போது, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே பாஜகவின் வாக்குகள் எகிறப் போகிறது என்றெல்லாம் பேசி வந்தார். ஆனால், அவர் போட்டியிட்ட கோவை மக்களவைத் தொகுதியிலேயே படுதோல்வியை சந்தித்தார்.
இதனிடையே, கோவை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அண்ணாமலையை கிண்டல் செய்யும் வகையில், "கோயம்புத்தூரில் சுற்றித்திரியும் ஆடு விரைவில் பிரியாணி ஆக்கப்படும்" எனக் கூறி வந்தனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை ஆடுகளின் கழுத்தில் தொங்க விட்டு, முகவினர் அவற்றை வெட்டி வந்தனர். கோவை மட்டுமல்லாமல் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி என பல மாவட்டங்களில் திமுகவினர் இவ்வாறு செய்து வந்தனர்.
இந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "சாலையில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டிவிட்டு, அதை வெட்டுவது மிகவும் கொடூரமான செயல். இதையெல்லாம் நீதிமன்றம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இதுபற்றி தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
அண்ணாமலை படத்தோடு ஆடு வெட்டிய விவகாரம்; 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு - காவல்துறை தகவல்! - Annamalai goat photo issue
Annamalai K: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படத்தை ஆட்டின் தலையில் போட்டு நடுரோட்டில் ஆட்டை வெட்டிய விவகாரம் தொடர்பாக, மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கமளித்துள்ளது.
https://www.youtube.com/watch?v=BJ-3jjjF84E
Published : Aug 20, 2024, 7:32 PM IST
சென்னை: சமீபத்தில் 2024 மக்களவைத் தேர்தலில், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்ததைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் ஆட்டின் தலையில் அண்ணாமலை புகைப்படத்தைப் போட்டு நடுரோட்டில் ஆட்டை திமுகவினர் பலியிட்டனர். அந்த வீடியோவை DMK IT WING சமூக வலைத்தளங்களிலும் பரப்பினர்.
இதில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இதே விவகாரம் தொடர்பாக சிவபிரகாசம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரத், ஆசைத்தம்பி, ராமன் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் புலன் விசாரணை நடந்து வருவதாகவும், ஆடு பலியிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்ததா என்பதையும் விசாரிக்க காவேரிப்பட்டினம் காவல் ஆய்வாளரை அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
No comments:
Post a Comment