Thursday, November 13, 2025

ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்கள்- அரியக்குடி சிதம்பரம் செட்டியார் அன்னதான அறக்கட்டளை சொத்துக்களை கைப்பற்றல்? கேஎன்.நேரு & co

அரியக்குடி அறக்கட்டளை சொத்துக்கள் பரிமாற்றத்தில் ரூ.137 கோடி மோசடி அமைச்சர் நேரு தம்பிக்கு 'நோட்டீஸ்' ADDED : ஜூன் 22, 2025



https://www.dinamalar.com/news/tamil-nadu-news/notice-issued-to-minister-nehru-thambi-for-rs-137-crore-fraud-in-ariyakudi-trust-property-transfer/3962364

சென்னை:மோசடி ஆவணங்கள் வாயிலாக அரியக்குடி சிதம்பரம் செட்டியார் அன்னதான அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை பரிமாற்றம் செய்த அறங்காவலர்கள், வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அறக்கட்டளை சந்ததியினர் தொடர்ந்த வழக்கில், பத்திரப்பதிவு ஐ.ஜி., மற்றும் அமைச்சர் நேருவின் தம்பி கே.என்.மணிவண்ணன் உள்ளிட்டோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த பழனியப்பன் ராமசாமி, சூளைமேடு பகுதியை சேர்ந்த என்.சரவணன் ஆகியோர் தாக்கல் செய்த மனு:

நாங்கள், திருச்சி அரியக்குடி சிதம்பரம் செட்டியார் அன்னதான அறக்கட்டளையை நிறுவிய சாத்தப்ப செட்டியார், அண்ணாமலை செட்டியார் ஆகியோரின் சந்ததியினர். அறக்கட்டளைக்கு சொந்தமாக ஏராளமாக சொத்துக்கள் உள்ளன. 

செல்லாதவை

இந்த அறக்கட்டளை அறங்காவலரான சிவகங்கையை சேர்ந்த நாராயணன் செட்டியார், கோவையை சேர்ந்த குமரப்பன் செட்டியார் ஆகியோர், அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை போலி ஆவணங்கள் வாயிலாக பரிமாற்றம் செய்துஉள்ளனர்.

திருச்சியை சேர்ந்த செந்தில்குமார், ஸ்ரீதேவி, பிரியதர்ஷிணி, வடிவேல் மற்றும் கோவையை சேர்ந்த கே.என்.மணிவண்ணன் ஆகியோருக்கு, அறங்காவலர்கள் இருவரும் செய்த சொத்து பரிமாற்றங்கள் செல்லாதவை. அவை அறக்கட்டளையை கட்டுப்படுத்தாது.

அறங்காவலர்கள் இருவராலும், சிங்காநல்லுார் மற்றும் ஸ்ரீரங்கம் சார் - பதிவாளர் வாயிலாக, 2020 மற்றும் 2024ம் ஆண்டுகளில் மூன்று சொத்து பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 

No comments:

Post a Comment

தாலிபான் வரலாறு

தாலிபானின் எழுச்சி: பாகிஸ்தானில் தாலிபானின் வரலாறு (தாரிக்-ஏ-தாலிபான்) மற்றும் 2025 இல் தற்போதைய நிலைமை அறிமுகம் தாலிபான் (Taliban), பஷ்டோ...