ஜேம்ஸ் வசந்தன் -வெளியூர் சென்றால் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மீன் கடைகளில் பெரும்பாலும் பழசு தான். நான் நேரடியாக பார்த்துள்ளேன்.
நான் ஒரு முறை ஒரு கடைக்காரரிடம் கேட்டேன். இரவு 11மணி ஆகி விட்டது. இவ்வளோ மீன் உள்ளதே உங்களுக்கு நட்டம் தானே வரும் என்றேன்.
உடனே அவர் எங்களுக்கு எப்போதும் நட்டம் வராது என்றார். எப்படி என்று கேட்கவே, இந்த மீன்களை கழுவி கெட்டு போகிற வரை பயன்படுத்துவோம். அதன் பிறகு மீன் கெட்டு போகும். அப்போது அந்த மீன்களை காய வைத்து கருவாடு ஆக்கி விற்பனை செய்வோம் என்றார்.
எனக்கு அதுவரை இப்படி தான் செய்கிறார்கள் என்று தெரியாது.
மதுரையில் மீன் கடையில், மீதி போன மீன்களை ஒயின் ஷாப் கடைக்காரர்கள் வாங்கி கொண்டு சென்று விடுவார்கள்.
அதே போல சிக்கன் 65கடையில் மீதி போன கறிகளை Fried Rice கடைக்காரர்கள் வாங்கி சென்று விடுகிறார்கள்.
பெரிய நட்சத்திர உணவகத்தில் மீதி போன எண்ணெய்களை 100கிராம் 10 ரூபாய்க்கு பாக்கெட் கறி சிக்கன் விற்கும் தெரு கடைக்காரர்கள் வாங்கி சென்று விடுகிறார்கள்.
பொதுவாக ஸ்டாண்டர்ட் ஆன பிரபல கடைகளில் கூட ஆட்டுக்கறியில் கலப்படம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டது உண்டு.
தெருவோர கடைகளில் சுத்தம், சுதாதாரம் அறவே இருப்பதில்லை.
நாம் பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதே சிறந்தது.


No comments:
Post a Comment