Monday, January 5, 2026

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் விக்கிரகங்களை மீட்க கள்ளர் சேனை 1755 நிகழ்த்திய கொரில்லா போர்

 நத்தம் கணவாய் போர் - திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் (கோவில்குடி) ஆலய விக்கிரகங்களை மீட்க தமிழ்க்குடியினர் நிகழ்த்திய கொரில்லா போர்

சங்க காலத்திலிருந்து திருமால் வழிபாட்டில் பெரும் பற்று கொண்டிருந்தனர் கள்ளர் குடியினர். திருமால் வழிபாட்டை முழுக்க தமிழ்ப்படுத்தியதிலும், ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற ஆலய கட்டமைப்பிலும் வழிபாட்டிலும் தொன்று தொட்டு பங்குபெற்றதும் திருமங்கையாழ்வார் போன்ற பெருவீரர் பெருமக்கள் வைணவத்தொண்டாற்றியதும், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்ததும் அனைவரும் அறிந்ததே.
கர்னல் ஹெரான் கோவில்குடியில் உள்ள கள்ளர்கள் பூர்வீகமாக வணங்கக்கூடிய திருமோகூர் விஷ்ணு கோவிலை கொள்ளையடிக்க திட்டமிட்டு, கோவிலை சுற்றி காவலுக்கு இருந்த கள்ளர்களுடன் சண்டையிட்டு, அங்கிருந்த அனைத்து கள்ளர்களையும் கொன்றான்.
கோவில் கதவையும் உடைத்து, எரியூட்டவும் ஹெரான் திட்டமிட்டான். இதனை ஏற்று கான்சாகிப் (மருதநாயகம்)மும் படைவீரர்களும் தீயிட்டு கதவை தகர்த்து உள்ளே நுழைந்து இஷ்டம் போல் அனைத்தையும் சூரையாடி கோவிலை தரை மட்டமாக்கினர். மேலும் கள்ளர்கள் காலங்காலமாக வழிபடும் அவர்களது சாமி சிலையை எடுத்தனர்.
இந்த தகவல்கள் கள்ளர் நாடுகள் முழுவதும் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜமால் சாகிப் என்பவன் தலைமையில் 1000 சிப்பாய்கள் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட தயாராயினர். ஆனால் அங்கிருந்து திருச்சிக்கு நேரடியாக செல்லும் பாதை கள்ளர்கள் வாழும் அபாயகரமான பகுதியாதலால், கேப்டன் ஸ்மித் என்பவர் தலைமையில் 100 ஐரோப்பியர்கள், 4 கம்பனி சிப்பாய்கள் மதுரையில் இருந்து 20 கிமீ தொலைவில் (நத்தம் கணவாயின் தெற்கு எல்லையில்) உள்ள வெளிச்சி நத்தம் எனும் கோட்டையை நோக்கி செல்ல திட்டமிட்டனர்.
மதுரைக்கு தனது படைகளுடன் வந்த ஹெரானுக்கு பிரிட்டீஸ் கவுன்சிலிடம் இருந்து அழைப்பு வருகிறது, அதனால் ஒட்டு மொத்த பிரிட்டீஸ் படையும் திருச்சி நோக்கி செல்லத் தயாராகின்றன.
ஆனால் கிழம்புவதற்கு முன்பாக பிரிட்டீஸ் உளவுத்துறையிடம் இருந்து கர்னல் ஹெரானுக்கும் அவரது படைகளுக்கும் ஒரு தகவல் வந்தது. மிகவும் ஆபத்தான நத்தம் கணவாயை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறது.
கர்னல் ஹெரான் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்து தமது ஆங்கிலேய படைகளை சிறு சிறு குழுக்களாக பிரித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நத்தம் கணவாய் பகுதி வழியாக அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். கர்னல் ஹெரான் எதிர்பார்த்தபடி எந்த ஒரு தாக்குதலும் கள்ளர்கள் தரப்பில் இருந்து நடத்தப்படவில்லை. ஆனால் கணவாயின் இருபக்கமும் பதுங்கி இருந்த கள்ளர் சேனை தாக்குவதற்கு காத்துக் கொண்டிருந்தது. ஆங்கிலேய படை ஒவ்வொன்றையும் முன்னேறவிட்டு பின்னால் வந்த படையை வழிமறித்து தாக்கியது. தமிழர் நிலத்தின் ஆகப் பெரும் ஆயுதங்கள் அத்தனையையும் அன்று கள்ளர் சேனை பயன்படுத்தியது.
ஹரானுக்கு முன் மதுரை கமாண்டோ செர்ஜியண்ட கௌல்ட் (Sergeant gould) என்பவர் தலைமையில் சென்ற சிப்பாய்கள் அனைவரும் கள்ளர்களால் நத்தம் பகுதியில் கொல்லப்பட்டனர். அங்கு சென்ற அனைவரையும் கள்ளர் படைகள் ஊசிமுனை அளவு கூட ஈவு இரக்கமின்றி குத்தி சரித்துவிடுகிறார்கள்.
கள்ளர் படையின் நோக்கமான கோவில்குடி குலதெய்வ விஷ்ணு சிலைகள் ஹெரானின் படையிடம் இருந்தும், கோவிலை அழித்த முகமதிய படையினரிடமிருந்தும் மீட்கப்பட்டன.
தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆங்கிலேயப்படை பெரும் உயிரிழப்புகளை (3% மட்டுமே எஞ்சினர். 97% கொல்லப்பட்டனர் - war casualty of the British was highest in this gorilla attack by Kallars, a Tamil community with 970 out of 1000 getting brutally slaughtered) சந்தித்தது இந்த நத்தம் கணவாய் போரில் தான். வருடம் 1755.
இதற்குப் பிறகு பெருமளவில் ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டது மருது பாண்டியர்களால்.
கள்ளர் குடியினரின் இப்பெரும் சமரை நினைவுகூர்ந்து கோயிலின் தேர் இழுக்கும் உரிமை திருமோகூர், பூலாம்பட்டி, கொடிக்குளம், சிட்டம்பட்டி, வௌவால் தோட்டம், ஆளில்லாங்கரை கிராம கள்ளர் பெருமக்களுக்கு வழங்கப்பட்டது.
நன்றி: விக்கிபீடியா மற்றும் கள்ளர் வரலாறு வலைப்பதிவு

No comments:

Post a Comment

ஈரோட்டில் இந்து பொது மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும் தமிழர்- மக்கள்

இந்து பொது  ம யானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும்  தமிழர்  மக்கள் - ஈரோட்டில் என்ன பிரச்னை?  கட்டுரை தகவல் எழு...