Monday, January 5, 2026

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கருவறைக்குள் சென்று அபிஷேக நீரை தலையில் ஊற்றிதீட்சிதர்கள் மீது தாக்குதல்

 சிதம்பரம் நடராஜர் கோவிலில் கருவறைக்குள் சென்று தீட்சிதர்கள் மீது தாக்குதல் : 


சிதம்பரம் நடராஜர் கோயிலில் கருவறைக்குள் சென்று தீட்சிதர்கள் மீது தாக்கி,  சாமியை அவமரியாதை செய்துள்ளனர். மார்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது நடைபெற்ற இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் சனிக்கிழமை பிற்பகல் மார்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கருப்பு பேண்ட், கருப்பு சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் நடராஜர் கோவிலில் தனி கோயிலாக உள்ள சிவகாமி அம்மன் கோயிலுக்குள் சென்று அங்குள்ள கருவறைக்குள் அத்திமீறி சென்று அபிஷேகத்திற்காக வைத்திருந்த நீரை தலையில் ஊற்றி கடவுள் இல்லை நான் தான் கடவுள் என கூறி கோஷமிட்டு சாமி சிலையும் அவமரியாதை செய்துள்ளார். அதனை தடுக்கச் சென்ற சிவ கணேஷ் தீட்சிதர் (51) மற்றும் ஊழியர் கண்ணன், காவலாளி வளையாபதி ஆகியவரை பலகை கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் இருவர் காயம் அடைந்துள்ளனர். 

இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும், வழக்கும் பதிவு செய்யாமல் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறி அவரை அவரது சகோதரரை அழைத்து அனுப்பி விட்டனர். 

காவல்துறை ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை. காவல் தெரியும் முறையாக வழக்கு பதிவு செய்து அவரை மனநல காப்பகதற்க்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும், ஏன் அதை செய்யவில்லை? 

தமிழகத்தில் இந்துக்கள் மீதும், இந்து கோயில்கள் மீதும தாக்குதல் தொடர்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணமாக திகழ்கிறது. காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டுள்ளது, இச்சம்பவம் முன்னுதாரணமாக உள்ளது. 

கருப்பு பேண்ட் கருப்பு சட்டையுடன் சென்ற அந்த வாலிபரை தீச்சதர்களும், பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவருக்கு உடனடியாக காவல் நிலையத்தில் வேறு கலர் சட்டை வழங்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இந்துக்கள் மத்தியில் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

ஈரோட்டில் இந்து பொது மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும் தமிழர்- மக்கள்

இந்து பொது  ம யானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும்  தமிழர்  மக்கள் - ஈரோட்டில் என்ன பிரச்னை?  கட்டுரை தகவல் எழு...