அன்னிய மதம் மாறியவர் - தங்கள் ஜாதி பெயரில் சர்டிபிகெட் வாங்கி தமிழர் உரிமை பரிக்கும்ப்போது இதற்கு ஏன் தடை
செங்குந்தர் மகாஜன சங்கத்தின் பெயரில் உள்ள ‘சாதியை’ நீக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
சாதிப்பெயர்களை நீக்காத சங்கங்களை சட்டவிரோத சங்கங்களாக அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும். இந்தப்பணிகளை மூன்று மாதங்களுக்குள் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இதேபோல சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பெயர்களிலும் உள்ள சாதிப்பெயர்களையும் 4 வார காலத்துக்குள் நீக்க வேண்டும். அப்படி நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்’’ என உத்தரவி்ட் டிருந்தார்.
இந்நிலையில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், ‘‘எங்களது நோக்கமே சிறப்பு அதிகாரியின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென்பதுதான். மேலும், சங்கங்களின் பெயர்களில் உள்ளசாதிப்பெயர்களை நீக்க வேண்டுமென யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயரை நீக்கவேண்டுமென தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
அதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை மேல்முறையீட்டு மனுதாரரான தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் அமல்படுத்த இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment