Monday, January 12, 2026

ஈவெராமசாமியார் புண்ணாக்கு புரட்சி - ஒரே மணமேடையில் ஒரு மணமகனுக்கு - இரு பெண்களோடு திருமணம்

 முதல் “புண்ணாக்கு சுயமரியாதைத் திருமணம்’’ நடைபெற்றதன் பின்னணியைப் பார்ப்போம். 

அருப்புக்கோட்டையின் அருகே உள்ளது சுக்கிலநத்தம் நிலங்களுக்கு உரிமை துரைசாமி ரெட்டியார் என்ற சுப்பாரெட்டியார் பெருஞ்செல்வர்; இருபது வயதுள்ள ஒரே மகன் அரங்கசாமி ரெட்டியார்.

சுக்கிலநத்தத்திலுள்ள அழகர்சாமி ரெட்டியாரையும் சீநிவாச ரெட்டியாரையும் சந்தித்து இதுகுறித்துத் துரைசாமி ரெட்டியார் பேசினார். அவர்கள் இருவரும் தத்தம் மகளை துரைசாமி ரெட்டியாருக்கு அளிக்க முன் வந்தனர். அழகர்சாமி ரெட்டியார் மகள் நாகம்மாளும் சீநிவாச ரெட்டியாரின் மகள் ரத்தினத்தாயம்மாளும் அரங்கசாமி ரெட்டியாரைத் திருமணம் செய்ய விரும்பினர். மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரும் இதை ஏற்றுக் கொண்டனர்.

ஈ.வெ.ராமசாமியார் 28.05.1928 அன்று சுக்கிலநத்தம் வந்து திருமணத்தை நடத்தி வைப்பதாக எழுதினார். திருமண அழைப்புகள் அவருக்கு அனுப்பப்பட்டன.

துரைசாமி ரெட்டியார் என்ற அய்யாரெட்டியாரின் சகலப்பாடி ஆவல்சூரன்பட்டி நாராயண ரெட்டியார். இவர் மகன் கோபால்சாமி ரெட்டியார். இவரும் தம் திருமணத்தை ஈ.வெ.ராமசாமியாரை கொண்டே முடித்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். அரங்கசாமி ரெட்டியாருக்கு வாழ்க்கைப்பட விரும்பியவர் இருவர். இவர்களைப் போலவே கோபால்சாமி ரெட்டியாரை இணைத்துக் கொள்ளவும் இரு பெண்கள் முன் வந்தனர். சிரோன்மணி அம்மாளும் கமலத்தம்மாளுமே ஆவர் இம்மணப் பெண்கள்.

முதல் திருமண மேடையிலேயே இந்தத் திருமணம் நடைபெற முடிவாயிற்று. அரங்கசாமி ரெட்டியாரை மணம் புரிய இருக்கும் ரத்தினத்தாயம்மாளும், கோபால்சாமி ரெட்டியாரை மணம் புரிய இருக்கும் சிரோன்மணி அம்மையாரும் உடன்பிறந்தவர்கள்.

 28.02.1929 அன்று காலை சுக்கிலநத்தத்தில் ஈ.வெ.ராமசாமியார் காலை பத்து மணிக்குத் திருமணம் நடைபெற்றது 

https://viduthalai.in/100774/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3/

No comments:

Post a Comment

ஈவெராமசாமியார் புண்ணாக்கு புரட்சி - ஒரே மணமேடையில் ஒரு மணமகனுக்கு - இரு பெண்களோடு திருமணம்

  முதல் “ புண்ணாக்கு  சுயமரியாதைத் திருமணம்’’ நடைபெற்றதன் பின்னணியைப் பார்ப்போம்.  அருப்புக்கோட்டையின் அருகே உள்ளது சுக்கிலநத்தம் நிலங்களுக்...