Friday, February 5, 2021

லூசிங்க்டன் -கிறிஸ்துவ மதவெறி ஆங்கிலேய கலெக்டர் திருச்செந்தூர் முருகனிடம் மன்னிப்பு கேட்டு பணிந்த வரலாறு

திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிகச் சூடாக இருக்கும்

1799 ஜனவரி 12-ல், திருநெல்வேலி கலெக்டராக லூசிங்டன் பதவி ஏற்றார்.முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்! 
‘சிக்கலுக்கு வேல் வாங்க செந்தூரில் சம்ஹாரம்’ என்று கூறுவார்கள்.சிக்கலில் சிங்காரவேலர் திருக்கோவிலில் வேல் வாங்கும் விழாவும், திருச்செந்தூர் சூரசம்ஹார  விழாவும் புகழ் பெற்றவை என்பதே அதன் பொருளாகும். சிக்கல் சிங்கார வேலர் தாயிடம் வேல் வாங்கும்பொழுது அவருடைய திருமுகத்தில் வியர்வை துளிகள் அரும்பும் அதிசயத்தை இன்று நீங்கள் சிக்கல் சென்றாலும் பார்க்கலாம்.
“மனிதர்களுக்கு தானே வியர்வை அரும்பும். கடவுளுக்கும் வியர்க்குமா என்ன…?” என்று நீங்கள்  கேட்கலாம்.
குழந்தை வேலனாக பாலசுப்ரமணினாக முருகன் எளிதில் சூரசம்ஹாரம் செய்துவிட்டான். அசுரர்களை அழிக்க அவன் மிகவும் பிரயத்தனப்படவில்லை. சுலபமாகவே அது  நிறைவேறியது.
சிக்கலில் வியர்வை அரும்புவதன் ரகசியம் இது தான். மனிதர்கள் தங்கள் முகத்தில் வழியும் வியர்வையை எப்படி அனாயசமாக துடைத்துக்கொள்கிறார்களோ, அதே போன்று அசுரர் கூட்டத்தையும் குழந்தை வேலன் அனாயசமாக துடைத்தெறிந்தான்.
சூரபன்மன் சாதாரண அசுரன் அல்ல. அவனது வலிமையையும் கொடுங்கோன்மையையும் கந்த புராணத்தை முழுமையாக படித்தால் தெரிந்து கொள்வீர்கள்.
“என் அடியவர்கள் தீய சக்திகளை கண்டு ஒருபோதும் அஞ்சவேண்டியதில்லை. அத்தீய சக்திகளை அழித்தல் என்பது எமக்கு வியர்வையை துடைத்தெறிதல் போல, மிக மிக எளிதான செயலே” என்று கூறுகிறான் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன். இதே போன்று திருச்செந்தூர்  முருகனுக்கும் வியர்வை அரும்புவது உண்டு.
திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்…சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
 
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது.சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல்  திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில்  எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு  நடைபெறும் வழிபாடுகளை  கண்டார்.
இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன்.
அங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள்..?” என்று கேலி செய்தார்.அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம்…  எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்..” என்று  கூறி, முருகன் அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தார் லூசிங்டன்.
வீடு திரும்பிய கலக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் வடிவில். ஆம்… அவர் மனைவி திடீரென கடுமையான வாயிற்று வலியினால்  துடித்தார். சூலை நோய் என்பார்கள். இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும்.
முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்துகொண்டார். உடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு கீழே பணியாற்றிக் கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை கூறி, என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் ? என்று கேட்டார்.
அவர் கூறிய உபாயத்தின்படி, உடனே திருச்செந்தூர் ஓடோடிச் சென்று “முருகப் பெருமானே, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்கமுடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என் சொந்த செலவில்  வாங்கித் தருகிறேன்” என்று மனமுருக வேண்டிக்கொள்ள, எங்கும் நிறைந்திருக்கும் 
பரப்பிரம்மம் முருகப் பெருமானின்  தனிபெருங் கருணையினால் லூசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயிக்கத்தக்க வகையில் உடனடியாக நீங்கியது.
முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்த லூசிங்டன் பிரபு, சொன்னபடியே வெள்ளிப் பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தார். அவற்றில் ‘லூசிங்க்டன் 1803’ என்று முத்திரை பொறித்துள்ளார். அவர் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில்  உள்ளது. அதில் ‘லூசிங்க்டன் 1803’ என்ற முத்திரையை இப்போதும் நீங்கள் காணலாம்.
=============================================================
நினைத்தது நடக்க உதவும் காரியசித்தி மந்திரம்
ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:   திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி  ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம்  ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே  ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம்                           – பிரம்மதேவன் அருளிய சுப்ரமணிய கவசம்
பொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமணியரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமணியரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை,  இம்மையிலேயே அருளும் சுப்ரமணியரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமணியரே நமஸ்காரம்.
ஏதேனும் முக்கிய அலுவலாக செல்லும்போது,  நினைத்த காரியம் எவ்வித தடையுமின்றி நிறைவேற இந்த ஸ்லோகத்தை பல முறை உச்சரிக்கவும்.

No comments:

Post a Comment

கோயில் நிதியில் அறநிலையத் துறை அதிகாரிகள் பயணம், உணவு செலவு- ஹைகோர்ட் தடை

HC stays order on temple funds for officials attending Ayyappa Sangamam   Sep 19, 2025 ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கான கோயில் நித...