Friday, October 4, 2024

மொஹஞ்சதாரோ அகழாய்வு செய்த R.D.பானர்ஜி - இந்து மதமே சிந்து நாகரீகம் ஜான் மார்ஷல்

"ஹரப்பன் மதம் என்பது இன்றும் சிறப்பாக தொடரும் இந்தியாவின் இந்து மதத்திலிருந்து வேறுபடுவதைப் போல இல்லவே இல்லை .... மொஹஞ்சதாரோ & ஹரப்பா ஆகிய இரண்டிலும் தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு இடங்களில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட நாகரிகம் ஒரு ஆரம்ப நாகரிகம் அல்ல, ஆனால் இந்திய மண்ணில் ஏற்கனவே வயதான மற்றும் ஒரே மாதிரியான, பல ஆயிரக்கணக்கான மனித முயற்சிகள் பின்னால் எழுந்தது

“The [Harappan] religion is so characteristically Indian as hardly to be distinguished from still living Hinduism.... One thing that stands out both at Mohenjo-daro and Harappa is that the civilization hitherto revealed at these two places is not an incipient civilization, but one already age-old and stereotyped on Indian soil, with many millennia of human endeavour behind it...” John Marshall, Mohenjo-daro and the Indus Civilization (London, 1931, 3 vols.), vol. I, p. vi-viii.

ஜான் மார்ஷல் இன்றைய "திராவிடர்"களைப் பற்றி என்ன சொன்னார்?
"குட்டையாக இருப்பார்கள். நிறம் மிகவும் கறுப்பு, ஏறத்தாழ கறுப்பர்களைப் போன்ற கறுப்பு. மயிர் அதிகம். சமயங்களில் சுருட்டை. கறுப்புக் கணகள். நீளமான முகம். சப்பை மூக்கு. இவர்களோடு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த திராவிட இனத்தை ஒப்பிடுவது அபத்தம்."
இது அப்பட்டமான இனவெறிப் பதிவீடு.
மார்ஷல் அன்றைய ஆங்கிலேயரைப் போலப் பேசியிருக்கிறார். ஆனால் திராவிடக் கும்பலுக்கு ஆங்கிலேயர் என்ன சொன்னாலும் அது வள்ளுவர் சொன்னது போல.






சரி திராவிட நிறம் எது?
பெரியாருக்குப் பொன்னிற மேனி என்று பேச்சிற்குப் பேச்சு புகழ்ந்து தீர்ப்பது திராவிடப் பேச்சாளிகள்தாம். குறிப்பாக வீரமணி. "தந்தை பெரியார் பொன்னிற மேனியில் வெண்தாடி அசைந்தாடுகிறது" என்று அவர் பேசியிருக்கிறார்.
எனவே ஒன்று பெரியார் திராவிட இனத்தவர் அல்லர். அல்லது மார்ஷல் சொன்னபடி இன்றைய திராவிடருக்கும் அன்றைய திராவிடருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பெரியார் அன்றைய திராவிட இனத்தின் அடையாளம்.
பெரியாரே தமிழர்கள் நாகரிமற்றவர்கள் என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இது அவர் சொன்னது:
"கணவன் - மனைவி வாழ்க்கை என்பதே பார்ப்பான் வருவதற்கு முன் இங்கு கிடையாது. எந்தச் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் கிடையாது. எவராலும் இதில் இருக்கிறது என்று எடுத்துக் காட்டவும் முடியாது.
"ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கூடி வாழ்ந்தார்களே தவிர, கணவன் - மனைவி என்ற முறையில் அல்ல! இதற்குச் சரியான சான்று கிடையாது! தமிழனுக்குச் சரித்திரமே கிடையாது! நமக்குள்ள இலக்கியங்களெல்லாம் பார்ப்பான் வந்ததற்குப் பிறகு 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தான் தோன்றின. இவைகள் யாவும் பார்ப்பனர்களாலும், அவனது அடிமைகளாலுமே எழுதப்பட்டவை யாகும். "

மார்ஷல் என்ன சொல்கிறார்?
1. ஆரியர் வருகைக்கு முன்னாலேயே சிந்துச் சமவெளியில் ஓர் உயரிய நாகரிகம் இருந்தது.
2. இந்து மதம் அதன் பல அம்சங்களை – வேதங்களில் சொல்லப்படாத அம்சங்களை - தனதாக்கிக் கொண்டது.
3. உயரிய தத்துவச் சிந்தனைகளும் கலாச்சாரமும் ஆரியர் வருகைக்கு முன்னால் இருந்த நாகரிகத்திற்கு இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
4. இன்றைய ஆதி வாசிகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் வாரிசுகள் என்று சொல்வது சரியாக இருக்காது. அவர்கள் அந்நாகரிகத்தின் சில பண்படாத அம்சங்களை கொண்டிருக்கலாம். ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தின் மதம்/கலாச்சாரம் மிகவும் பண்பான பல அம்சங்களைக் கொண்டது. அவர்கள் கட்டிடங்களுக்கும் இவர்கள் குடிசைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
அந்தக் காலமுறைப்படி மண்டையோடுகளை ஆராய்ந்த மார்ஷல் அந்நாகரிகத்தின் மக்கள் பல இனங்களைச் சார்ந்தவர்கள் என்கிறார். முக்கியமான ஒன்றையும் சொல்கிறார். “இப்போது இருக்கும் திராவிடர்கள் கருப்பானவர்கள் குட்டையானவர்கள், சுருட்டை முடி கொண்டவர்கள். இவர்கள் ஐயாயிரம் ஆண்டுகள் முன்னால் இருந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்வது அபத்தமானது.” திராவிடர்கள் வெளியிலிருந்து வந்திருந்தால் அவர்கள் ப்ரோடோ ஆஸ்ட்ரலாயிட் மக்களோடு கலந்திருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிலேயே இருந்திருந்தால், அவர்கள் மூதாதையர்கள் ப்ரோடோ ஆஸ்ட்ரலாயிட் மக்களாக இருந்திருக்க வேண்டும். வெளியிலிருந்து வந்தவர்களோடு கலந்திருக்க வேண்டும் என்கிறார்.
எப்படி இருந்தாலும் மண்டையோடுகளை திராவிட மண்டையோடுகள் என்று சொல்வதோ அல்லது சுமேரியர்களுடையவை என்று சொல்வதோ சரியாக இருக்காது என்கிறார்.

No comments:

Post a Comment