விடுதலை சிறுத்தை கட்சியினர் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக பார்க்கவுன்சில் இணைத் தலைவர் வழக்கறிஞர் கே. பாலு தாக்கல் செய்த அவசர (WP Crl No.1146/25)வழக்கில், நடவடிக்கை கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதியரசர் சதீஷ் குமார், தாக்குதல் நடத்தப்பட்ட முழுச் சம்பவமும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.. தாக்குதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பே நடந்திருந்தும், குற்றவாளிகள் பார் கவுன்சில் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞரை கடுமையாகத் தாக்கியிருந்தும், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததைத் தவிர காவல்துறை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏன் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. யாரை திருப்தி செய்ய காவல் துறை இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை (Status Report) தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை (CCTV Footage) காவல் துறை உடனடியாக கைப்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்
இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அரசியல் கட்சியின் தலைவர், வன்முறையைத் தூண்டுவதற்குப் பதிலாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி அந்தத் தவறான நபர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டாமா? என்று நீதிபதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment