அரசுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் திமுக தொடர்ந்து செயல்படுவதும், சேனலை முடக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது. புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திரத்தின் மீதான பாசிச நடவடிக்கையாகும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் அடிப்படை கடமையாகும். அதை முடக்க நினைத்தால், அது மக்கள் மன்றத்தில் நிச்சயம் எதிரொலிக்கும்.
அரசு கேபிள் டிவியில் இருந்து புதிய தலைமுறை சேனலை நீக்கியதை தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
புதிய தலைமுறை முடக்கப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனங்கள்.
இப்படியெல்லாம் நடந்தாலும் தமிழ் ஊடகங்கள் ஒருநாளும் திருந்தப் போவதில்லை என்றாலும், இந்த முடக்கம் அநியாயமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஜெயலலிதா ஆட்சியில் இப்படி எதாவது நடந்தால் வீறுகொண்டு எழுந்து, இதென்ன ஆட்சி என்றெல்லாம் முழக்கமிட்ட ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் வாலைச் சுருட்டி அமர்ந்திருப்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டியது முக்கியமானது.
எழுத்தாளர்களுக்கு, ‘முற்போக்காளர்களுக்கு’ மனிதர்களை விட உயர்ந்த நிலை கொண்டவர்களுக்கு நிச்சயம் இரண்டு கொம்பு இருக்கிறது என்றுதான் நானும் நம்ப விரும்புகிறேன். என்ன பிரச்சினை என்றால், திமுக என்று வரும்போது மியாவ் என்று கத்திவிடுகிறார்கள்.
No comments:
Post a Comment