Friday, October 17, 2025

மாநிலங்களுக்கு இடையே எப்படி நிதி பங்கிடு - ஜிஎஸ்டி அதிகமாக வருகிறது - நிதிச்செயலர் உதயசந்திரன்.IAS

ஜிஎஸ்டி அதிகமாக வருகிறது  - நிதிச்செயலர்  உதயசந்திரன்.IAS  

மாநிலங்களுக்கு இடையே எப்படி நிதி பங்கிடு செய்யப்படுகிறது என்ற அடிப்படை அறிவே இல்லாமல் பொய்ச்செய்தி பரப்பும் ஆட்களுக்கு பதில் ...

ஓரிரு நாட்களாக தமிழகம் இவ்வளவு ஜிஎஸ்டி கட்டுகிறது மத்திய அரசு இவ்வளவு கொடுக்கிறது என்ற ஒரு போலிச் செய்தி வலம் வருகிறது ...

முதலிலே ஜிஎஸ்டி வசூலிலே 50% தானாகவே மாநில அரசுகளுக்கு சென்றுவிடுகிறது.

இந்த 50% தானாகவே என்றால் அது மத்திய அரசுக்கு போவதில்லை ...

நேரடியாகவே மாநில அரசுகளுக்கு போய்விடுகிறது

இது எஸ்ஜிஎஸ்டி எனப்படும் மாநில ஜிஎஸ்டி ...

ஒவ்வொரு ஜிஎஸ்டி உள்ள பில் எடுத்து பார்த்தால் தெரியும் ... 

மிச்சமிருக்கும் 50 % ஜிஎஸ்டி தான் மத்திய அரசுக்கு.

இதிலே தான் மத்திய அரசின் எல்லா செலவுக்கும். 

மத்திய அரசு வசூலிக்கும் நேரடி வரிகளான வருமான வரி உட்பட வரிகளும் மறைமுக வரிகளான ஜிஎஸ்டி உடன்

மத்திய அரசுக்கு வரும் வருமானத்திலே எவ்வளவு மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்பதற்கு 

மத்திய பைனான்ஸ் கமிஷன் அதாவது மத்திய நிதி ஆணையம் இருக்கிறது ...

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த குழு அமைக்கப்படும். 

அரசியலமைப்பு சட்டப்படி

இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சட்ட அதிகாரம் இருக்கும் ஒரு அமைப்பு. 

இந்த ஆணையம் தான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு பணம் தரப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கும் அமைப்பு. 

மத்திய அரசு இஷ்டத்துக்கு எல்லாம் தானாகவே பணத்தை எடுக்கமுடியாது ... செலவழிக்க முடியாது.

அரசு கஜானா என்பது சட்டப்படியாகவே செலவழிக்கப்படும். 

யாரும் பிரதமர் உட்பட சும்மா எடுத்து யாருக்கும் கொடுத்து விட முடியாது. 

இந்த பைனான்ஸ் கமிஷன்தான் எவ்வளவு சதவீத பணம் மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் என சொல்கிறது.

இது மாநிலங்களின் கருத்தை கேட்டு அவர்களின் நிலை, அவர்களின் தேவை போன்றவற்றை கருத்திலே கொண்டு இவ்வளவு சதவீதம் என தீர்மானிக்கப்படுகிறது.

ஏழையாக இருக்கும் மாநிலங்களுக்கு அதிகமும் பணக்கார மாநிலங்களுக்கு குறைவாக எனவும் 

சமத்துவமான சமூகநீதி அந்த ஆணையம் மூலம் கடைபிடிக்கப்படுகிறது.

ஏழைகளுக்கு உதவுவது தானே சமூகநீதி.

அப்படியானால் இதிலே என்ன பிரச்சினை?

இட ஒதுக்கீடுமே இதே முறைதானே?

ஏழைகளுக்கு அதிக வாய்ப்புகள் தரப்படவேண்டும் என்பது? 

சரி வரிகட்டுவோருக்கே அதிக பணம் திருப்பி தரப்படவேண்டும் என்றால்

மாநிலங்களுக்கு உள்ளே மாவட்டங்களுக்கும் இது பொருந்துமா?

ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தான் அதிகமாக வரி கட்டுகின்றன. 

அந்த மாவட்டங்களுக்கு கட்டிய வரியை திருப்பி கொடுத்து அங்கே மட்டும் எல்லாம் வளர்ச்சித் திட்டங்களும் செய்யமுடியுமா? 

இதிலே அடுத்த கேள்வி என்ன?

புள்ளிக் கூட்டணியிலே இருக்கும் மாநில கட்சிகளையும் கான்கிரஸ் கட்சியையும் இப்படி ஒன்றுக்கு ஒத்துக்கொள்ள சொல்லலாமே?

புள்ளி கூட்டணியின் ஒட்டுமொத்த முடிவாக எல்லா மாநிலங்களுக்கும் அவர்கள் கட்டிய வரியின் அடிப்படையிலேயே மத்திய அரசிலே இருந்து நிதி ஒதுக்கப்படும் என தீர்மானம் போடலாமே? 

அப்படியானால் மத்திய அரசு இப்படித்தான் நிதி ஒதுக்குமா என்றால்

அது மத்திய அரசு செய்வதில்லை

மத்திய நிதி ஆணையம் செய்வது.

மாநில அரசுகள் அந்த நிதி ஆணையத்திடம் போய் எங்களுக்கு இவ்வளவு ஒதுக்குங்கள் என கோரிக்கை வைக்கலாம்.

அப்படி செய்யாவிடில் உச்சநீதிமன்றத்திலே வழக்கு போடலாம். 

இப்படி எல்லாம் வாய்ப்பு இருக்கும்போது இதை செய்யாமல் பொய் செய்தி பரப்புவது ஏன்? 

இது இந்த விளையாட்டு இந்தியா திட்டத்தின் கீழ் பரப்பிய பொய்ச் செய்தி போலத்தான ?

விளையாட்டு இந்தியா திட்டத்தின் கீழே நிதி என்ன திட்டத்திற்கு எவ்வளவு திட்டத்திற்கு கேட்கிறோமோ அந்தளவுக்கு ஒதுக்கப்படும். 

குஜராத் அரசு ஒரு ஓட்டப்பந்தய ஸ்டேடியம் கட்ட நிதி கேட்டது

தமிழக அரசு ஒரு சிறிய நீச்சல் குளம் கட்ட நிதி கேட்டது

இரண்டுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. 

அவ்வளவுதான்.

இங்கேயும் ஏதேனும் ஒரு மாவட்டத்திலே நல்ல ஸ்டேடியம் கட்ட நிதி கேட்டிருந்தால் கிடைத்திருக்கும். 

அதை விடுத்து பொய் செய்தி பரப்பிக்கொண்டிருப்பது போல

மத்திய நிதி ஆணையத்திடம் போய் பேசுவதை விடுத்து

இங்கே உக்காந்து பொய் செய்தி பரப்பி என்ன பலன்?



No comments:

Post a Comment

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிவகங்கை முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு அளித்தவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சொல்லி கடிதம்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரேஷன் கடை கேட்டு மனு அளித்தவருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத சொல்லி கடிதம்!     17 Oct, 2025  சிவகங்கை:  சிவகங்...