Wednesday, January 7, 2026

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் அநியாயங்கள்: தமிழர்- பக்தர்கள் வேதனை

 ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் அராஜகம்: தமிழர்- பக்தர்கள் வேதனை  


தாயார் ஆண்டாள் திருக்கோவிலில் நடக்கும் அநியாயங்கள்- மெளனம் காக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள்
தாயார் ஆண்டாள் சன்னதியில் உள்ள திருமடப்பள்ளியில் அங்கு தாயாருக்கும், பெருமாளுக்கும் தளிகை மற்றும் திருமஞ்சனம், தீர்த்தம் கொடுக்க எடுக்கப்படும் கிணற்றில் இரண்டு நாட்களுக்கு முன் நாய் விழுந்து இறந்து விட்டது
நாய் எப்படி அங்கு வந்தது, எப்படி விழுந்தது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நாயும் ஒரு உயிர் தான், அது திருமடப்பள்ளியின்‌ கிணற்றில் விழுந்து இறந்துள்ளது, அந்த நாயின் சடலத்தை வெளியே எடுத்தாலும் அதை சரிசெய்ய புனித சடங்குகள் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை முழுவதும் வெளியேற்றி சுத்தப்படுத்தினார்களா‌ என்றும் தெரியவில்லை
இது ஒரு பக்கம் இருந்தாலும் தாயார்‌ ஆண்டாள் சன்னதிக்கு முக்கிய சாலையிலிருந்து உள்ளே நுழையும் இடத்தில் ஆர்ச் கட்ட தனியார் ஒருவர் முன் வந்து அந்த இடத்திற்கு பூமி பூஜை போட்டு மூன்று மாதங்களாகி விட்டது
அப்பொழுதெல்லாம் அந்த பணியை ஆரம்பிக்காமல் தாயார் எண்ணெய் காப்பு உற்சவம் தொடங்கும் நாளில் அந்த இடத்தையே தோண்டி போட்டு பணி ஆரம்பித்துள்ளனர்
தாயார் புறப்பாடாகி மாட வீதி வழியாக திருமுக்குளம் சென்றாலும் அங்கே எண்ணெய் காப்பு கண்டுருளி இந்த சாலையில் தான் வர‌ வேண்டும்
இத்தனை நாட்கள் சும்மாயிருந்து விட்டு தாயாரின் மிக முக்கிய‌உற்சவமான எண்ணெய் காப்பு உற்சவத்தில் இது போல தெருவை தோண்டி போட்டிருப்பது அபச குணமாகவே பக்தர்கள் கருதுகின்றனர்
உபயதாரரிடம் கூறி தை - 3 ம் தேதிக்கு மேல் பணி செய்யுங்கள் என சொன்னால் நிச்சயம் உபயதாரரர் செய்திருப்பார், ஆனால் இதையெல்லாம் அவசர கதியிலே செய்ய வேண்டிய அவசியம் என்ன என பக்தர்கள் மிகுந்த வருத்தப்படுகின்றனர்
இதை திருக்கோவிலின் செயல் அலுவலர் கவனத்தில் எடுத்துக் கொள்ளாது வருத்தமளிக்கிறது, இல்லையென்றால் அவரிடம் பொய்யான தகவலை யாராவது கூறுகின்றார்களா என்றும் தெரியவில்லை
நாய் திருமடப் பள்ளிக்குள் நுழைந்து கிணற்றில் விழுந்து இறந்த விவகாரத்திலும், எண்ணெம்காப்பு உற்சவம் ஆரம்பிக்கும் நேரத்தில் சாலையை தோண்டி போட்டு தாயார் புறப்பாட்டை வேறு சாலையிலே மாற்றி விட்டதை செயல் அலுவலரும், உதவி ஆணையர், மற்றும் இணை ஆணையும் விசாரித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் (திருக்கோவில் அர்ச்சக் புரோகித்) பேரமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
பாலு சரவணகார்த்திக் -விசுவ ஹிந்து பரிஷத்

No comments:

Post a Comment

அமெரிக்காவின் ரகசிய மறைமுக போர்களால் மோசடி ஆட்சி மாற்றங்கள் -பாஸ்டன் கல்லூரி அரசியல் பேராசிரியர்

மறைமுக ஆட்சி மாற்றம்: அமெரிக்காவின் ரகசிய குளிர் யுத்தம் – லிண்ட்சே ஏ. ஓ'ரூர்க்  "Covert Regime Change: America's Secret Cold W...