Thursday, January 8, 2026

அன்னிய மத அடிமை திராவிஷ(ட) காலி கும்பல் அடுத்த முயற்சி- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரால் வெறுப்பு -பிளவு வாதம்

அன்னிய மத அடிமை திராவிஷ காலி கும்பல் அடுத்த முயற்சி- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரால் வெறுப்பு பிளவு வாதம்

ஈவெராமசாமியார் வெள்ளைக்காரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கைதில் இருந்து தப்பியதைப் பற்றி ஈவெரா வரியில்
All speeches of  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் are by Guruji. Amaruvi Devanathan

'தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும், தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக் கூடிய போராட்டங்களையும், பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்று சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
'ரோமாபுரி ராணி' என்கிற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதாரைக் காப்பாற்றுகிற யோக்கியதை? எத்தனை பள்ளிக்கூட பையனைப் பாழாக்கி இருக்கிறாய் காதல் கதை எழுதி?
ரோமாபுரி ராணி கதை போதாது என்று 'தங்கையின் காதல்' என்ற கதை எழுதி இருக்கிறாய்.
தங்கையைக் கண்டு காதல் கொள்கிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய். அடுத்து, மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியது தானே, வேறு என்ன? இதுவா தமிழ் நாகரீகம் ?
சின்ன பள்ளிக் கூடப் பையன்களைப் பாழாக்கி, நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டுபோகக்கூடிய இத்தகைய கட்சிகளை நீங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.'
21-02-1957 காஞ்சீபுரத்தில், அண்ணாத்துரை முதலியார் மற்றும் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் பசும்பொன் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.

'இந்த நாட்டில் திராவிடர் கழகமு, திராவிட முன்னேற்றக் கழகமும் வகுப்புவாதக் கட்சிகளாக இயங்கி வருகின்றன. இந்தக் கட்சிகளில் தலைவர்கள் துரோகிகளாக, மக்களை ஏமாற்றுகிறவர்களாக நடந்துகொண்டு வருகிறார்கள். தமிழ் நாட்டில் பல இடங்களில், 'ஜின்னா பார்க்', 'ராபின்சன் பார்க்' என்ற பெயர்கள் இருக்கின்றன. இந்தப் பெயர்களை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் எதிர்ப்பதில்லை.
ஆனால், 'திலகர் பார்க்' என்று இருந்தால் மாத்திரம் அதை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு 'டால்மியாபுரம்' என்ற பெயரை மாற்றி, 'கல்லக்குடி' என்ற பெயரை ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு வைக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார்கள்.
வட நாட்டுக் காரர்களின் ஆதிக்கத்தை இங்கே தடுப்பதற்கு அப்படிச் செய்வதாகச் சொன்னார்கள். ஆனால், மதுரைக்கு அருகில் 'ஹார்விபட்டி' என்ற பெயருள்ள இடத்தின் பெயரை மாற்றி அமைக்க அவர்கள் முன்வரவில்லை. இது வெள்ளைக்காரர்களின் ஆதிகக்த்தைக் குறிக்கவில்லையா?'
25-02-1957 சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.

'இன்றைக்குத் திராவிடர் கழகம் நாட்டில் நாஸ்திகத்தைத் தீவிரமாகப் பரப்பி வருகிறது. திராவிடர் கழகத்தினர் இந்து மதத்தை மாத்திரம் எதிர்க்கின்றனர். மற்ற மதங்களை அவர்கள் எதிர்ப்பதில்லை. குறை கூறுவதில்லை. காமராஜர் திராவிடர் கழகத்தின் மேல் நடவடிக்கை ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.
காந்தியார் 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்று பாடியிருப்பதற்கு விரோதமாக, ராமனைக் குடிகாரனாகவும், சீதையை விபச்சாரியாகவும் நடித்துக் காட்டப்படும் 'கீமாயணம்' என்ற நாடகத்திற்கு காமராஜர் போலீஸ் பந்தோபஸ்து கொடுத்திருக்கிறார். திராவிடர் கழகத்தினர் பிள்ளையாரை உடைத்திருக்கிறார்கள். அக்கிரமம் நாட்டில் மலிந்து போய்விட்டது.
அடியேனுடைய முயற்சியால்தான் ராமர் படத்திற்குத் தீ வைப்பேனென்ற திராவிடக் கழகத்தினர் கிளர்ச்சி செய்த காலத்தில், அதைத் தடுக்க இந்த சர்க்கார் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அடியேன் ஒரு குடுகுடுப் போராட்டத்தை அதற்காக நடத்த வேண்டியதாக இருக்குமென்று பேசினேன்... சி.ஐ.டி. போலீஸ்காரர்கள் 'அது என்ன போராட்டம்?' என்று சசிவர்ணம் வீட்டில் விசாரித்துள்ளனர்.
அடியேன் மதுரையில் கூட்டம் போட்டு, அந்தப் போராட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசியிருக்கிறேன். அதற்காக ஒரு பெரிய போலீஸ் படை தேவையாக இருக்கலாமென்று சொன்னேன். அங்குள்ள அதிகாரிகளுக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. உடனே சர்க்காருடன் டிரங்காலில் பேசினார்கள். மத்திய சர்க்காரிடமும் பேசினார்கள். அதன் மேல் தான் ராமர் பட எதிர்ப்புக் கிளர்ச்சியைத் தடுக்க இந்த சர்க்கார் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
முன் ஏற்பாடாக, திராவிட கழகத் தலைவர்களைச் சிறைச்சாலையில் வைத்திருக்கிறார்கள். பிறகு மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள்.'
25-02-1957 சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.

தேர்தல் செலவுகளுக்காகக் காமராஜர் கள்ள நோட்டு அடித்ததாகக் குற்றச்சாட்டு. ( இதற்கான ஆதாரங்கள் இதுவரை என் கண்ணில் படவில்லை. )
'இன்றைக்கு இருக்கிற நிலவரம். ஒரு மாகாணத் தலைவன் கள்ள நோட்டு அடிப்பதிலே ஈடுப்பட்டிருக்கிறான். காமராசர் கள்ள நோட்டுத் தயார் செய்வதில் ஈடுபட்டிருக்கிறார். நூறு ரூபாய் நோட்டுகள்.
இதை உங்களிடம் மட்டும் சொல்லவில்லை. சென்னை கடற்கரையில், ஒரு லட்சம் மக்கள் மத்தியில், போலீஸ் ஐ.ஜி. என் பிரசங்கத்தை ஒயர்லெஸ்ஸில் கேட்கிற சமயத்திலே சொன்னேன். ஏதோ சொல்லிவிட்டு ஓடுவதற்காகச் சொல்லவில்லை.
I know the implications of law. I am accusing the Police Minister and I charge the Chief Minister of counterfeiting..If you do not charge the Chief Minister, charge me for such serious allegations. I will produce evidence in a court of law in defence.
இதைக் கேட்ட் பிறகும் சும்மா இருப்பது ஒரு மானமுள்ள சர்க்கார் செயலா? நான் ஒரு சாதாரண பட்டிக்காட்டான் இல்லை. விவரம் இல்லாமல் பேசுபவன் இல்லை. ஸ்டெண்டாகப் பேசிவிட்டுப் போகிறவன் இல்லை. ஒரு பிரதம மந்திரி மீது ( அப்போது முதல்வரைப் பிரதமர் என்று அழைப்பார்கள்) கள்ள நோட்டி அடிப்பதாக ஒரு பெரிய குற்றச்சாட்டை வைக்கிறேன். என் மீது கேஸைப் போட்டால் நோட்டு அடிக்கிற இயந்திரம் இருக்கிற இடங்கள், அதிலே பங்கு கொள்பவர்கள் என்று வெளிப்படுத்துவேன். மிகக் கேவலம். மிகக் கேவலம்.
..இப்படி மானம் கெட்ட முறையிலே காங்கிரஸ் இருந்தது இல்லை. இப்படிக் கேவலமான முறையிலா நாடு போக வேண்டும்?'
01-03-1957 ஶ்ரீவில்லிபுத்தூரில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.


'தெய்வத்தின் கல்யாணச் செயல் ஒரே தடவை தானே நடைபெற்றிருக்க வேண்டும். அதற்கு மேல் வீணாகச் செலவு செய்து வருஷா வருஷம் ஏன் கல்யாணம் நடத்துகிறார்கள் ? வருஷம் ஒரு பெண்டாட்டி கட்டிக்கொள்கிறதா தெய்வம்?' என்று தர்க்கவாதிகள் பேசுகிறார்கள்.
ரொம்பச் சந்தோஷம். அவர்களுடைய வார்த்தையை மெச்சுகிறோம். அறிவில்லா ஆஸ்தீகக் கூட்டத்தை விட, இந்த நாஸ்தீகக் கூட்டத்தை வரவேற்கிறேன்.
இதே நபர்கள் என்ன செய்கிறார்கள் ? தங்களுக்கு ஜெயந்தி விழா நடத்துகிறார்கள். அப்படியானால், வருஷா வருஷம் இந்த நாஸ்தீகர்கள் தாயின் வயிற்றில் பிறக்கிறார்களா? பின் ஏன் நடத்துகிறார்கள்? பிறந்த தினத்தை ஞாபகப்படுத்துகிற முறையில் கொண்டாடுகிறார்கள்.
அதுபோல, ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, தெய்வீகத் திருக்கல்யாணக் கோலத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வருஷா வருஷம் கொண்டாடுகிறார்களே தவிர, வருஷா வருஷம் பெண் கட்டிக்கொள்வது அல்ல. இதைத் தெரிந்துகொள்ள வேண்டும் அவர்கள்.'
21-02-1957 காஞ்சீபுரத்தில் அண்ணாத்துரை மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து, பொதுக்கூட்டத்தில் பசும்பொன் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.

'மற்ற மதத்தவர்கள் பள்ளிகளில் மதத்தைச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று இருக்கிறதா?
முஸ்லீம் பள்ளிகளில் கொரான் சொல்லிக் கொடுக்கிறான். கிருஸ்துவப் பள்ளிக்கூடங்களில் பைபிள் சொல்லிக் கொடுத்த பிறகுதான் பாடங்கள் ஆரம்பமாகும். ஆனால், அரசாங்கம் மதத்தைப் பற்றிச் சொல்லாதே; இது Secular Government என்று (நமக்குச்) சொல்லுகிறது.
நம் நாட்டை இப்படிக் கெடுத்து வருகிறான். மன்னனுக்குத் தர்மமும், நீதியும் இல்லை என்றால் அறம் கிடையாது, அழிந்து போகும் என்று திருவள்ளுவர் சொன்னார். '
29-05-1956 மதுரை மாவட்டம் பெரியகுளம் அர்ச்சகர் மாநாட்டில் பசும்பொன் தேவர் பேசியது.

'நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், பகலிலே பார்க்கிற ஒருவருக்கு நட்சத்திரம் தெரியாது. சூரியன் இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது. இரவிலே சூரியனைப் பார்த்துத் தவறாக சூரியன் இல்லை என்று சொல்வதும், பகலிலே பார்த்து நட்சத்திரம் இல்லை என்று சொல்வதும் எவ்வளவு அவசர புத்தியோ, அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரிலே தெரியாதது அனைத்தும் இல்லை என்று வாதிக்க முன்வருவது..
இன்றைக்கு X-ray என்ற கருவி வந்துள்ளது. உடைந்துபோய் இருக்கிற எலும்புகளையும், ரத்த ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தும் கட்டிகளையும் பார்க்க உதவுகிறது. ..ஆனால் அந்தக் கருவி உடம்புக்குள்ளே இருக்கிற உயிரைப் பார்க்க உபகாரப்பட்டது இல்லை. பார்க்க முடியாது என்பதால் உயில் இல்லை என்று சொல்லுகிற நிலைமைக்கு ஒருவன் வர முடியுமா?
கேவலம் உயிரையே பார்க்க முடியாத நிலைமையில் வாழ்கின்ற மனித ஜன்மம், உயிருக்கு உயிராக, உயிருக்கு அப்பாலாகப் பல கோடி உயிர்களை ஆட்டி வைப்பதற்காக நிற்கின்ற தெய்வீக சக்தியைப் பார்த்தவன் உண்டா? காட்ட முடியுமா? இல்லாத ஒன்றை நம்புவானேன்? என்று பேசுவது அறிவின்பால்பட்டதல்ல.'
10-10-1959 பொள்ளாச்சி ஶ்ரீ குடலுருவி மாரியம்மன் கோவில் நவராத்திரி விழாவில் பசும்பொன் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.


'தீவிரவாதிகள் எல்லாம் நாஸ்திகர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று புகுத்தப்பட்டு இருக்கிறது. இது கம்யூனிஸ்டுகளின் புண்ணியம். அதுவும் தவிர, சரித்திரம் எழுதுகிறவன் என்ற பெயரால் அபத்தங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த நாட்டில் ராமன் தெய்வமல்ல. இராமாயணம் என்பது ஆரியர், திராவிடர் சண்டை என்று முதல் முதல் பேனாப் பிடித்து எழுதிய இந்தியன் ஜவஹர்லால் நேரு. அவர் தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
வெள்ளைக்காரன் எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டு அவர் இந்தப் பாதகத்தைப் புரிந்தார். அதன் பின்னர் அதை எடுத்து வைத்துக் கொண்டு கூத்தாடியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.
நம் அரசியல்வாதிகள், ஜவகர்லால் நேரு இந்த தப்பைச் செய்தது தவறு என்று சொல்லக் கூசி, ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்தார் என்று சொன்னால் நாடு எப்படி உருப்படும் ?
அது தான் இன்றைக்கு கிரகணத்துக்குக் குளிப்பவர்கள் முட்டாள்கள், பசுவதையைத் தடை செய்யச் சொல்பவர்கள் அறிவீனர்கள் என்று சொல்கிற அளவுக்கு பிரதம மந்திரியின் குரல் இருக்கிறது. இது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.
இம்மாதிரி நாஸ்திகத்திற்குப் போவது நல்லதல்ல.
... நமக்கு வேண்டுவது என்ன ? இராமலிங்க சுவாமிகள், சுவாமி விவேகானந்தர், சுவாமி ராம தீர்த்தா, இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரிய அறிவாளிகளுடைய தெய்வீக உள்ளம்.
தேசத்திற்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிற தேசாபிமானிகளுடைய வீரம். இந்த இரண்டும் கலந்து நமக்குத் தேவை.
அதுதான் நமக்கு வாழ்வாகும் என்றால் நாடு உருப்படும். இதைத் தவிர வேறு கதி நமக்கில்லை. அதிலே ரிலிஜன் வேண்டாம், செக்யூலர் லைஃப் நடத்துவோம் என்று சொன்னால் மிகப்பெரிய தவறு'
28-09-1957 மதுரையில் ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய பேருரையில் இருந்து.


'ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதர் கோவிலில் தீ வைத்து, இந்து மதத்தையே அழிக்கத் திட்டம் போட்டிருக்கும் ஒரு நச்சு சக்தியைக் கண்டுபிடித்துத் தண்டிக்காமல், எங்கோ இமயமலை அடிவாரத்தில் வாழும் தலாய் லாமாவுக்குக் காவலாம். புத்த மதம் அழிந்துவிடுமாம்.
இலங்கையில் இருந்து வரும் அகதிகளுக்கு உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை. திபேத்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பாலும், தேனும், பல்லாக்கும், பட்டு மெத்தையும் கொடுக்கிறார்களாம். என்ன விந்தை!
.. இந்திய எல்லைக்குள் அத்துமீறிப் பறந்த பாகிஸ்தான் விமானங்களைச் சும்மா விட்டுவிட்டார்களாம். ஆனால், பாகிஸ்தான் பகுதியில் தவறுதலாகப் போன நம் ஜெட் விமானங்களை, 'வேவு பார்க்க வந்ததாகச் சொல்லி அவர்கள் சுட்டுவிட்டார்கள். இதற்கு என்ன பதில் சொன்னீர்கள்?' என்று கேட்டால், 'கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்' என்று சொல்கிறார்கள். வெட்கம் இல்லை இந்தக் காந்தீயவாதிகளுக்கு.'
25-05-1959 பம்பாய் நிப்போ கார்டனில் 'தேசியமும் தெய்வீகமும்' என்னும் தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.



'சாலை போட்டோம், செப்பனிட்டோம், குளம் வெட்டினோம் என்றெல்லாம் பேசுகிறார்கள்.
சர்க்கார் என்றால் இதெல்லாம் செய்வதில் அதிசயமென்ன? செய்வதற்காகத்தனே சர்க்கார்?
இவர்கள் சொல்வதைப் பார்த்தால், ஏதோ இவர்கள் சொந்தப் பணத்தில் ரோடு போட்டு, கண்மாய் வெட்டி, சம்பளம் வாங்காமல் வேலை செய்வது மாதிரி தெரியும்.
மக்களிடம் வரி வசூலித்து,, அதை நெறியோடு, மக்களுக்கான நல்லவற்றைச் செய்யத்தானே இவர்களுக்கு அதிகாரமும் இதர வசதிகளும்? இவர்கள் இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என்றால், வேறு எதைச் செய்யத்தான் இவர்கள் போனார்கள்?
மக்கள் பணத்தை வாங்கி மக்களுக்குச் செலவிட்டு, சர்க்கார் நடத்துவதில் பிரச்சார அபூர்வத்திற்கு அர்த்தமுண்டா? சொந்தப் பணத்தில், சம்பளமின்றி சேவை செய்தால் அதைப் பிரமாதமாகப் பேசலாம் - அர்த்தமுண்டு.'
14-01-1962 அன்று மதுரை தமுக்கம் திடலில் ராஜாஜியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய் உரையில் இருந்து.

'ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதர் கோவிலில் தீ வைத்து, இந்து மதத்தையே அழிக்கத் திட்டம் போட்டிருக்கும் ஒரு நச்சு சக்தியைக் கண்டுபிடித்துத் தண்டிக்காமல், எங்கோ இமயமலை அடிவாரத்தில் வாழும் தலாய் லாமாவுக்குக் காவலாம். புத்த மதம் அழிந்துவிடுமாம்.
இலங்கையில் இருந்து வரும் அகதிகளுக்கு உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை. திபேத்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பாலும், தேனும், பல்லாக்கும், பட்டு மெத்தையும் கொடுக்கிறார்களாம். என்ன விந்தை!
.. இந்திய எல்லைக்குள் அத்துமீறிப் பறந்த பாகிஸ்தான் விமானங்களைச் சும்மா விட்டுவிட்டார்களாம். ஆனால், பாகிஸ்தான் பகுதியில் தவறுதலாகப் போன நம் ஜெட் விமானங்களை, 'வேவு பார்க்க வந்ததாகச் சொல்லி அவர்கள் சுட்டுவிட்டார்கள். இதற்கு என்ன பதில் சொன்னீர்கள்?' என்று கேட்டால், 'கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்' என்று சொல்கிறார்கள். வெட்கம் இல்லை இந்தக் காந்தீயவாதிகளுக்கு.'
25-05-1959 பம்பாய் நிப்போ கார்டனில் 'தேசியமும் தெய்வீகமும்' என்னும் தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.

 

பீகாரில் மாணவர்கள் தேசியக் கொடிக்குத் தீ வைத்ததற்காக சுட்டுத் தள்ளப்பட்டனர். சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. 'தேசியக் கொடிக்குக் கெடுதல் உண்டு பண்ணுவதை எந்த அரசாங்கமும் அனுமதிக்காது' என்று ஆட்சியாளர்கள் சொன்னார்கள்.
ஆனால், தென்னிந்தியாவில் என்ன நடந்தது? திராவிடக் கழகத் தலைவர் 'தேசியக் கொடியைக் கொளுத்தியே தீருவேன்' என்று ஒரு பெரும் கிளர்ச்சி செய்தார். பின்னர் ஏதோ சில காரணங்களைச் சொல்லி கிளர்ச்சியை வாபஸ் பெற்றுக்கொண்டதாக அந்தத் தலைவர் அறிவித்திருந்தும், சில இடங்களில் திராவிடக் கழகத்தினர் தேசியக் கொடியைக் கொளுத்தியிருக்கின்றனர். இந்த அரசாங்கம் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால், காமராஜர், திராவிடக் கழகத் தலைவர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு, அவருடன் விருந்து சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறார். வேலுர் முனிசிபாலிட்டியில் திராவிடக் கழகத் தலைவர் ராமசாமி நாயக்கருடைய படத்தை காமராஜர் திறந்து வைத்திருக்கிறார்.
ஆனால், மத்திய சர்க்கார் இதைப் பற்றி அவரை ஒன்றுமே கேட்கவில்லை'
25-02-1957 சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.

நில உச்சவரம்பு பற்றி தேவர் ..
'நிலங்களுக்கு உச்சவரம்பை கிராமப் பகுதிகளில் தொடங்குவதற்கு முன், நகர்ப்புறங்களில் அல்லவா தொடங்கி வைக்க வேண்டும்? அதுவும் கனம் பிரதம மந்திரியின் சம்பளத்தில் இருந்தல்லவா ஆரம்பமாக வேண்டும்?
நிலவுடமைக்கு உச்சவரம்பு கட்ட விரும்புகிற பிரதமர், முதலில் தன் சம்பளத்திற்கு உச்ச வரம்பு கட்டிக் கொண்டு, அதற்கடுத்து நகர்ப்புற வருமானங்களுக்கு வரம்பிட்டு, அதன் பிறகு கிராமத்திற்குப் போனால் கடமை எளிதாக நிறைவேறும் என்று கருதுகிறேன்.
நகர்ப்புறங்களில் வாழுகிறவர்கள் இயன்றவரை பணத்தையோ, உடைமைகளையோ, திரட்டலாம், சேமிக்கலாம், எவ்வளவு செல்வத்தோடு சுகிக்கலாம் என்று அனுமதித்துவிட்டு, கிராமப்புறங்களில் வாழுவோர்களின் நிலங்களுக்கு மட்டும் உச்சவரம்பு கட்டப்போனால், உங்கள் திட்டத்திலும் அதைச் செய்யத் தூண்டிய எண்ணத்திலும் சம நிலை இல்லை என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்படும் என்பதோடு, மக்களில் 80 சதவிகிதம் பேரை 20 சதவிகிதம் பேருக்கு அடக்கமாக்குகிறீர்கள் என்று பொருள் படும்.
மேற்கத்தியர் முன்னர் ஆடிப் பார்த்த விளையாட்டை நீங்கள் மறுபடியும் ஆடிப்பார்க்க விரும்புகிறீர்கள் என்பது உறுதியாகிவிடும்'
17-02-1959 தில்லி பாராளுமன்றத்தில் பசும்பொன் தேவர் ஆங்கிலத்தில் பேசியதில் இருந்து.

'ஒரு நாட்டின் பிரதம மந்திரி ஒரு கப்பல் படைத் தலைவனுக்கு வரவேற்பு அளிக்கக் கூடாது. நேரு இப்படிச் செய்தது இந்தியாவின் கௌரவத்தைப் பாதிக்கிறது. இந்த தேசத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதில் எதிர்க்கட்சியில் எங்களுக்குப் பங்கு உண்டு.
ஓர் அரசியல் பிரதம மந்திரி, ஒரு கப்பல் படைத் தலைவனுக்கு இப்படி தலை வணங்கியதாகச் சரித்திரம் இல்லை. இந்தியாவின் பிரதம மந்திரியைப் பற்றிய அக்கறை எங்களுக்கு உண்டு. தனிப்பட்ட முறையில் அவர் எதையும் செய்யலாம். மௌண்ட்பேட்டன் உங்களுக்குச் சினேகமாக இருக்கலாம். வைஸ்ராயாக இருந்தபோது நீங்கள் மரியாதை கொடுக்கலாம். ஆனால், அவர் இப்போது கப்பல் படைத் தலைவன்.
நேரு மௌண்ட்பேட்டனுக்குத் தனிப்பட்ட முறையில் வரவேற்பு கொடுத்திருந்தால் நான் வருத்தப்பட மாட்டேன். இப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டதை எதிர்த்துப் பேசியிருக்கிறார் காமத். அதனாக் காங்கிரஸ் அவர் மிது சீறுகிறது. இவ்வளவு பெரிய அவமானம், சின்னத்தனம் இந்த சர்க்காருக்கு ஏற்பட்டுவிட்டது.'
06-05-1956 மாலை மதுரை திலகர் சதுக்கத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பசும்பொன் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.

'சங்கரன்கோவில் தாலுகாவிலே ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதை நாங்கள் 6 லட்சம் ரூபாயில் மராமத்துப் பண்ணினோம். கால்வாய் வெட்டிவிட்டோம். அதன் மூலம் 100 டன் அரிசி உற்பத்தியாகி இருக்கிறது என்று 5 ஆண்டுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனால், அந்தக் குளம் அப்படியே இருக்கிறது. மராமத்து செய்யவில்லை.
ஆனால், இந்தக் காமராஜர், ராஜாராம் நாயுடு போன்ற லஞ்சப் பேர்வழிகள், கோசல்ராம் என்ற அயோக்கியன் பரம்பரை இதைச் சாதாரணமாகச் செய்துவிட்டார்கள். சட்டசபையிலே இதைப் பற்றிக் கேட்டதற்கு என்ன செய்தார்கள் ?
மானம் கெட்ட சர்க்காராக இருப்பதால் இதற்கு என்ன பதில் சொல்கிறான் என்றால், 'இது அச்சுப் பிழை' என்று சொல்கிறான்.
சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள குளம், அதற்கு மராமத்து பண்ணினதாகச் சொன்னது, அத்ற்கு 6 லட்சம் ஆனதாக எழுதியது, அதன் மூலம் 100 டன் அரிசி விளைந்தது - இது எல்லாமே அச்சுப் பிழையாக இருக்க முடியுமா?
இது எதைக் காட்டுகிறது என்றால், ஆள்கிற இந்த ஆட்சி முழுப்பொய் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது? '
16-09-1957 அன்று வடக்கம்பட்டி பெருமாள் கோவில் வளாகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரையில் இருந்து.

No comments:

Post a Comment

அமெரிக்காவின் ரகசிய மறைமுக போர்களால் மோசடி ஆட்சி மாற்றங்கள் -பாஸ்டன் கல்லூரி அரசியல் பேராசிரியர்

மறைமுக ஆட்சி மாற்றம்: அமெரிக்காவின் ரகசிய குளிர் யுத்தம் – லிண்ட்சே ஏ. ஓ'ரூர்க்  "Covert Regime Change: America's Secret Cold W...