Thursday, January 22, 2026

தொல்காப்பிய பூங்கா வெகு சில பணக்கார கார்ப்பரேட் தனி முதலாளிகள் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா?

 தொல்காப்பிய பூங்கா வெகு சில தனியார் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா?

https://www.facebook.com/photo/?fbid=1477557741043321&set=a.445727120893060
https://x.com/omjasvinMD/status/2014029594484232273/photo/2
மாலை நேரத்தில் ஒரு நாள் வாக்கிங் பாஸ் (Rs.20) புக் செய்வதற்காக தேடிய போது 21 ஏப்ரல் 2026 வரை புக்கிங் முடிவடைந்து விட்டதாக காட்டியது. அதற்கு மேல் உள்ள தேதிகளில் புக் செய்ய அனுமதிக்கவில்லை.
மாதாந்திர வாக்கிங் பாஸ் (Rs.500) புக் செய்வதற்காக தேடிய போது 09 ஏப்ரல் 2026 வரை புக்கிங் முடிவடைந்து விட்டதாக காட்டியது.
மூன்று மாத பாஸ் (Rs.1500) - 09 ஏப்ரல் 2026
ஆறு மாத பாஸ் (Rs.2500) - 09 ஏப்ரல் 2026
ஒரு வருட பாஸ் (Rs.5000) - 09 ஏப்ரல் 2026
காலை நேரத்தில் அனைத்தும் 21 ஏப்ரல் வரை புக் ஆகிவிட்டது. எதிலும் அந்த தேதிக்கு பிறகு புக் செய்ய அனுமதி இல்லை.
சரி தினசரி டூர் போக புக் செய்யலாம் என்று பார்த்தால் மார்ச் மாதம் வரை சனி ஞாயிறு தவிர மற்ற நாட்களுக்கு இடம் இருந்தது.
இந்த மாத ஆரம்பத்தில் ஒரு சனிக்கிழமையில் சென்னை Architects குழுவுடன் அங்கே போயிருந்த போது எடுத்த படம் இது. நாங்கள் 2 மணி நேர டூர் முடித்து விட்டு கிளம்பும் போது வாக்கிங் போகும் ஆட்கள் வர ஆரம்பித்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு பணக்கார கிளப் உள்ளே வரும் ஆட்கள் போல தான் பெரும்பாலான நபர்கள் இருந்தார்கள். விலை உயர்ந்த கார்கள் வந்திருந்தன.
ஆகவே எனது சந்தேகம் வாக்கிங் செல்பவர்கள் இந்த இணையதளம் மூலம் புக் செய்ய வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு வேறு எங்கிருந்தோ பாஸ் கொடுக்கப்படுகிறது என்று தான் நினைக்கிறேன். ஸ்டாலின் அவர்களின் பிரத்யேக புகைப்பட கலைஞர் ஹிந்து பத்திரிக்கை ராம் போன்றவர்கள் எப்படி வாக்கிங் பாஸ் வாங்கினார்கள் என்று விசாரித்தால் உண்மை தெரிய வரலாம்.


No comments:

Post a Comment

சிலப்பதிகாரக் காப்பியம் ""மதுரை தீக்கிரையான நாள்""

மதுரை தீக்கிரையான நாள் ஆடி வெள்ளிக்கிழமை நாளானது,  ஜூலை 23, 756 என்பதும் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு. எல். டி.   சாமிக்கண்ணு ப...