Monday, December 29, 2025

இந்தியா - சீனாவின் 15 ஆசிய-பசிபிக் நாடுகளிடையே RECP RECPயை மீறி எல்லா நாடுகளுடன் ஒப்பந்தம்

RECP (Regional Comprehensive Economic Partnership) என்பது உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் குறிக்கும் ஒரு வழிமுறை. இதில் சீனா ஒரு முக்கிய உறுப்பினராக உள்ளது, இது 15 ஆசிய-பசிபிக் நாடுகளிடையே (ASEAN + சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து) வரிகளைக் குறைத்தல், வர்த்தக விதிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் நோக்கம் பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டிற்கான ஒருங்கிணைந்த தரநிலைகளை உருவாக்குதல், பிராந்திய வர்த்தகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு பயனளிப்பதாகும்.
இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், இந்த RECP அமைப்பு முழுக்க முழுக்க சைனாவின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றுன்னு.
சரி நாம தற்போதைய நிலைமையையும் இதில் இந்தியாவின் வழிமுறையையும் பார்ப்போம்.
சீனப் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பை தவிர்த்து பின்கதவு வழியாக இந்தியாவில் நுழைவதை தவிர்ப்பதற்காக, 2019ம் ஆண்டில் இந்தியா RCEP-யிலிருந்து விலகிச் சென்றது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவைத் தவிர கிட்டத்தட்ட ஒவ்வொரு RCEP உறுப்பினருடனும் இந்தியா வரியில்லா ஒப்பந்தங்களை செய்து கொண்டு விட்டது.
இந்தியா-நியூசிலாந்துடனான வரியில்லா உடன்படிக்கையுடன், இந்தியா 15 RCEP நாடுகளில் 14 உடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது சீனாவை வெளியே நிறுத்தி இன்ன பிற நாடுகளின் சந்தையை எளிதாக இந்தியா அணுகுகிறது.
சீனாவுடன் பொத்தாம் பொதுவான மெகா ஒப்பந்தத்திற்குப் பதிலாக, இந்தியா இருதரப்பு வரியில்லா ஒப்பந்தங்களை இறுக்கமான பாதுகாப்புகளுடன் வடிவமைத்தது இந்தியா.
சீனாவின் இறக்குமதி அபாயத்தை புறந்தள்ளி ஆனால் அதே நேரத்தில் RECPயின் நன்மைகளை வெகு எளிதாக பெற்ற இந்த நிகழ்வு நம்மை ஆள்பவர்கள் எந்த அளவிற்கு பாரதத்தின் நலனை சிந்திக்கிறார்கள் என்பதை நமக்கு தெளிவாக படம் போட்டு காட்டுகிறது.
பொருளாதாரத்தில் பின்கதவு வழியாக இவ்வளவு விஷயங்கள் நடக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும்...

No comments:

Post a Comment