Tuesday, December 30, 2025

இறைவன் கோவில் அருகே அன்னிய கிறிஸ்துவ சர்ச் - கிராமத் தமிழர் எதிர்ப்பு

கோவில்கள் அருகில் சர்ச் கட்ட மூன்று கிராம மக்கள் எதிர்ப்பு


ADDED : டிச 30, 2025   

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே, மருதகத்தில் கோவில்கள் அருகே புதிதாக சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மூன்று கிராம மக்கள், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோனிடம் புகார் தெரிவித்தனர்.
சுவிசேஷக் கதை நாயகர் ஏசு  ஒருவன் தெய்வத்தை ஜெபம் செய்து வழிபட வேண்டும் என்றால் வீட்டுக்குள்ளே தனி அறையில் மட்டுமே செய்ய வேண்டும் சர்ச்சுகளிலோ - தெருக்களிலோ ஜெபம் செயபவர் தண்டனை அனுபவிப்பார்கள் என்று கூறினார் இன்னொன்று யூதர்களுக்காக மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் என்றும் ஒருவன் பைபிளியை மதத்திற்கு மாறினால் இரட்டை நரகம் செல்வான் என்றும் ஏசு கூறியுள்ளார்

முதுகுளத்துார் தாலுகா, அரப்போது ஊராட்சிக்கு உட்பட்ட மருதகம், கீழப்பனையூர், எஸ்.ஆர்.என்.பழங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊர்வலமாக சென்று, கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

பின், அவர்கள் கூறியதாவது:

மருதகம், கீழப்பனையூர், எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமங்களில் ஹிந்து மதத்தை சேர்ந்த 800க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். மருதகத்திலுள்ள வேம்பாருடைய அய்யனார் சுவாமியை குலதெய்வமாக வழிபடுகிறோம்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் உதவியுடன் கோவில்கள் உள்ள பகுதியில் சர்ச், பிரார்த்தனை கூடம் கட்ட, முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரைபடம், கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

அப்பகுதியில் கிறிஸ்துவர்கள் வசிக்காத போது, இச்செயலானது ஹிந்து மக்களிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்பும் நோக்கத்துடன் நடக்கிறது. சர்ச் கட்டினால் மதம் சார்ந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


எனவே, சர்ச் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்க கூடாது. ஆரம்ப கட்ட நிலையிலேயே தடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறினர்.







 
 
 

No comments:

Post a Comment