Shree TV நிறுவனத்தாருக்கும் இராம வெங்கடாத்ரிக்கும் பகிரங்க அழைப்பு ******************************
https://tamil.news18.com/news/tamil-nadu/bjp-kalyanaraman-gets-bail-114957.html
மத நம்பிக்கைகளால் கருத்து சுதந்திரத்திற்கு சவால் - உயர் நீதிமன்றம்
- Published by:Vinothini Aandisamy
- news18
Last Updated:
முகமது நபிகள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் என்பவருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
த நம்பிக்கைகளை தொட்டு கருத்துக்கள் தெரிவிக்கும் போதெல்லாம், கருத்து சுதந்திரம் சவாலை எதிர்கொள்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முகமது நபிகள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் என்பவருக்கு ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது.
கல்யாணராமன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை தெரிவிப்பது வேறு எனவும், மதத்தில் கடவுள்களாக வழிபடக் கூடியவர்களின் வாழ்க்கையை முழுமையாக படித்து, அதை பதிவிடுவது வேறு எனவும், அது அவதூறாகாது எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் Shree TV என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்துபவர்கள் தங்களைச் சார்ந்த இந்து சமூக மக்களின் முன்னேற்றத்திற்குக் குரல் கொடுப்பதைவிட முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்திப் பேசுவதிலும் பிற சமூகங்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை அந்நியப்படுத்துவதிலும் இஸ்லாமிய மார்க்கத்தைக் கொச்சைப்படுத்துவதிலும்
அதிக கவனம் செலுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளின் முழுமையான பின்னனியையும் உண்மைகளையும் அறியாமல் அவற்றைப் பூதாகரமாக்கி மக்களிடையே மதவெறியையும் வெறுப்பையும் வளர்க்கும் வகையில் செயல்படுவது எந்த வகையில் நியாயமான ஊடகப் பணியாகும் ?
முஸ்லிம் சமூகத்தில் தவறுகள் நடந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை
ஒரு தவறு நடந்திருக்கும்போது அதைச் சம்பந்தப்பட்ட சமூகத்தினர் மூடி மறைக்கிறார்களா? குற்றவாளிகளுக்குத் துணை நிற்கிறார்களா? சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? என்பன போன்ற உண்மைகளை ஆராய்ந்து விமர்சிப்பது வேறு
ஆனால் என்ன நடந்தது ? அதன் பின்னணி என்ன ? சம்பந்தப்பட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது ? என்பவற்றை அறியாமலேயே ஒரு விவகாரத்தைத் திசைதிருப்பி முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் வகையில் சித்தரிப்பது வேறு
Shree TV-யின் பல நிகழ்ச்சிகளில் இத்தகைய அணுகுமுறையைக் காண முடிகிறது
மதரஸாக்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு
*****************************
சமீபத்தில் JAQH அமைப்புக்கு எதிராக வெளியிடப்பட்ட வீடியோவில் இராம வெங்கடாத்ரி என்பவர்
உலகில் முஸ்லிம்களைத் தவிர வேறு எவரும் வாழத் தகுதியற்றவர்கள் என்ற கருத்து மதரஸாக்களிலும் அரபுப் பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்
இது சாதாரணமான குற்றச்சாட்டு அல்ல
இந்தியாவில் இயங்கும் மதரஸாக்களையும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களையும் ஒட்டுமொத்தமாகச் சந்தேகத்திற்குரியவையாக சித்தரிக்கக்கூடிய மிகக் கடுமையான குற்றச்சாட்டு
இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எந்த மதரஸாவில் எந்தப் பாடநூலில்
எந்தப் பாடத்தில் இவ்வாறு கற்பிக்கப்படுகிறது ? குறிப்பிட்ட ஆதாரங்களை முன்வைக்காமல்
இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் பரப்புவது பொறுப்பான செயலா ?
இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் ஏற்கனவே விளக்கங்களை வெளியிட்டுள்ளனர்
விவாதங்களை நடத்தியுள்ளனர்
சமூக ஊடகங்களில் அவற்றை பார்க்கலாம்
எனவே வழக்கமான மறுப்பு வீடியோக்களை வெளியிட்டு இந்த விவகாரத்தை முடித்துக்கொள்ள நான் விரும்பவில்லை
குற்றச்சாட்டை முன்வைத்தவர்களே நேரடியாக விவாதத்திற்கு வர வேண்டும் என்பதே
எனது விருப்பம்
Shree TV நிறுவனத்திற்கும்
இராம வெங்கடாத்ரிக்கும் நேரடிச் சவால்
Shree TV நிறுவனத்தாருக்கும் அதன் நிகழ்ச்சியில் பங்கேற்று மதரஸாக்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராகப் பாடம் நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டிய
இராம வெங்கடாத்ரிக்கும் நான் தனிப்பட்டு பகிரங்கமாக விவாத அழைப்பு விடுக்கிறேன்
நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றால் அவற்றுக்கான ஆதாரங்களை எடுத்துக்கொண்டு வாருங்கள்
உங்கள் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நாங்கள் கூறுகிறோம் என்றால் அதற்கான விளக்கங்களையும் ஆதாரங்களையும் நான் முன்வைக்கத் தயாராக இருக்கிறேன்
குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்துவிட்டு பதிலளிக்க வேண்டிய நேரத்தில் பின்வாங்காமல் நேருக்கு நேர் விவாதிக்க முன்வாருங்கள்
விவாதம் என்பது கூச்சலிடுவதற்கான மேடை அல்ல ஆதாரங்களையும் உண்மைகளையும் முன்வைத்து மக்களின் முன்னிலையில் ஒரு கருத்தின்
சரி, தவறுகளை ஆராய்வதற்கான வாய்ப்பாகும்
இவ்விவாதத்தை Sreetv யே நேரடி ஒளிபரப்பும் செய்யலாம்
விவாதிக்க வேண்டிய நான்கு தலைப்புகள்
1. காஃபிர் என்ற வார்த்தை முஸ்லிம் அல்லாதவர்களை வெறுத்து ஒதுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தையா ?
2. முஸ்லிம் அல்லாதவர்கள் உலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்று இஸ்லாம் போதிக்கிறதா ?
3. அரபுப் பாடசாலைகளிலும் மதரஸாக்களிலும் இந்தியச் சட்டத்திற்கு எதிராகப் பாடங்கள் நடத்தப்படுகின்றனவா ?
4. இஸ்லாத்தைப் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்யும் Shree TV நிகழ்ச்சிகளில் முன்வைக்கப்பட்ட அனைத்தும் ஆதாரமற்றவையே
இந்த நான்கு தலைப்புகளிலும் திறந்த மனதுடன்
உரிய ஆதாரங்களுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்
இறுதியாக ஒரு கேள்வி
*****************
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் இஸ்லாமிய மார்க்கத்தைக் கொச்சைப்படுத்துவது மட்டுமே உங்கள் நோக்கம் இல்லையென்றால் இந்த விவாத அழைப்பை ஏற்றுக்கொண்டு உண்மைகளை மக்களின் முன்னிலையில் தெளிவுபடுத்த முன்வாருங்கள்
குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு இருக்கும் துணிவு, அவற்றை ஆதாரங்களுடன் விவாதிப்பதற்கும் இருக்க வேண்டும்
Shree TV நிறுவனத்தாரும் இராம வெங்கடாத்ரியும் இந்தப் பகிரங்க அழைப்புக்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள்?
மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்!
தொடர்புக்கு
J. யாஸீன் இம்தாதி
மின்னஞ்சல்: Yaseenibnuzalal@gmail.com
தேதி: 17-10-2026


No comments:
Post a Comment