தமிழகத்தில் அனைத்து முக்கிய கோவில்களில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பு பூஜை - அன்னதானம்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை
"பள்ளிக்குழந்தைகளின் பசிப்பிணி போக்கிய காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் முக்கிய திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்தப்படும்"
இதை செயல்படுத்த அறநிலையத்துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தை (25.08.2026) ஏற்று, அரசு செயலாளர் ஜே.ராஜாராமன் அரசாணை பிறப்பித்துள்ளார்.
அரசாணையில் சொல்லப்பட்டுள்ள 4 அதிரடி கண்டிஷன்கள்:
1. தேதி மாற்றம்: ஜூலை 15-க்கு முன்பே, அதாவது முன்னிட்ட நாளிலேயே விழாவை நடத்த வேண்டும். அது திருக்கோவிலின் வசதிக்கேற்ப இருக்கலாம்.
2. சைவம் மட்டுமே:* அன்னதானத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் அனைத்தும் 100% சைவமாகவும், முழு சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். இதை செயல் அலுவலர்களே உறுதி செய்ய வேண்டும்.
3. அரசுக்கு கூடுதல் செலவு இல்லை: இதற்காக தனியாக நிதி கேட்கக்கூடாது. ஏற்கனவே உள்ள வரவு-செலவு திட்டத்திலேயே, எளிமையான முறையில், ஆடம்பரம் இல்லாமல் நடத்த வேண்டும்.
4. தீவிர கண்காணிப்பு: மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்த விழா சிறப்பாக நடக்கிறதா என நேரடியாக களத்தில் இறங்கி கண்காணிக்க வேண்டும்.
ஏழைகளின் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜருக்கு, கோவில்களில் மரியாதை செய்வது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment