Sunday, September 15, 2024

வள்ளுவர் மனித உயிர் - பிறப்பு கோட்பாடுகள்

வள்ளுவர் மனித உயிர் - பிறப்பு அமைவதைக் கூறுகையில்

புலவி நுணுக்கம் அதிகாரத்தில் தலைவன் தன் காதலிக்கு தன் மீதான அன்பின் ஆழம் காட்டக் கூறியதாக
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். குறள் 1315: புலவி நுணுக்கம்
தலைவன் -இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் எனக் காதலோடு நான் சொன்ன போது, அப்படி என்றால் அடுத்து எழும் மறு பிறவியில் பிரியப் போவதாக எண்ணிக் கண் நிறைய கண்ணீர் கொண்டாள்.

வள்ளுவர் மனிதன் பிறந்து இறந்து மீண்டும் பிறந்த்ய் எனத் தொடரும் இந்த மனித வாழ்க்கையை பிறவி பெருங்கடல் (குறள் - 10) என்பார். தமிழர் மெய்யியல் மரபை ஏறகாத அன்னிய மாதவாத சிந்தனை ஏற்போர் இந்த பிறவி என்பதை ஒருவர் சந்ததிகள் குறிக்கும் என்பர். ஆனால் தெளிவாக திருவள்ளுவர் - மனிதனுடைய இப்பிறப்பினை என்பு தோல் போர்த்திய உடம்பு (குறள் - 80)
சிறுமையுள் நீங்கிய இன் சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் - குறள் 10:8 இனியவைகூறல்.
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையில்லாய இனிய சொற்கள் பேசுபவர்க்கு இப்பிறவியோடு மறுபிறவிக்கும் இன்பம் தரும்.
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் - குறள் 1042 நல்குரவு.
பொருள் இல்லாமை (வறுமை) என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுபிறப்பில் இன்பம் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இபிறப்பிலும் இன்பம் இல்லை.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று. 904: பெண்வழிச்சேறல்.
தன் மனைவிக்குப் பயந்து நடப்பவன் மறு பிறவிக்கன புண்ணியப்ப் பயன் இல்லாதவன் என அவன் செயல் சிறப்பாக அமைவதில்லை என உல்க சான்றோரால் பாராட்டப்படாது.

No comments:

Post a Comment