Friday, September 13, 2024

திமுக அரசு பள்ளிகளில் பிரெஞ்சு மொழி சொல்லி கொடுக்க் ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்க முடிவு 

https://www.hindutamil.in/news/education/1032602-decided-to-teach-french-language-in-chennai-corporation-schools-1.html
https://tamil.news18.com/tamil-nadu/students-of-chennai-municipal-school-will-be-ready-to-speak-french-soon-1576903.html

 சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல்கட்டமாக 50 மாணவ, மாணவியர்களுக்கு பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 139 பள்ளிகள் உட்பட 420 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 1.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதில், 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது.

சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு பள்ளிகளிலும், சுகாதாரமான குடிநீர், கழிப்பறை மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான மேஜைகள் வசதிகள் உள்ளன. மேலும், சிட்டிஸ் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் வாயிலாகவும் பல்வேறு பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை பயிற்றுவிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் மொழியாக பிரெஞ்சு மொழியை பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக Educational Cooperation Attaché for French மற்றும் Alliance Française of Madras ஆகிய அமைப்புகளுடன் முதல் கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ள 50 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு 2 மையங்களில் பிரெஞ்சு மொழி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைக்கும் முன்னுரிமை தொடர்பாகவும் அந்த அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இவை எல்லாம் உறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் இதற்கான வகுப்புகள் தொடங்கி நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 11-ம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்கப்படும்" என்று அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

பிரிட்டனிலிருந்து இந்தியா £500 பில்லியன் (₹53 லட்சம் கோடி) திரும்பப் பெறுகிறது! ஸ்டார்மர் மோடியிடம் மண்டியிட்டு கெஞ்சுகிறார்!

   UK இலிருந்து  இந்தியா  £500 பில்லியன் (₹53 லட்சம் கோடி) திரும்பப் பெறுகிறது! ஸ்டார்மர் மோடியிடம் மண்டியிட்டு கெஞ்சுகிறார்! 🚨 UK பொருளா...