ஊரக வேலை வாய்ப்பு புதிய மசோதா ! ( The Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB—G RAM G) Bill, 2025. )
முன்னர் காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, 2005 (MGNREGA) மாற்றி தற்போது உள்ள NDA அரசு திருத்தங்களுடன் புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது.
சென்ற பத்தாண்டுகளாக தமிழகத்தின் பல ஊர்கள் , சிற்றூர்கள் மற்றும் கிராமங்கள் முதலியனவற்றுக்கு சிவாலய வழிபாட்டுக்கு பல திருகோயில்கள் சென்று சுற்றினோம் . அந்தந்த ஊர்களில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் கிராமப் பூசாரிகள் மற்றும் சிவலாய சிவாசாரியார்கள் இவர்களுடன் அந்தந்த ஊர் நிலவரங்கள் , அரசியல் என்று உரையாடுவோம் .
அந்த சமயத்தில் இந்த MGNREGA குறித்தும் பேசியுள்ளோம் . அவர்கள் பலர் கூறிய கருத்துக்கள் என்னவெனில் :
- “ முன்னர் கிராமங்களில் பொது மராமத்து வேலைகளை ( பொதுக் கிணறு தோண்டுவது , ஊர் நீர்நிலைகளை தூர் வாருவது , ஊர்க் கட்டிடங்கள் ( பள்ளிகள் , அரசுக் கட்டிடங்கள் ) – ‘ அழிஞ்சி வேலை ‘ என்று ஒருவர் சொன்னார் -- ஊர்கூடி வேலை செய்வோம் . சம்பளம் ஒன்றும் இருக்காது, ஆயினும் ஊர் பொது நன்மைக்காக உடல் உடலுழைப்பு தருவது என்று இருக்கும் ”
- MGNREGA வந்த பிறகு இது மாறியது . பணம் வந்தது – வேலை செய்தலும் செய்யாவிட்டாலும் . ஊழல் ராஜ்யம் தொடங்கியது ..
- MGNREGA வந்த பிறகு , விவசாயக் கூலி வேலைக்கு ஆட்கள் வருவது நின்றன . பெரிய விவாசாயிகள் தவிர மற்றவர்களுக்கு விவசாயம் என்பது நஷ்டம்தான் . MGNREGA வில் சும்மா உட்கார்து இருந்தாலே சம்பளம் என்ற போது , உழைக்க யார் வருவார்கள் . விவசாயம் படுத்து விட்டது “
தற்போது MGNREGA பெயர் மாற்றம் செய்து , VB—G RAM G என்று புதிய பெயரில் இந்த திட்டம் வர இருக்கின்றது.
MGNREGA திட்டமே வேளாண்மையை அழிக்கும் ஒரு wasteful expenditure , அதில் ‘ மஹாத்மா ‘ காந்தி பெயர் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ? நம் போன்ற வரி செலுத்தும் அன்பர்களின் ( விவாசய வேலைகளுக்கு ஒரு வரியும் விதிப்பது இல்லை ) நியாமான கோரிக்கை ‘ உடனே இந்த MGNREGA / VB—G RAM G நிறுத்துங்கள் என்பதே ! “
‘ வேளாண்மை வேலைகள் அதிகம் இருக்கும் காலகட்டத்தில் சுமார் 60 நாட்கள் இந்த திட்டத்தை நிறுத்த வகை செய்யும் விதி VB—G RAM G மசோதாவில் உள்ளது ‘ என்றாலும் , ஆயினும் இது ஒரு hoax தான் இருக்கும் என நாம் நம்பலாம் !
இந்த திட்டம் ஒரு வாக்கு வங்கித் திட்டம் என்பதால் பாஜக கட்சி உட்பட இதனை நிறுத்த மாட்டார்கள் !


No comments:
Post a Comment