Tuesday, December 16, 2025

திமுக உதயநிதி மாநாடு - மணல் திருடு - விவசாயிகள் கைது


திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வந்த வாகனம் மோதி ஒருவர் பலியான நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சாலை மறியல் செய்தவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை.
இளைஞரணி மாநாடு நடத்த சட்டவிரோதமாக மண் அள்ளியிருக்கிறார்கள் என்று உழவர் உரிமை இயக்கம் புகாரளித்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உழவர் உரிமை இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடந்திருக்கிறது. இதை தொடர்ந்துசமூக செயல்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யாமல், அதற்காக போராடியவர்களை கைது செய்திருக்கிறது.
சட்டவிரோதமாக மண் அள்ளியவர்கள் மீது புகார் கொடுத்தவர்களையே கைது செய்து கடமை மாற்றியிருக்கிறது காவல்துறை.
இது தான் பாசிசம் என்பர்‌ அறம் வழியினர்.






No comments:

Post a Comment

தேர்தல் கமிஷன் - ஆணையர்களை வளைத்துப் போட்ட காங்கிரஸ் வழி

நேரு முதல் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார், பின்னர் அவரை பர்த்வான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தார். https...