லாயருக்கு ரொம்ப செலவழிக்கிறீங்க! நபிகள் வாக்கியத்தை கூறி! தமிழக அரசிடம் நீதிபதி சுவாமிநாதன் கேள்வி
- சென்னை: தமிழ்நாடு அரசு மூலம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் அதிக கட்டணம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தீவிர கவலை தெரிவித்து உள்ளனர். சட்டக் கட்டணங்களுக்கு மக்கள் வரிப்பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை ஆராய நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
- நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பி உள்ளார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மூத்த வழக்குரைஞர்கள், சட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மிக அதிக கட்டணங்கள் சங்கடமான நிலையை ஏற்படுத்துவதாகவும்.. எப்படி இவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தலைமை வழக்கறிஞர்.. தேவையற்றவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
- அரசு வழக்கறிஞர்களுக்கு கட்டணம்
- உதாரணமாக, நிதி நெருக்கடியில் தவிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ஓய்வூதியதாரர்களுக்குச் சம்பளம் செலுத்தவில்லை. ஆனால் ஒரு மூத்த வழக்கறிஞருக்கு ஒரே ஒரு நீதிமன்ற ஆஜருக்காக ₹4 லட்சம் செலுத்தியுள்ளது. இது மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு.. ஒரு பக்கம் ஓய்வூதியம் தர பணம் இல்லை.. ஆனால் இன்னொரு பக்கம் அதிக தொகையை வழக்கறிஞருக்கு கட்டணமாக கொடுக்கிறார்கள்.. என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.
- அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது நிறுவனங்கள் நிதியை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி கூறினார். தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்குப் பணம் இல்லை எனக் கூறிக்கொண்டு ... இன்னொரு பக்கம் அமைப்புகள் சில வழக்கறிஞர்கள் அதிக கட்டணம் செலுத்தக்கூடாது என்றார்.
- முகமது நபி - சுவாமிநாதன்
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நிபுணர்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்துதலின் முக்கியத்துவத்தை ஜி.ஆர். சுவாமிநாதன் வலியுறுத்தினார். 'ஒரு தொழிலாளியின் வியர்வை உலருமுன் கூலியை கொடுங்கள்' என்ற நபிகள் நாயகம் கூற்றை மேற்கோள் காட்டினார். இக்கொள்கை வழக்குரைஞர்களுக்கும் பொருந்தும் என்றார்.
- சிறிய வழக்குகளிலும் கூடுதல் தலைமை வழக்குரைஞர்களைப் பயன்படுத்துவதை நீதிமன்றம் விமர்சித்தது. பல எளிய வழக்குகளை இளநிலை அரசு வழக்குரைஞர்களே திறம்பட கையாள முடியும். அதிக சட்ட அதிகாரிகளை நியமிப்பது தேவையற்ற செலவுகளை அதிகரிக்கும் என நீதிபதி குறிப்பிட்டார்.
- என்ன வழக்கு?
- மதுரை மாநகராட்சிக்கு எதிராக வழக்கறிஞர் பி. திருமலை தொடர்ந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் இந்த கேள்விகளை எழுப்பினார். 14 ஆண்டுகள் நிலையான வழக்கறிஞராக பணியாற்றிய தமக்கு, மாநகராட்சி முறையான கட்டணங்களைச் செலுத்தவில்லை என்றார். தனக்கு ₹13 லட்சத்திற்கும் மேல் பாக்கி இருப்பதாகவும் அவர் கோரினார்.
- நீதிமன்றம் இந்த வழக்கில் கடுமையாகப் பேசியபோதிலும், முறைப்படியான தணிக்கைக்கு உத்தரவிடவில்லை. மூத்த வழக்குரைஞர்களின் கட்டண நிர்ணயத்தில் பொதுவாக நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை. ஆனாலும், நல்லாட்சிக்கு மக்கள் நிதியை கவனமாகப் பயன்படுத்துவது அவசியம்.. வழக்கறிஞர்களுக்கு அதிக கட்டணம் செலுத்துவதில் கவனம் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
- மாநகராட்சி வாதம்
- இந்த வழக்கில்.. மனுதாரர், அதாவது வழக்கறிஞர் திருமலை நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்களைச் சமர்ப்பிக்காததால் கட்டணம் தாமதமானது என மாநகராட்சி கூறியது. எனினும், வழக்கறிஞர் திருமலை கையாண்ட வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, அவர் கோரிய தொகை மிகக் குறைவானதே என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
- வழக்குரைஞருக்குத் தேவையான தீர்ப்பு நகல்களைப் பெற சட்டப் பணிகள் ஆணையம் உதவ வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநகராட்சி நிலுவைக் கட்டணங்களை இரு மாதங்களுக்குள் செலுத்தப் உத்தரவிடப்பட்டது. வழக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடரப்பட்டதால், கட்டணங்களுக்கு வட்டி செலுத்தப்படாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
https://tamil.oneindia.com/news/chennai/you-are-spending-a-lot-of-money-for-few-of-counsels-and-lawyers-says-justice-gr-swaminathan-759510.html

No comments:
Post a Comment