திருப்பரங்குன்றத்தின்இறைவன் தீபத் தூண் வேறு- சர்வே அளவை குறியீடு தனி - Bagavath Pratheep
தீபத்தூணை சர்வே கல் என பரப்பபடும் போலியான தகவல்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண்கள் பிரிட்டிஷ் காலத்தில் நடப்பட்ட சர்வே கற்கள். அதிகாரபூர்வ ஆவணம் சிக்கியது என @angry_birdu எனும் X வலைதள கணக்கிலிருந்து பதிவொன்று பதியப் பட்டிருந்தது.நமது Facts & Perspectives சார்பாக இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, இந்த புகைப்படத்தில் இருப்பது தான் சிக்கந்தர் தர்கா அருகே இருக்கும் சர்வே கல்.

அந்த நபர் பதிந்திருக்கும் தரவுகளின்படி “மதுரை–சேவல்பட்டி சாலையில் உள்ள, 550–600 அடி உயரமுள்ள ஒரு தனித்த மலை இருக்கிறது. மதுரையிலிருந்து 4.5 மைலும் திருமங்கலத்திலிருந்து 6.5 மைலும் தொலைவில், மதுரை தாலுகாவில் உள்ளது. மலைச்சிகரத்தின் வடமேற்கு பக்கத்தில், மேலிருக்கும் பள்ளிவாசலுக்கு வடவடமேற்கே சுமார் 5 யார்டு தூரத்தில் ஒரு வட்டக் குறியும் பொறிப்பும் அங்கே 1871-ல் காணப்படுகின்றன.” என்று உள்ளது.
நாம் குடுத்திருக்கும் புகைப்படத்தில் ஒரு வட்டமானது சர்வே கல்லில் உள்ளது. ஆனால், அது அவர் குறிப்பிட்டபடி தீபத்தூண் இல்லை அது சர்வே கல் மட்டுமே.
சிக்கந்தர் தர்காவுக்கு 50 மீட்டர் தொலைவில் இருக்கும் தீபத் தூணை சர்வே கல் என்று சமூகவலைதளங்களில் திமுகவினர் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். அதில் இவரும் ஒருவர்.
தரவுகளைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி உண்மையை திரித்துக் கூறியிருக்கும் இந்தப் பதிவானது வெறும் போலியான தகவல் மட்டுமே.
தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.



No comments:
Post a Comment